பிரீமியம் ஸ்டோரி

இந்தியப் பங்குச் சந்தையின் வர்த்தகம் கடந்த வாரத்தில் கலவையாகவே இருந்தது. முந்தைய கட்டுரையில் ‘தொடர்ந்து நம்முடைய லாங் பொசிஷன்களைத் தொடரலாம் என்றும் இறக்கங்களின் போது வாங்கலாம் என்றும், அதேசமயம் எதிர்மறையான போக்குக்கான அறிகுறிகள் குறித்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்று கூறியிருந்தோம். குறிப்பிட்டது போலவே இறக்கங்களில் வாங்கலாம் என்ற அணுகுமுறை தொடர்ந்து சாதகமாகவே இருந்தது. கடந்த வாரத்தில் நிஃப்டி 18000-க்கும் மேல் எட்டிய உச்சம், அடுத்தடுத்த வர்த்தகங்களுக்கான திறப்பாக இருந்தது. எனவே, இந்த உச்சம் உண்மையான விலையாக இல்லாமல் கோட்பாட்டு உச்சமாக இருந்தது எனலாம்.

டாக்டர் சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

இரண்டு வாரங்களுக்கு முன் வலுவான ஏற்றத்தின் போக்கில் இருந்த சந்தை, கடந்த வாரத்தில் வாராந்தர அடிப்படையில் ஏற்ற இறக்கங்களுடன் காளையின் போக்கைத் தக்கவைப்பதற்கான முயற்சியுடன் காணப் பட்டது. சந்தை பிரேக் அவுட் ஆன பிறகு, இரண்டு வாரத்திலும் புதிய உச்சத்தை எட்டின. ஆனால், அந்த நிலையைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. இது உச்ச நிலைகளில் காணப்பட்ட பதற்றத்தைக் காட்டிக்கொடுத்தது.

60000 புள்ளிகளைக் கடந்த சென்செக்ஸ் குறியீடும்கூட அந்த நிலையைத் தக்கவைத்துக்கொள்ள முடியாமல் உடைந்தது. வழக்கம்போல உச்ச நிலைகளில் லாபத்தை எடுக்கும் போக்கு உருவானதும் இதற்கு ஒரு காரணம். மாதத் தொடக்கத்தில் வாங்குபவர்களாக இருந்த எஃப்.ஐ.ஐ முதலீட்டாளர்கள் மாத இறுதியில் விற்பனையாளர்களாக மாறினார்கள். சந்தை ஏற்ற இறக்கத்துக்கு உள்ளானதால் வர்த்தகர்களுக்கு சந்தையின் போக்கில் போதிய தெளிவு இல்லை. அதனால் உள்நாட்டு முதலீட்டாளர்களின் வர்த்தகமும் சந்தையைத் தக்கவைக்கும் வகையில் இல்லை. துறை சுழற்சிக்கு ஏற்ப வர்த்தகர்கள் உடனடியாகத் தங்களை மாற்றிக்கொள்வது சற்றுக் கடினமானதாக இருந்தது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இதனால், சந்தை ஒருவித ஊசலாட்டத்துக்கு ஆளானதாகத் தெரிகிறது. புதிய செட்டில்மென்ட் சந்தையின் போக்கில் உற்சாகத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. பொதுவாக, உச்ச நிலைகளில் காணப்படுகிற ஏற்ற இறக்கம் விநியோகத்துக்கான அறிகுறியாக இருக்கும். அப்படி ஏதேனும் நடக்கிறதா என்ற கேள்வி இப்போது எழுகிறது. எனவே, பின்னோக்கிய நகர்வில் 17300 என்ற ஸ்டாப்லாஸை லாங் பொசிஷன்களுக்கு வைத்துக் கொள்ளலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

லஷ்மி ஆர்கானிக் இண்டஸ்ட்ரீஸ் (LXCHEM)

தற்போதைய விலை ரூ.546.80

வாங்கலாம்

சமீபத்தில் இந்தப் பங்கு பட்டியலான பிறகு, நல்ல டிமாண்டில் இருந்து வருகிறது. இதனால், சமீபத்திய காளையின் போக்கில் நல்ல ஏற்றத்தையும் பதிவு செய்தது. அதன் பிறகு, சிறு இறக்கம் கண்ட இந்தப் பங்கு தற்போது மீண்டும் ஏற்றத்துக்கான நகர்வை ஆரம்பித்திருக்கிறது.

எனவே, தற்போதைய விலை யிலும் ரூ.520 வரை இறக்கங் களிலும் வாங்கலாம். 625 - 650 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.510-ல் வைத்துக் கொள்ளவும்.

எம்டார் டெக்னாலஜிஸ் (MTARTECH)

தற்போதைய விலை ரூ.1,477

வாங்கலாம்

சமீபத்தில் பட்டியலான சிறந்த பங்குகளில் எம்டார் டெக்னாலஜிஸ் ஒன்று. கடந்த ஜூலை மாத மத்தியில் கண்ட உச்சத்துக்குப் பிறகு, இறக்கத்தில் இருந்துவருகிறது. தற்போது இறக்கம் முடிந்து ஏற்றம் அடைய தயாராக இருக்கிறது. எனவே, இந்தப் பங்கை தற்போதைய விலையில் வாங் கலாம். வரும் மாதங்களில் 1600 வரை உயரலாம். ரூ.1,375 ஸ்டாப்லாஸ் வைத்துக் கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

வோடஃபோன் ஐடியா (IDEA)

தற்போதைய விலை ரூ.11.85

வாங்கலாம்

இந்தப் பங்கை சில மாதங்களுக்கு முன்பே பரிந்துரைத் தோம். அப்போது மிகக் குறைவான விலையில் இருந்தது. அதன் பிறகு, மெதுவாகவும் நிலையாகவும் ஏற்றம் கண்டு வந்திருக்கிறது. தற்போது டெலிகாம் பங்குகளுக்குச் சாதகமாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. எனவே, ஏற்றம் குறித்த எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளன. இதனால் மீண்டும் இந்தப் பங்கை தற்போதைய விலையில் வாங்க லாம். ஸ்டாப்லாஸ் ரூ.9-ல் வைத்துக்கொள்ளவும்.

தமிழில்: திவ்யா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு