Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

இந்தியப் பங்குச் சந்தையில் கடந்த வார வர்த்தகம் அதற்கு முந்தைய வாரத்தை விடவும் சிறப்பாக இருந்தது. சந்தை நகர்வுகள் இறக்க நிலைகளைப் பரிசோதித்திருந் தாலும் சந்தையின் போக்கில் காளை தன்னை மீண்டும் தக்கவைத்துக்கொண்டது. அதற்கேற்ப அடுத்தடுத்த நாள்களில் இறக்க நிலையில் தேவையான டிமாண்ட் உருவானது. எனவே, சந்தையில் ஏற்றத்தின் போக்கு தொடர்ந்து காணப்பட்டது.

டாக்டர் சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

பேங்க் நிஃப்டியும் குறிப்பிடும் அளவுக்கு நன்றாகவே செயலாற்றியது. முந்தைய வாரங்களில் நிஃப்டியைவிடவும் அதிக பாதிப்புக்கு பேங்க் நிஃப்டி உள்ளாகியிருந்த நிலையில், தற்போது இதில் காணப்பட்ட மீட்சியானது சற்றுக் கடினமானதாகவே இருந்திருக்கும் என்பதை உணர முடிகிறது. காரணம், தனியார் வங்கிப் பங்குகளில் முன்பிருந்த துடிப்பான செயல்பாடு இப்போது இல்லை. இதனால் பேங்க் நிஃப்டியில் எதிர்பார்த்த ஏற்றத்தைக் காண முடியவில்லை. மேலும், எஸ்.பி.ஐ வங்கிப் பங்கில் காணப் பட்ட வலுவான ஏற்றத்தின் போக்கும் உடனடியாக வலுவிழந்துவிட்டது. பேங்க் நிஃப்டியின் பின்னடைவுக்கு இதுவும் ஒரு முக்கியமான காரணம்.

சந்தையின் சென்டிமென்ட் சமீப காலங்களில் மெட்டல் மற்றும் பார்மா துறையால் உற்சாகமாக இருந்துவந்தது. ஆனால், தற்போது இந்த இரண்டு துறைகளின் பங்களிப்பும் குறைந்துவிட்டதாகத் தெரிகிறது. உண்மையில் மெட்டல் துறையின் பெரும்பாலான பங்குகளில் லாபத்தை எடுக்கும் போக்கு காணப்பட்டது.

ஆனாலும், இவற்றில் நல்ல டிமாண்ட் உருவாவதற்கான அறிகுறிகளும் காணப்படுகின்றன. எனவே, வரும் வாரங்களில் ஏற்றத்துக்கான உந்துதல்களைப் பார்க்கலாம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. ஆயினும், பார்மா துறை தொடர்ந்து அழுத்தத்திலேயே காணப்படுகிறது. பல பங்குகளின் நகர்வுகள் இறக்க நிலைகளை நோக்கி நகர்கின்றன. மற்றபடி, ஐ.டி துறை பங்குகள் போல, எஃப்.எம்.சி.ஜி பங்குகளில் டிமாண்ட் காணப்படுகிறது. இவை நிஃப்டியின் நகர்வுக்கு ஓரளவுக்குப் பங்களித்து வருகின்றன.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஒட்டுமொத்தமாக, சந்தை காளையின் போக்கில்தான் இருக்கிறது. இறக்கங்களின்போது முதலீடுகள் செய்யப்படு கின்றன. இந்தச் செயல்பாடு தொடர்ந்து காணப்படும் என்று எதிர்பார்க்கலாம். அந்நியப் பங்களிப்பும் பாசிட்டிவாகவே இருக்கிறது. எஃப்.ஐ.ஐ விற்பனை செய்தாலும் அதை சமன் செய்யும் வகையில் சிறு வர்த்தகர்களின் பங்களிப்பு காணப்படுகிறது.

நிஃப்டி தற்போது 16700 என்ற நிலையைக் கடந்து நகர முயற்சி செய்கிறது. இது சென்டிமென்டில் மேலும் உற்சாகத்தைத் தூண்டுவதாக இருக்கும்.

வரும் வாரத்தைப் பொறுத்தவரை, லாங் பொசிஷன்களைத் தொடர்ந்து வைத்திருக்கலாம்; வாராந்தர இறக்கங்களின்போது மேலும் சில பொசிஷன்களைச் சேர்த்துக்கொள்ளவும் செய்யலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஜி.இ.டி அண்ட் டி இந்தியா (GET&D)

தற்போதைய விலை: ரூ.146.05

வாங்கலாம்

பொதுவாக, ஏற்றத்தின் போக்கில் நகர்வுகளின் சராசரி தொடர்ந்து சப்போர்ட் நிலைகளை உருவாக்கிக்கொள்ளும் வகையில் செயல்பாடு இருந்தால் அவற்றின் ஏற்றத்துக்கான நல்ல அறிகுறி இருப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.

இந்த வகையான பேட்டர்ன் ஜி.இ.டி அண்ட் டி இந்தியா சார்ட்டில் காணப்படுகிறது. இதில் கடந்த மே மாதத்திலிருந்து சில இறக்கங்களுக்குப் பிறகு, தொடர்ந்து ஏற்றம் காணப்படு கிறது.

ஆனால், இவை அனைத்தும் அதன் சராசரி நகர்வுப் பட்டையில் தஞ்சமடைந்திருக் கின்றன. தற்போது இதில் மற்றும் ஓர் இறக்கம் மற்றும் ஓய்வுக்குப் பிறகு விலை நகர்வுகள் கடந்த வாரத்தில் ஏற்றத்தை நோக்கி நகர்ந்துள்ளன. எனவே, ரூ.137 ஸ்டாப்லாஸுடன் இந்தப் பங்கை வாங்கலாம். ரூ.170 வரை உயர வாய்ப்புள்ளது.

சைடஸ் வெல்னஸ் (ZYDUSWELL)

தற்போதைய விலை: ரூ.2,270.00

வாங்கலாம்

சைடஸ் கெடிலா குழுமம் தொடர்பான செய்திகள் சமீப காலங்களில் அவ்வப்போது இடம்பெற்றுவருகிறது. பங்குச் சந்தையிலும் இந்தக் குழுமப் பங்குகள் மீதான பார்வை பாசிட்டிவ்வாக உள்ளது. இதனால் இவற்றின் நகர்வுகள் நிலையாக இருந்துவருகின்றன.

இந்தப் பங்கில் ஏற்றத்தின் போக்கு கடந்த சில காலமாக நிலையாக இருந்துவருகிறது. இது வரும் வாரங்களில் மேலும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். எனவே, இந்தப் பங்கை தற்போதைய விலையில் வாங்கலாம். ரூ.2,400 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப் லாஸ் ரூ.2,200 என வைத்துக் கொள்ளவும்.

ராடிகோ கெய்தான் (RADICO)

தற்போதைய விலை: ரூ.886.10

வாங்கலாம்

மதுபான நிறுவனப் பங்குகள் தொடர்ந்து நல்ல டிமாண்டில் இருந்துவருகின்றன. அவற்றில் ராடிகோ தொடர்ந்து வலுவான போக்கில் தொடர்ந்து காணப்பட்டு வரும் பங்காக உள்ளது.

இதன் தற்போதைய விலையில் கடந்த ஐந்து வாரங்களாக ஓய்வெடுத்து வந்த நிலையில் தற்போது விலை நகர்வுகள் ஏற்றத்தின் போக்கில் நகர ஆரம்பித்துள்ளன.

எனவே, தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். குறுகிய காலத்தில் ரூ.980 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.840 என வைத்துக்கொள்ளவும்.

தமிழில்: திவ்யா