Published:Updated:

பங்கின் விலைப்போக்கை அறிந்து லாபம் ஈட்டும் கலை..!

பங்கு விலை
பிரீமியம் ஸ்டோரி
பங்கு விலை

பங்கு விலை

பங்கின் விலைப்போக்கை அறிந்து லாபம் ஈட்டும் கலை..!

பங்கு விலை

Published:Updated:
பங்கு விலை
பிரீமியம் ஸ்டோரி
பங்கு விலை

பங்குச் சந்தை முதலீட்டாளர் கள் ஒரு பங்கில் எப்போது முதலீடு செய்ய வேண்டும், எப்போது செய்யக் கூடாது என்பது முக்கியமான விஷயம். தவறான நேரத்தில் முதலீடு செய்துவிட்டு, ‘நான் முதலீடு செய்தவுடன் சந்தை இறங்கி, நஷ்டம் வந்துவிட்டதே’ என்று புலம்பி எந்த பிரயோஜனமும் இல்லை. இதற்கு சந்தைப் புள்ளிகள் அல்லது ஒரு பங்கின் போக்கு நிலை (Trend) பற்றி ஓரளவுக்குத் தெளிவாகத் தெரிந்து வைத்திருப்பது அவசியம். இந்தப் ‘போக்கு நிலை’ தொடர்பான விஷயங்களை மட்டும் சற்று விளக்கமாக இனி பார்ப்போம்.

ரமேஷ் கோவிந்தராஜன் 
ஈக்விட்டி அனலிஸ்ட், 
https://www.wayofmarket.com/
ரமேஷ் கோவிந்தராஜன் ஈக்விட்டி அனலிஸ்ட், https://www.wayofmarket.com/

பொதுவாக, சந்தையின் குறியீட்டு புள்ளிகள் அல்லது நிறுவனப் பங்கின் விலை எந்தத் திசையில் செல்கிறது என்பதைத்தான் ‘போக்கு நிலை’ (Trend) என்கிறோம். பங்குச் சந்தையானது ஒரு வரம்பு அல்லது எல்லைக்குள் வர்த்தகமாகி வந்தால், அதை அனைவராலும் சுலபமாகக் கண்டுபிடித்துவிட முடியும்.

ரேஞ்ச் பவுண்ட் வர்த்தகம்...

மேலும், ஒரு நிறுவனப் பங்கின் விலை, ஒரு நிலைக்கு சென்றுவிட்டு மீண்டும் வெகு சீக்கிரத்திலே பழைய நிலைக்கே வந்துவிடுவது, ‘ரேஞ்ச் பவுண்ட் (Range Bound)’ எனப்படும்.

பங்குச் சந்தை, ரேஞ்ச் பவுண்ட் வர்த்தகத்தில் இருக்கும் போது அதிக அனுபவம் கொண்ட முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களால் மட்டுமே முதலீடு அல்லது வர்த்தகம் செய்து லாபம் சம்பாதிக்க முடியும். காரணம், ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஏற்படும் விலை மாற்றம் என்பது பல நேரங்களில் பங்குத் தரகுக் கட்டணம் மற்றும் இதர கட்டணங்களுக்குக்கூட கட்டுபடியாகாமல் போய்விடும்.

பங்குச் சந்தை அல்லது பங்கின் விலை, ரேஞ்ச் பவுண்ட் டிரேடிங்கில் இல்லாதபட்சத்தில், இறக்கம் அல்லது ஏறத்தில் இருக்கும். ஆனால், பங்கின் விலை அல்லது சந்தையின் குறியீட்டுப் புள்ளிகள் எந்தப் பாதை யில் தொடர்ந்து போகிறது என்பதைக் கண்டுபிடிப்பது கடினமான காரியம். இதைத் தொழில்நுட்ப ஆய்வு (Technical Analysis) பயன்படுத்தி கண்டறிய முடியும்.

வெற்றிகரமாக, லாபகரமாக முதலீடு மற்றும் வர்த்தகம் செய்ய போக்கு நிலை உருவாகும்போதே கண்டுபிடிப்பது அவசியமாகும்.

பங்கின் விலைப்போக்கை அறிந்து லாபம் ஈட்டும் கலை..!

சந்தையின் போக்கு நிலைகள்...

பொதுவாக, பங்குச் சந்தை மற்றும் பங்கின் போக்கு நிலை என்பதை மூன்று விதங்களில் அமைய வாய்ப்பு உண்டு.

1. ஏறும் போக்கு நிலை.

2. இறங்கும் போக்கு நிலை.

3. ரேஞ்ச் ஃபவுண்ட் போக்கு நிலை.

இதில் முதல் வகையான ஏறும் போக்கு நிலையில் சந்தையின் குறியீட்டுப் புள்ளி அல்லது நிறுவனப் பங்கின் விலை இருக்கும்போது வருமானம் ஈட்டுவது எளிது.

ஏறும் போக்கு நிலைதான், ஒரு நிறுவனப் பங்கை வாங்குவதற்கான சரியான நேரமாக இருக்கும். இந்த நிலையில், பங்கின் விலையானது வரைபடத்தில் தொடர்ந்து ஹையர் லோ, ஹையர் ஹை உருவாகிவரும். (பார்க்க வரைபடம் 1)

இரண்டாம் வகை, இறங்கும் போக்கு நிலை. பங்குச் சந்தையின் குறியீட்டுப் புள்ளி அல்லது நிறுவனப் பங்கின் விலை இறங்க ஆரம்பிக்கும்போது வருமானம் சம்பாதிப்பது சுலபம். அதாவது, பங்கின் விலை இறங்கும்போது லாபத்தில் விற்றுவிட்டு வெளியேறும் நிலையாக எடுத்துக்கொள்ளலாம். இந்த நிலையில், பங்கின் விலை வரைபடத்தில் தொடர்ந்து பங்கின் விலையான லோயர் லோயர், லோயர் ஹை உருவாகி வரும். (பார்க்க, வரைபடம் 2)

பங்கின் விலைப்போக்கை அறிந்து லாபம் ஈட்டும் கலை..!

பங்குச் சந்தை அல்லது ஒரு நிறுவனப் பங்கு தற்போது ஏறும் போக்கு நிலையில் உள்ளதா அல்லது இறங்கும் போக்கு நிலையில் உள்ளதா என்பதை முதலில் உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கேற்றபடி, முதலீடு அல்லது வர்த்தக முடிவை எடுப்பது லாபத்துக்கு வழிவக்கும்.

அதே நேரத்தில், மூன்றாம் வகையான சந்தையின் குறி யீட்டுப் புள்ளி அல்லது பங்கின் விலைப் போக்கு நிலை, ரேஞ்ச் ஃபவுண்ட் நிலையில் இருக்கும் போது மிகவும் எச்சரிக்கையாக செயல்பட்டால் மட்டுமே லாபம் ஈட்ட முடியும். காரணம், மிகக் குறுகிய நேரத்திலேயே ஏற்ற, இறக்கங்கள் நடந்து முடிந்துவிடும். (பார்க்க, வரைபடம் 3)

லாபம் உறுதியாகக் கிடைக்கத் தேவையான போக்கு நிலையை சரியாகக் கணிப்பது அவ்வளவு சுலபம் இல்லை. அதற்குத் தொடர்ந்து பங்குச் சந்தை குறியீட்டுப் புள்ளிகள் மற்றும் பங்கின் விலைப்போக்கைக் கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

நிறுவனத்தின் உள்ளே மற்றும் வெளியே நடக்கும் விஷயங்கள், சர்வதேசத் தொழில் மற்றும் பொருளாதார நிகழ்வுகள் மற்றும் அவற்றின் விளைவுகளைக் கருத்தில்கொண்டு செயல்பட வேண்டும். மேலும், பல்வேறு டெக்னிக்கல் அனாலிசிஸ் முறைகளைத் தெரிந்துகொள்வது அவசியம். சில டெக்னிக்கல் அனாலிசிஸ் பாடங்கள் காளைச் சந்தையில் சிறப்பாகச் செயல்படும். சில பாடங்கள், கரடிச் சந்தையில் மட்டும் சரியாகச் செயல்படும்.

இந்தத் தொழில்நுட்பங்களை எல்லாம் தெரிந்துகொள்வது ஒரே நாளில் நடந்துவிடாது. இன்றைக்கு கோடீஸ்வரர்களாக இருக்கும் யாரும் ஒரே நாளில் அந்த நிலையை அடைந்திருக்க முடியாது. அதுபோல்தான் பங்குச் சந்தையிலும் லாபம் பார்ப்பது. முதலீடு அல்லது வர்த்தகம் பழகும் வரைக்கும் காகித வர்த்தகம் மேற்கொள்வது அவசியம். அது தான் பணத்துக்கும் பாதுகாப்பாக அமையும்.

சந்தையின் போக்கு அல்லது பங்கின் விலைப் போக்கு நிலை, உருவாவது பற்றித் தெரிந்து கொள்ள முடியாத வர்த்தகர்களால் லாபம் சம்பாதிக்க முடியாது. பங்குச் சந்தைக் குறியீட்டுப் புள்ளிகளின் போக்கு அல்லது பங்கின் விலைப் போக்கைக் கண்டுபிடிக்க பல வழிமுறைகள் இருக்கின்றன. டெக்னிக்கல் அனாலிசிஸ் சொல்லும் முறைகளும் நிறையவே இருக்கின்றன.

இருந்தாலும், இவற்றில் எது சரி, எது தவறு என்பதைக் கண்டுபிடிப்பது என்கிற குழப்பம் பலருக்கும் பல சமயங்களில் வரும். ஒரு குறிப்பிட்ட போக்கு நிலை இருப்ப தாக பெரும்பான்மையான டெக்னிக்கல் அனாலிசிஸ் முறைகள் குறிப்பிடும்போது அதை நாம் கணக்கில் எடுத்துக்கொண்டு செயல்படலாம்.

அதே நேரத்தில், ஒரு டெக்னிக்கல் அனாலிசிஸ் முறை குறிப்பிடுவதற்கு மாறாக, மற்றொரு ஆய்வு முடிவு குறிப்பிட்டால் என்ன செய்வது? அதாவது, ஏறும் போக்கு நிலை என்று ஒரு டெக்னிக்கல் அனாலிஸ் சொல்லும்போது மற்றொரு டெக்னிக்கல் அனாலிஸ் இறங்கும் போக்கு நிலை என்றால் எந்த முடிவுக்கு வருவது?

அது போன்ற நேரங்களில் டெக்னிக்கல் அனாலிசிஸை மட்டும் நம்பி வர்த்தக முடிவு எடுக்காமல், அடிப்படைப் பகுப்பாய்வையும் (Fundamental Analysis) துணைக்கு சேர்த்துக்கொள்வது லாபத்தைச் சேர்க்கும்.

வரைபடம் 4-ல் ஃபெபோனாசி மூவிங் ஆவரேஜ், பங்கை வாங்கச் சொல்கிறது. அதே நேரத்தில், 20 நாள் மூவிங் ஆவரேஜ் விற்கச் சொல்கிறது. இந்த நேரத்தில், ஃபண்ட மென்டல் அனாலிசிஸ் அடிப்படையில்தான் பங்கு முதலீட்டு முடிவை எடுக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism