Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

B U Y & S E L L

பிரீமியம் ஸ்டோரி

சந்தையின் செயல்பாடு தொடர்ந்து மந்தமாக இருக்கும்பட்சத்தில், நிஃப்டி மீண்டும் 14600 என்ற நிலைக்கு இறங்கலாம் எனக் கடந்த வாரத்தில் கூறியிருந்தோம். நாம் கூறியபடியே அந்த நிலைக்கு சந்தை இறங்கியது மட்டுமல்லாமல், மேலும் இறங்கி 14450 வரை இறங்கியதைப் பார்க்க முடிந்தது.

டாக்டர் 
சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

கடந்த வாரத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் ஏதும் இல்லை. செய்தி களும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஒன்றும் இல்லை. இதன் விளைவாக, சந்தையின் போக்கில் பெரிய திருப்பம் ஏதும் இல்லாமல் இருந்தது. இன்ட்ரா டே ஏற்ற இறக்கங்கள் மட்டுமே இருந்தன. துறை சார்ந்த குறியீடுகளின் செயல்பாடு கலவையாகவே இருந்தது. ஆனால், கோவிட் செய்திகள் நெகட்டிவ்வாக இருப்ப தால், சந்தை செயல்பாட்டாளர்கள் எச்சரிக்கை உணர்வுடன் சந்தையை அணுகுகிறார்கள். தேர்தல் முடிவு களும் ஆளும் பா.ஜ.க அரசுக்கு கலவையாகவே வந்துள்ளன.

விலைநகர்வுகளின் சார்ட் பேட்டர்னைப் பார்க்கையில், சந்தை தொடர்ந்து ரெசிஸ்டன்ஸ் லைனுக்குக் கீழே மேலிருந்து கீழ்நோக்கி இருப்பதாகவே தெரிகிறது. சமீபத்திய ஏற்றத்தின் நகர்வும் இந்த நிலையை எதிர்கொண்டு தோல்வி அடைந்து மீண்டும் இறங்கியுள்ளது. இதிலிருந்து இந்த நிலையில், சப்ளை இருப்பது தெரிகிறது. ஆனால், கடந்த இறக்கத்தின்போக்கில் காணப்பட்ட ஊசலாட்டத்துடன் ஒப்பிடுகையில் தற்போது உச்சநிலைகளில் பாட்டம் பேட்டர்ன்கள் உருவாகியிருக் கின்றன. ஆனால், அது சிறிய பகுதிதான். சந்தையில் குறிப்பிடத்தக்க ஏற்றங்களைக் காண இதைவிடவும் அதிக செயல்பாடுகள் தேவை.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

இந்த வாரத்துக்கான சார்ட்டில் டி.எம்.ஐ ஆசிலேட்டரைப் பார்க்கும்போது, டி.ஐ கோடுகள் சந்திக்கப்பட்டுள்ளதைப் பார்க்க முடிகிறது. இது குறிப்பிட்ட வரம்பு நகர்வுகளுக்கான அறிகுறியாக இருக்கிறது. இந்த டி.ஐ கோடுகள் கடந்த மார்ச் மாத உச்சத்துக்குப் பிறகு ஆதிக்கத்தில் இருந்துவருகிறது. இதிலிருந்து கரடியின் போக்கு கட்டுக்குள் இருப்பதாகக் கொள்ள லாம்.

சமீபத்திய சில ஏற்றத்தின் நகர்வு முயற்சிகளும் அதை உறுதி செய்கின்றன. மிக முக்கியமாக, ஏ.டி.எக்ஸ் கோடு உறுதியாக கீழ்நோக்கி இருக்கிறது. அத்துடன் நியூட்ரல் சோனுக்குக்கீழ் இருக்கிறது. எனவே, வலுவான போக்கு எதுவும் தென்பட வில்லை. ஆர்.எஸ்.ஐ குறியும் நியூட்ரல் நிலைக்குக் கீழேதான் உள்ளது. ஆர்.எஸ்.ஐ கோடும் 40-60 இடையில் ஊசலாடுகிறது. இது ஏற்றத்துக்கான முயற்சிக்கு முக்கிய அறிகுறியாகும்.

எனவே, இந்தச் சூழலில் டிரெண்ட் லைனுக்கு மேலே காணப்படும் சிறு சிறு நகர்வுகளுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிதாக முதலீடு களை மேற்கொள்ளும்முன் காத்திருந்து சிறப்பான மொமென்டம் ஏதும் உண்டாகிறதா என்பதைப் பார்ப்பது அவசியம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

இன்டிலெக்ட் டிசைன் (INTELLECT)
தற்போதைய விலை ரூ.794.00
வாங்கலாம்

கடந்த சில மாதங்களாக இந்தப் பங்கின் விலை நகர்வில் வலுவான ஏற்றத்தின் போக்கு காணப்படுகிறது. இது நிறுவனத்தின் அடிப்படை காரணிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங் களின் விளைவாக ஏற்பட்டுள்ள தையும் பார்க்கமுடிகிறது.

மார்ச் மாத இடையில் ரூ.730 என்ற உச்சத்தை எட்டிய பங்கு விலை பிறகு ஒருங்கிணைப்பு போக்கில் இருந்தது. இதிலிருந்து பிரேக் அவுட் ஆகி விலை ஏற்றத்தை நோக்கி நகர தயாராக இருக்கிறது. குறுகிய காலத்தில் ரூ.850-900 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் 700-க்குக்கீழ் வைத்துக்கொள்ளவும்.

மோதிலால் ஆஸ்வால் (MOTILALOFS)
தற்போதைய விலை ரூ.708.00
வாங்கலாம்

தரகு நிறுவனப் பங்குகள் முதலீட் டாளர்களின் விருப்பப்பட்டியலில் இருப்பதால், நல்ல டிமாண்டில் இருந்து வருகின்றன. மேலும், இவற்றின் சமீபத்திய நிதிநிலை முடிவுகளும் சிறப்பாக வந்துள்ளன. அவற்றில் மோதிலால் ஆஸ்வால் பங்கின் நகர்வில் நிலையான முன்னேற்றம் காணப்படுகிறது. இதன் வாராந்தர சார்ட்டுகளில் உச்ச பாட்டம் நிலைகளையும் பார்க்க முடிகிறது. எனவே, வரும் வாரத்தில் ஏற்றத்துக்கான நகர்வுகளைப் பார்க்கலாம். ஸ்டாப்லாஸ் 660க்குக் கீழ் வைத்துக்கொள்ளவும். வரும் காலத்தில் ரூ.850 வரை உயர வாய்ப்புள்ளது.

வொக்ஹார்ட் பார்மா (WOCKPHARMA)
தற்போதைய விலை ரூ.584.50
வாங்கலாம்

பார்மா பங்குகள் முன்னணி டிமாண்டில் உள்ளன. துறையின் முன்னணி நிறுவனப் பங்குகள் நல்ல ஏற்றத்தைக் கண்டுவரும் நிலையில், மிட்கேப் பங்குகளும் சிறப்பாகச் செயல்பட ஆரம்பித்துள்ளன.

வொக்ஹார்ட் ஏற்றமடைந்து அதன் முந்தைய உச்சத்தைக் கடந்து ஏற்றம் கண்டுள்ளது. இது புதிய உச்சத்தை நோக்கி பங்கை நகர்த்துகிறது. எனவே, குறுகிய காலத்தில் 677 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் 550-க்குக் கீழ் வைத்துக்கொள்ளவும்.

தமிழில்: திவ்யா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு