Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

இந்தியப் பங்குச் சந்தை தொடர்ந்து 18-வது மாதமாக ஏற்றத்தின் போக்கில் நுழைந்திருக்கிறது (கடந்த 2020 மார்ச் மாதத்தில் ஏற்பட்ட இறக்கத்துக்குப் பிறகு). கிட்டத்தட்ட அப்போதைய இறக்கத்திலிருந்து 130% ஏற்றத்தை பங்குச் சந்தை அடைந்துள்ளது. ஆனால், இதுவரை சந்தை அழுத்தத்துக்கு உள்ளாவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. அருமையான சப்போர்ட் டிரெண்ட்லைன் இந்தத் தொடர் ஏற்றத்தின் போக்கைப் பாதுகாத்து வருகிறது. எப்போ தெல்லாம் இந்த டிரெண்ட்லைன் உடைவது போன்ற நிலை உருவாகிறதோ, அப்போ தெல்லாம் விலை நகர்வுகள் உடனடியாக மீண்டுவந்ததுடன், புதிய உச்சத்தையும் எட்டியிருக்கிறது. இதனால், தொடர்ந்து டிரெண்ட்லைனை மீண்டும் மீண்டும் மாற்றிக் கொள்ள நம்மை உள்ளாக்குகிறது.

டாக்டர் சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

கடந்த வாரத்திலும் இதே போன்ற சூழல் உருவானது, ஆனாலும் மீண்டும் விலை நகர்வுகள் மீண்டுவந்து உச்சத்தை எட்டியது. இத்தகைய டிரெண்ட்லைனானது நீண்ட காலத்துக்கு நம்பகமானதாக இருந்துவருகிறது. பல முறை இந்த டிரெண்ட்லைன் சவாலுக்கு உள்ளாகியிருக்கிறது. ஒவ்வொருமுறையும் சவாலை எதிர்கொண்டு மீண்டுவந்திருக்கிறது. இந்த டிரெண்ட்லைனுக்குக் கீழே லோவர் டாப்-லோவர் பாட்டம் பேட்டர்ன் உருவாகும் வரை தற்போதைய போக்கு தொடரும் என நம்பலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

மொமன்டம் இண்டிகேட்டர்களிலும் எந்தவித தடுமாற்றமும் தெரியவில்லை. உதாரணமாக, ஆர்.எஸ்.ஐ இண்டிகேட்டர் தொடர்ந்து உறுதியாக இருந்து, இண்டெக்ஸின் ஒவ்வோர் உச்சத்துக்குப் பிறகும், அடுத்த புதிய உச்சத்துக்கு நகர்கிறது. மேலும், மொமன்டமும் விலை நகர்வும் ஒத்திசைவுடன் நகர்கிறது. இத்தகைய போக்கு சந்தையில் வரும் நாள்களில் சில இறக்கங்கள் உண்டானாலும், சந்தை புதிய உச்சங்களை அடைவதற்கான அறிகுறியாகவே இருக்கிறது. இத்தகைய மொமன்டம் காளையின் போக்கை மேலும் வலுப்படுத்துவதாகவே இருக்கிறது.

இதுபோன்ற சூழலில், முதலீட்டாளர்கள் சந்தை இறக்கத்துக்கு உள்ளாவதற்கான காரணங்களைத் தேடுவது வழக்கம். இது பலரிடையே தவறான எண்ணங்களை உருவாக்கும். சமீபத்திய ஆம்ஃபி அறிக்கையின்படி பார்க்கையில், லார்ஜ்கேப் மற்றும் ஸ்மால்கேப் ஃபண்டு களிலிருந்து முதலீடுகள் வெளியேறி இருப்பது தெரிகிறது. இது சந்தையில் விரைவிலேயே சில இறக்கங்களை உண்டாக்க வாய்ப்புள்ளது என்ற எண்ணத்தை உருவாக்கலாம். ஆனாலும், சந்தையில் தற்போது காணப்படும் போக்கில் பெரிய ஏமாற்றங்கள் உண்டாகாதவரை தொடர்ந்து நாம் சந்தையின் போக்கில் உண்டாகும் பலன்களில் கவனம் செலுத்த வேண்டும். வரும் வாரத்துக்கான பரிந்துரை என்னவென்றால் நாம் இதுவரை கையாண்டு வரும் இறக்கத்தில் முதலீடு செய்யும் உத்தியைத் தொடர்ந்து மேற்கொள்ளலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பி.எஸ்.இ (BSE)

தற்போதைய விலை ரூ.1,240.00

வாங்கலாம்

நீண்ட இறக்கத்தின் போக்கை நிறைவு செய்த நிலையில் உள்ள இந்தப் பங்கு தற்போது மீண்டும் ஏற்றமடைய தயாராகியிருக்கிறது. இந்தப் பங்கின் வர்த்தகத்தில் வால்யூமும் மொமன்டமும் மீண்டும் புத்துணர்ச்சி பெற்றிருக் கிறது. வர்த்தக தளங்களின் பங்குகள் சந்தையில் புதிய உற்சாகத்துடன் இருக்கின்றன. அனைத்து பங்குகளும் ஏற்றமடைகின்றன. பி.எஸ்.இ பங்கும் அதன் முந்தைய உச்சமான ரூ.1,400 என்ற நிலையை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கலாம். எனவே, ரூ.1,175 ஸ்டாப்லாஸுடன் இந்தப் பங்கை வாங்கலாம்.

சீக்வன்ட் சைன்டிஃபிக் (SEQUENT)

தற்போதைய விலை ரூ.235.75

வாங்கலாம்

இந்தப் பங்கில் காணப்பட்ட உற்சாகமான ஏற்றம் மே-ஜூன் காலத்தில் முடிவடைந்து அதன் உச்ச நிலையான ரூ.330-லிருந்து இறங்கி ரூ.225 என்ற நிலைக்கு சரிந்தது. தற்போது இந்தப் பங்கில் அடுத்தகட்ட ஏற்றத்துக்கான நகர்வுகளைக் காண முடிகிறது. இந்தப் பங்கின் விலை குறுகிய காலத்தில் 290 - 300 என்ற உச்சத்துக்கு எட்ட வாய்ப்புள்ளது. எனவே, ரூ.215 ஸ்டாப்லாஸுடன் இந்தப் பங்கை வாங்கலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஹிந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளோரேஷன் கம்பெனி (HINDOILEXP)

தற்போதைய விலை ரூ.193.15

வாங்கலாம்

கடந்த வாரம் எரிவாயு சார்ந்த பங்குகளுக்குச் சாதகமாக செய்திகள் வந்ததால், அந்தப் பங்குகளில் பாசிட்டிவ்வான போக்கை உருவாக்கியிருக்கிறது. அவற்றில் ஹிந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளோரேஷன் பங்கு நல்ல ஃபார்முடன் இருக்கிறது. இதில் காணப்படும் வால்யூம் ஏற்றமானது பங்கின் விலையை, கடந்த சில வாரங்களில் ஏற்றத்தின் போக்கில் கொண்டு சென்றிருக்கிறது. கடந்த வாரத்திலும் இந்த ஏற்றம் காணப்பட்டது. எனவே, இந்தப் போக்கு மேலும் தொடரும் என எதிர்பார்க்கலாம். ரூ.250 வரை இந்தப் பங்கு ஏற்றமடைய வாய்ப்புள்ளது. ரூ.182 ஸ்டாப் லாஸுடன் இந்தப் பங்கை வாங்கலாம்.

தமிழில்: திவ்யா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism