Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

இந்தியப் பங்குச் சந்தை கடந்த வாரம் பிரேக் அவுட் ஆகி ஏற்றம் கண்டதும் எதிர்பார்ப்புகள் அதிகரித்தன. ஆனால், எதிர்பார்த்த ஏற்றம் உடனடியாக இல்லாமல் மெள்ள ஒருவிதமான மாயச் சுவரை உருவாக்கி, அதன்பின்னர் நிஃப்டி 16350 என்ற நிலையில் புதிய உச்சத்தைப் பதிவு செய்தது. அதன் பிறகான வர்த்தக நாள்களில் நகர்வுகள் 200 புள்ளிகள் என்ற வரம்புக்குள்ளேயே இருந்தது. இந்த நகர்வு எதிர்பார்க்காதது. மேலும், சந்தை செயல்பாட்டாளர்களின் சென்டிமென்டில் ஏற்பட்ட மாற்றங்கள் வலுவான இறக்கத்தை உண்டாக்கி தொடர் ஏற்றத்தைத் தடுத்தது.

டாக்டர் சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

வெளிப்படையாகச் சொன்னால், இது பி.எஸ்.இ–யில் பட்டியலிடப்பட்டுள்ள சில குறிப்பிட்ட பங்குகளின் நகர்வுக்கு வரம்பு விதிக்கப்பட்டதன் காரணமாக நிகழ்ந்தது எனலாம். ஆனால், இதைத் தாண்டி சந்தையின் செயல்பாடுகளிலும் பல விஷயங்களைப் பார்க்க முடிந்தது. ஸ்மால் மற்றும் மிட்கேப் பங்குகளில் புதிய உச்சத்திலிருந்து திடீர் இறக்கம் காணப்பட்டது. இந்தத் திடீர் இறக்க மானது சந்தையின் சென்டிமென்டை அசைத்தது. ஆனாலும், பி.எஸ்.இ பின்னர் தெளிவுபடுத்திய பிறகு, சந்தையில் பாசிட்டிவ் சென்டிமென்ட் உருவாக ஆரம்பித்து, விலை நகர்வுகளும் ஓரளவுக்கு மீண்டது. இதனால் நிஃப்டி ஏற்றத்தின் போக்கில் நகர்ந்தது.

தனியார் வங்கிப் பங்குகள் சிறப்பான ஏற்றத்தைப் பதிவு செய்திருந்தாலும், பேங்க் நிஃப்டி குறியீடு சற்று ஏற்றம் கண்டாலும், இவற்றின் நகர்வுகள் நிஃப்டியில் பங்களிக்கும் அளவுக்குப் போதுமானதாக இல்லை. ஆனால், ஸ்மால், மிட்கேப் பிரிவுகளில் காணப்பட்ட பலவீனமான நகர்வுகள் சந்தையின் பொதுவான போக்கில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றே சொல்லலாம்.

பங்குகள்... வாங்கலாம்...
விற்கலாம்!

ஆப்ஷன்ஸ் சந்தையிலும் குறிப்பிடத்தக்க ஈடுபாட்டை பார்க்க முடிந்தது. இது ஆகஸ்ட் தொடருக்கான உற்சாகத்தை வலுவாக உருவாக்கியது. நிஃப்டி 16000 என்ற நிலையை உடைத்து நகர்ந்ததுடன், இந்த நிலைக்குமேல் இறக்கம் ஏற்படாத வகையில் புதிய வலுவான சப்போர்ட்டாக மாற்றி யிருக்கிறது. காலாண்டு நிதிநிலை முடிவுகள் தொடர்ந்து பாசிட்டிவாக இருக்கும்பட்சத்தில், சந்தையின் போக்கும் தொடர்ந்து பாசிட்டிவாக இருக்கும்.

வரும் வாரத்தைப் பொறுத்தவரை, இறக்கங்களில் முதலீடு செய்யும் போக்கைத் தொடரலாம். சந்தை கடந்த வாரம் இறக்கத்தின் போக்கில் 16200 என்ற நிலையை பரிசோதித்ததுடன், அந்த நிலையில் தன்னை தக்க வைத்துக்கொண்டது. எனவே, நிஃப்டி 16150 - 16200 என்ற வரம்பில் இறக்கத்தின் போக்கு இருக்கலாம். இந்த நிலையில் நிகழ்த்தப்படும் வர்த்தகங்களுக்கு 16050 - 15950 என்ற வரம்பில் ஸ்டாப்லாஸ் வைத்துக்கொள்ளலாம். ஏற்றத்தின் போக்கில் 16500 என்ற இலக்கை குறுகிய காலத்தில் எட்டுவதற்கான வாய்ப்புள்ளது.

பங்குகள்... வாங்கலாம்...
விற்கலாம்!

வி.ஆர்.எல் லாஜிஸ்டிக்ஸ் (VRLLOG)

தற்போதைய விலை: ரூ.331.10

வாங்கலாம்

கன்சாலிடேஷன் செயல்பாடு முடிவுக்கு வந்து வலுவான விலை ஏற்றம் நிகழ்ந்து மீண்டும் இந்தப் போக்கு தொடர்ந்து நிகழ்வது கடந்த ஒரு வருட மாகவே இந்த நிறுவனப் பங்கில் காணப்படுகிறது. தற்போது குறிப்பிட்ட கன்சாலிடேஷன் நிகழ்வு முடிந்து விலை நகர்வு ஏற்றத்தை நோக்கி நகரத் தயாராக இருக்கிறது. எனவே, அதன் அடுத்த இலக்கு வரம்பான 360 - 390 என்ற நிலையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.310-க்குக் கீழ் வைத்துக் கொள்ளவும்.

வாபேக் (WABAG)

தற்போதைய விலை: ரூ.358.50

வாங்கலாம்

நல்ல நிதிநிலை முடிவுகளுடன் வரும் நிறுவனப் பங்குகளுக்கு வெகுமதி அளிக்க சந்தை காத்திருக்கிறது. வாபேக் அப்படி யான பங்குகளில் ஒன்றாக இருக்கிறது. இந்தப் பங்கின் விலை நகர்வு ஏற்கெனவே ஏற்றத்தின் போக்கில் உள்ளது. 360 என்ற நிலையைக் கடந்து நகர்ந்தால், புதிய ஏற்றத்துக்கான மொமென்டம் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன. வரும் நாள்களில் 440 வரை உயர வாய்ப் புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.345-க்குக் கீழ் வைத்துக் கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்...
விற்கலாம்!

ஈஸி ட்ரிப் பிளானர்ஸ் (EASEMYTRIP)

தற்போதைய விலை: ரூ.484.20

வாங்கலாம்

சமீபத்தில் பட்டியலான பங்குகளில் சந்தை செயல் பாட்டாளர்களின் ஈடுபாடு அதிகமாகவே காணப்படுகிறது. ஈஸி ட்ரிப் சுற்றுலா மற்றும் பயணங்களுக்கான மிகவும் பிரபலமான இணையதளம் ஆகும். இந்தப் பங்கு சந்தையில் பட்டியல் ஆனதிலிருந்து நல்ல டிமாண்ட் காணப்படுகிறது.

இதன் விலை புதிய உச்சங்களை நோக்கி நகர்ந்தபடி இருக்கிறது. தற்போது மேலும் ஏற்றமடைய தயாராக இருக்கிறது. ரூ.530 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.460-க்குக்கீழ் வைத்துக்கொள்ளவும்.

தமிழில்: திவ்யா