Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்..!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்..!

பங்குச் சந்தை

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

நம்மில் பெரும்பாலானவர்கள் புலம்பக் கூடிய ஒரு விஷயம், சந்தை நகர்வின் வேகம் மிக மெதுவாக இருக்கிறது, அடிக்கடி ஒருங்கிணைப்பு போக்குக்கு உள்ளாகிறது என்பதாகும்.

டாக்டர் சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

ஆனாலும், இந்தியப் பங்குச் சந்தை இத்தகைய போக்கிலிருந்து மேம்பட்டு நகர்வுகளை ஒழுங்குபடுத்தி, அசுர வேகத்தில் ஏற்றம் அடைய முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. கடந்த ஐந்து வாரங்களாக நிஃப்டி 1800 புள்ளிகள் ஏற்றம் கண்டுள்ளது. பொதுவாக, முந்தைய வார கேண்டிலின் உச்சத்துக்கு மேலே நடப்பு வார கேண்டிலின் இறக்கநிலை இருக்கும்படியான வலுவான ஏற்றமானது, சந்தையின் போக்கு மிக வலிமையாக இருக்கும்போதுதான் நிகழும்.

கடந்த முறை இதுபோன்ற நகர்வுகள் நவம்பர் 2020 ஜனவரி 2021 காலகட்டத்தில் நிகழ்ந்தது. அந்த 11 வார வர்த்தகத்தின் போது சந்தை மிகுந்த ஆற்றலுடன் இயங்கியது. எனவே, தற்போது அதே போன்ற செயல்பாட்டை நாம் இந்த முறையும் எதிர்பார்க்கலாமா? மேலும், 2021 பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரையிலான சார்ட்டிலிருந்து சந்தையின் போக்கு அதிகபட்சமாகப் பக்கவாட்டில் இருந்துவருகிறது. (அதேசமயம் ஏற்றமும் கண்டிருக்கிறது!) இதனால் நல்ல, அருமையான ஒருங்கிணைப்பிலிருந்து வந்திருக்கிறது. எனவே, இதிலிருந்து வலுவான காளையின் போக்கு ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்..!


பேங்க் நிஃப்டி பெரும்பாலும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது. ஆனால், புதிய எக்ஸ்பைரி தொடங்குவதால், புதிதாக லாங் பொசிஷன்கள் பேங்க் நிஃப்டியில் உருவாகி வருவதைப் பார்க்க முடிகிறது. இது வங்கித் துறையில் ஏற்றத்தை உருவாக்கத் தயாராக இருக்கிறது. தனியார் வங்கிகள் இன்னமும் தீவிரமாகச் செயல்பட வேண்டியிருக்கிறது. ஆனால். அவ்வாறு செயல்படும் என எதிர்பார்க்கலாம். அப்படி நடக்கும் பட்சத்தில் நிஃப்டியின் ஏற்றத்துக்குக் கூடுதல் உந்துதலை வழங்க இவை உதவியாக இருக்கும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்..!

ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் பிரிவுப் பங்குகளில் ஒரு மாதமாக இருந்த தேக்கநிலை முடிவடைந்து, தற்போது உருவாகியுள்ள மீட்சியானது சந்தை சென்டிமென்டுக்குச் சாதகமான செய்தியாக உள்ளது. இதனால் சாத்தியமாகியுள்ள போர்ட்ஃபோலியோ மதிப்பு வளர்ச்சியையும், மீண்டும் மொமன்டம் முதலீடானது ஈட்டியிருக்கும் வெற்றியையும் காண்பதை விடவும் உற்சாகமான விஷயம் வர்த்தகர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் வேறு என்ன இருக்கப்போகிறது? இந்த உற்சாகம் நிஃப்டியின் அடுத்தகட்ட ஏற்றத்துக்கு உதவியாக இருக்கும்.

வரும் வாரத்தைப் பொறுத்தவரை, லாங் பொசிஷன்களைத் தொடரவும், வாராந்தர சந்தை இறக்கங்களில் கூடுதலாக பொசிஷன்களைச் சேர்த்துக் கொள்ளவும் பரிந்துரைக்கப் படுகிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்..!

ஜெயந்த் அக்ரோ ஆர்கானிக் (JAYAGROGN)

தற்போதைய விலை ரூ.252.00

வாங்கலாம்

கமாடிட்டி பங்குகள் பெரும்பாலும் சந்தையால் ஏற்றத்தை நோக்கி உந்தப்படுவ தில்லை ஆனால், சந்தையின் முக்கியமான பகுதியாக மாறும் போது அப்போதைய செயல் பாடே வேறு மாதிரியாக இருக்கும். ஆமணக்கு கமாடிட்டி நிறுவனங்களில் ஜெயந்த் அக்ரோ மட்டுமே சந்தையில் பட்டியலாகியிருக்கிறது. அதன் சார் பேட்டர்னைப் பார்க்கும் போது, நகர்வுகளில் ஏற்றத்துக் கான போக்கு தெரிகிறது.

எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். குறுகிய காலத்தில் ரூ.290 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.240க்குக் கீழ் வைத்துக் கொள்ளவும்.

நோசில் (NOCIL)

தற்போதைய விலை ரூ.286.40

வாங்கலாம்

நோசில் பங்கில் அருமையான நகர்வுகளின் போக்கு காணப் படுகிறது. இதன் தற்போதைய விலையிலிருந்து மற்றுமொரு ஏற்றத்துக்கான சுழற்சி தெரிகிறது. எனவே, மீண்டும் இந்தப் பங்கைப் பரிந்துரை செய்கிறோம். அடுத்த இலக்காக ரூ.360 காணப்படுகிறது. ரூ.273 ஸ்டாப்லாஸுடன் தற்போதைய விலையில் லாங் பொசிஷன்களை எடுக்கலாம்.

கைடெக்ஸ் கார்மென்ட்ஸ் (KITEX)

தற்போதைய விலை ரூ.164.10

வாங்கலாம்

கைடெக்ஸ் கார்மென்ட்ஸ் சமீபத்தில் செய்திகளில் அடிபட்டு வருகிறது. கேரள அரசுக்கு எதிராக இதன் புரொமோட்டர்கள் குரல் எழுப்பியுள்ளதுடன், மாநிலத்தைவிட்டு வெளியேறப் போவதாகவும் கூறியுள்ளன. இதனால் கடந்த சில வாரங் களாகவே விலை நகர்வுகள் கடும் ஏற்றத்துக்கு உள்ளானது. வால்யூமும் நன்றாக முன்னேற்றம் கண்டுள்ளது.

ஒரு சிறிய இறக்கத்துக்குப் பிறகு மீண்டும் இந்தப் பங்கு ஏற்றத்தை நோக்கி நகரத் தயாராக இருக்கிறது. குறுகிய காலத்தில் ரூ.225 வரை உயர வாய்ப்புள்ளது. எனவே, ரூ.155 ஸ்டாப்லாஸுடன் இந்தப் பங்கை வாங்கலாம்.

தமிழில்: திவ்யா