Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! முதலீட்டாளர்கள் கவனத்துக்கு..!

பங்கு முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
பங்கு முதலீடு

B U Y & S E L L

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! முதலீட்டாளர்கள் கவனத்துக்கு..!

B U Y & S E L L

Published:Updated:
பங்கு முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
பங்கு முதலீடு

ஒரு விஷயம் மட்டும் மிகத் தெளிவாக இருக்கிறது அதாவது, இந்தியப் பங்குச் சந்தை இறக்கம் அடைவதற்குத் தயாராக இல்லை. கடந்த வாரத்தில் சந்தையின் செயல்பாடுகள் பயத்தை உண்டாக்கும் வகையில் இருந்தது. செவ்வாய், புதன் ஆகிய வர்த்தக தினங்களில் அடைந்த இறக்கம் அதற்கு முந்தைய இறக்கங் களைவிடவும் கீழ் இருந்தது. ஆனால், அதே தினம் அந்த இறக்கத்திலிருந்து சந்தை உடனடியாக மீண்டுவந்தது. இறக்கங்களில் காணப்பட்ட நிழல் கேண்டில் பேட்டர்ன் களிலிருந்து வியாழன் அன்று நன்றாக மீண்டுவந்து வர்த்தக மானது. அந்த நகர்வானது நிஃப்டி 15800 என்ற நிலையைக் கடந்து இருந்திருந்தால், இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

டாக்டர் 
சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

பேங்க் நிஃப்டி குறியீடும் அதுபோலவே நன்றாகச் செயல் பட்டது. ஆனால், அதில் காணப்பட்ட மீட்சி, நிஃப்டியில் காணப்பட்ட அளவுக்கு சிறப்பாக இல்லை. ஆயினும், பேங்க் நிஃப்டியில் பெரும்பங்கு வகிக்கும் ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் வங்கி மற்றும் பாரத ஸ்டேட் பேங்க் இரண்டும் நல்ல டிமாண்டில் இருந்தன. இதன் காரணமாக பேங்க் நிஃப்டியின் நகர்வு குறிப்பிடத்தக்க வகையில் இருந்தது. வங்கித் துறையானது நிஃப்டியிலும் பெரும்பங்கு வகிப்பதால், இதன் போக்கு எப்படி இருக்கிறது என்று ஆராய்வதும் மிக முக்கியமாகும்.

சீனாவிலிருந்து பாசிட்டிவான செய்திகள் வந்ததால், மெட்டல் பங்குகளிலும் மற்றும் சார்ட்டுகளில் நல்ல பிரேக் அவுட் காணப்பட்டது. ஐ.டி.துறை பங்குகளிலும் காணப்பட்ட நகர்வுகள், நிஃப்டிக்கு மிகவும் உதவியாக இருந்தன. இது தொடர்ந்து காணப்படும் பட்சத்தில் நிஃப்டியின் நகர்வு வரும் நாள்களிலும் நன்றாக இருக்கும். மேலும், சில்லறை வர்த்தகம் தொடர்ந்து தடை இல்லாமல் இருப்பதால், ஸ்மால் மற்றும் மிட்கேப் பிரிவுகளிலும் நல்ல ஏற்றம் இருந்தது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! முதலீட்டாளர்கள் கவனத்துக்கு..!

கடந்த வார நாம் கூறியது போல, தற்போது காணப்படும் வரம்பானது அடுத்தடுத்த நகர்வுகளுக்கு வழிவிட்டுச் செல்ல வேண்டும். அப்போதுதான் சந்தையின் போக்கு நன்றாக இருக்கும் போது புதிய பெரிய நகர்வுகள் சாத்தியம் ஆகும். எனவே, இறக்கங்களில் பெரிய அளவில் பங்கு விற்பனை இல்லாத பட்சத்தில் நாம் காளையின் போக்கிலேயே தொடரலாம். ஒருவேளை, சந்தை சில செய்திகளுக்கோ, நிகழ்வுகளுக்கோ காத்திருக்கலாம்.

வரும் வாரத்தைப் பொறுத்தவரை, இறக்கங்களை வாங்கும் வாய்ப்புகளாகவே பார்க்கலாம். ஸ்டாப்லாஸ் இறக்கத்தின் போக்கில் 15500 என்ற நிலையில் வைத்துக் கொள்ளவும். 15800 என்ற நிலையை உடைத்து ஏற்றம் கண்டால் உச்சங்களுக்கு எட்ட வாய்ப்புள்ளது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! முதலீட்டாளர்கள் கவனத்துக்கு..!

ராடிகோ கெய்தான் (RADICO)

தற்போதைய விலை: ரூ.879.05

வாங்கலாம்

மதுபான நிறுவனப் பங்குகள் தொடர்ந்து நல்ல டிமாண்டில் இருந்து வருகின்றன. சந்தையின் கவனம் முன்னணி பங்குகளில் இருந்தாலும், இந்தப் பங்கின் போக்கில் தற்போது கவனம் பெறுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. இதில், காளையின் போக்கு இருப்பதற்கான புதிய சிக்னல்கள் காண முடிகிறது. எனவே, ரூ.825 ஸ்டாப்லாஸுடன் வாங்கலாம். குறுகிய காலத்தில் ரூ.1,000 வரை உயர வாய்ப்புள்ளது.

குஜராத் அல்கலி (GUJALKALI)

தற்போதைய விலை: ரூ.484.00

வாங்கலாம்

ரசாயன நிறுவனப் பங்குகள் சிறப்பான டிமாண்டில் உள்ளன. முன்னணி பங்குகளிலிருந்து டிமாண்ட் தற்போது துறையின் பொதுவான பங்குகளுக்கும் விரிவடைந்துள்ளது. அதன்படி பார்க்கையில், இந்த நிறுவனப் பங்கில் அதிக வால்யூமில் வர்த்தகம் காணப்படுவதுடன், கடந்த வாரத்தில் பிரேக் அவுட்டும் நடந்துள்ளது. எனவே, அதில் ஏற்றத்துக்கான நகர்வு காணப்படுகிறது. எனவே, ரூ.450 ஸ்டாப்லாஸுடன் வாங்கலாம். குறுகிய காலத்தில் ரூ.530 வரை உயர வாய்ப்புள்ளது.

ஜான்சன் கன்ட்ரோல்ஸ் ஹிட்டாச்சி ஏர் கண்டிஷன் (JCHAC)

தற்போதைய விலை: ரூ.2,320.00

வாங்கலாம்

கொரோனா காலத்தில் வீட்டு உபயோகப் பொருள்கள் நிறுவனங்களுக்கு நல்ல டிமாண்ட் ஏற்பட்டது. ஏனெனில், வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை சிறப்பாக இருந்தது. இந்தத் துறை சார்ந்த பங்கான ஜான்சன் கன்ட்ரோல்ஸ் ஹிட்டாச்சியில் கடந்த மே மாத இடையில் இருந்தே நல்ல ஆரோக்கியமான பாதியளவு ரவுண்டிங் பேட்டர்ன் காணப் பட்டது.

தற்போது வால்யூம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. உடனடி ரெசிஸ்டன்ஸ் 2400 ஆக உள்ளது. இந்த நிலையைக் கடக்கும்பட்சத்தில் நல்ல ஏற்றத்தைக் காணலாம். ஸ்டாப்லாஸ் ரூ.2,200-க்குக் கீழ் வைத்துக்கொள்ளவும்.

தமிழில்: திவ்யா