Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! முதலீட்டாளர்கள் கவனத்துக்கு..!

பங்கு முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
பங்கு முதலீடு

B U Y & S E L L

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! முதலீட்டாளர்கள் கவனத்துக்கு..!

B U Y & S E L L

Published:Updated:
பங்கு முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
பங்கு முதலீடு

இந்தியப் பங்குச் சந்தையில் கடந்த வாரத்தில் பதற்றம் காணப்பட்ட நிலையிலும் வர்த்தகம் நல்ல போக்கில் காணப்பட்டது. முந்தைய வெள்ளிக்கிழமை சந்தை அடைந்த ஏற்றமானது திங்கள்கிழமை தலைகீழாக மாறியது. ஆனாலும், காளையின் போக்கு நெகிழ்வுத்தன்மையுடன் இருந்ததால், சர்வதேச சந்தைகளில் சிறப்பான வர்த்தகம் தொடங்கி அடுத்த மூன்று நாள்களிலும் தொடர்ந்ததால் அவற்றின் உதவியுடன் மீண்டுவந்தது.

டாக்டர் 
சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

வியாழன் அன்று வர்த்தக முடிவில் நகர்வானது மீண்டும் உச்சநிலையில் காணப்படுவதோடு, 16000 என்ற நிலையைக் கடந்து இது தொடரும் என்றும் எதிர்பார்க்கலாம். அதே சமயம், நாம் முந்தைய வாரத்தில் இருந்த சூழலில்தான் இருக்கிறோம். எனவே, ஏற்றத்துக்கான முயற்சியானது ஏமாற்றமளிக்கவும் வாய்ப்புள்ளது. சர்வதேச சந்தைகளில் இருந்து எதிர்மறையான செய்திகள் எதுவும் வராதபட்சத்தில் இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்றம் தொடர்ந்து புதிய உச்சங்களை எட்ட வாய்ப்புள்ளது.

முந்தைய வாரங்களைக் காட்டிலும் இந்த வாரத்தில் வர்த்தகர்கள் உற்சாகமாகச் செயல்பட்டனர். ஏனெனில், கடந்த வாரத்தில் வர்த்தகப் போக்கில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைப் பார்க்க முடிந்தது. இதனால் லாங் பொசிஷன்கள் சந்தையில் அதிகமாகும் வாய்ப்புகளைப் பார்க்க முடிகிறது. ஆனாலும், அதில் கவனமாக இருக்க வேண்டும். காரணம், தற்போதைய சூழலில் லாங் பொசிஷன் வர்த்தகங்கள் எளிதில் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளதாகவும் விரைவில் அதிலிருந்து வெளியேறுவதற்கான அழுத்தத்தை உண்டாக்குவதாகவும் உள்ளன.

சந்தை கடந்த ஜூன் முதல் நிர்வகித்து வரும் பெரிய வரம்பானது தற்போது பிரேக் அவுட்-ஆக உள்ளது. தற்போது உருவாகியுள்ள வரம்பின் அளவானது 250 புள்ளிகள் எனும் அளவுக்கு உள்ளது. சந்தை பிரேக் அவுட்-ஆகி ஏற்றத்துக்கு உள்ளாகுமானால், இது குறைந்தபட்ச நகர்வாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இதன் மூலம் வரும் நாள்களில் ஏற்றத்தின் இலக்கு 16250 என்ற நிலையில் உள்ளதைப் பார்க்க முடிகிறது.

ஒருவேளை நகர்வு மீண்டும் ஏமாற்றம் அளித்தால் என்ன செய்வது? அப்படி நடக்கும்பட்சத்தில் நகர்வின் வரம்பு நிலையாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். ஆனால், சந்தையில் சென்டிமென்ட் பாதிக்கப்படும். சந்தை தற்போது நகர்வதற்குத் தயாராக இருக்கிறது. எனவே, எல்லோரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! முதலீட்டாளர்கள் கவனத்துக்கு..!

வரும் வாரத்தைப் பொறுத்த வரை, இறக்கங்கள் உண்டாகும் போது முதலீடுகளை மேற்கொள்ளலாம். குறுகிய கால வர்த்தகர்கள் 15680 என்ற நிலையில் உறுதியான ஸ்டாப்லாஸ் வைத்துக்கொள்ளவும். ஏற்றத்தின் போக்கில் 16250 என்பது உடனடி இலக்காக உள்ளது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! முதலீட்டாளர்கள் கவனத்துக்கு..!

இன்டலெக்ட் டிசைன் (INTELLECT)

தற்போதைய விலை: ரூ.772.45

வாங்கலாம்

ஐ.டி துறையின் முன்னணி நிறுவனப் பங்குகளில் வலுவான நகர்வுகள் காணப்பட்டன. இது தற்போது அடுத்தகட்ட ஐ.டி பங்குகளிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. அவற்றில் முதன்மையாக இன்டலெக்ட் உள்ளது. கடந்த மே மாத இடையிலிருந்து இந்தப் பங்கு விலையில் கன்சாலிடேஷன் காணப்படுகிறது. தற்போது அதிக வால்யூம்களில் வர்த்தகம் நடப்பதோடு அதிக வரம்புகளில் நகர்வுகள் காணப்படுவதால், இந்தப் பங்கு புதிய உச்சங்களுக்கு நகரும் சாத்தியங்களுடன் இருக் கிறது. ரூ.840 என்ற இலக்குடன் இந்தப் பங்கை ரூ.730 ஸ்டாப் லாஸுடன் வாங்கலாம்.

கிர்லோஸ்கர் ஆயில் (KIRLOSENG)

தற்போதைய விலை: ரூ.267.50

வாங்கலாம்

கடந்த காலத்தில் சிறப்பாக இருந்த பல புளூசிப் பங்குகள் தற்போது மீண்டுவரத் தொடங்கி யிருக்கின்றன. அவற்றில் ஒன்றாக கிர்லோஸ்கர் ஆயில் உள்ளது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், ஏற்றம் அடைவதோடு அதிக வால்யூம் வர்த்தகமும் காணப்படுகிறது. தற்போது அதன் இறக்கத்திலிருந்து 50 சதவிகித ரீட்ரேஸ்மென்ட் போக்கில் இருக்கிறது. ஆர்.எஸ்.ஐ இண்டிகேட்டரும் சிறப்பாக உள்ளது. எனவே, இறக்கங்களின் போது முதலீடுகள் வர வாய்ப்பு உள்ளது. குறுகிய காலத்தில் 315 வரை உயர வாய்ப்புள்ளது. ரூ.245 ஸ்டாப்லாஸுடன் இந்தப் பங்கை வாங்கலாம்.

ஏ.யு ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் (AUBANK)

தற்போதைய விலை: ரூ.1,251.00

வாங்கலாம்

இந்தப் பங்கில் விலை நகர்வுகளின் போக்கு இரு திசைகளிலும் நன்றாகவே இருந்து வருகிறது. திடீர் இறக்கம் உண்டான பிறகு, இந்தப் பங்கு உடனடியாக மீண்டு வந்திருக்கிறது. தற்போது இந்தப் பங்கின் விலை அதன் முந்தைய உச்சங்களைத் தாண்ட தயாராக உள்ளது. எம்.ஏ.சி.டி இண்டிகேட்டர் இதில் புதிய முதலீடுகள் உள்ளே வருவதற் கான அறிகுறிகளுடன் இருக்கிறது. எனவே, இந்தப் பங்கு ரூ.1,425 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.1,210-க்குக் கீழ் வைத்துக்கொள்ளவும்.

தமிழில்: திவ்யா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism