Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

B U Y & S E L L

பிரீமியம் ஸ்டோரி

இந்தியப் பங்குச் சந்தையின் சூழல் காளையின் போக்குக்குச் சாதகமாக இருந்தாலும், ட்ரெண்ட் லைனுக்கு மேலே காணப்படும் சிறு சிறு நகர்வுகளுக்கும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் புதிதாக முதலீடுகளை மேற்கொள்ளும் முன் சிறப்பான மொமென்டம் ஏதும் உண்டாகிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்த்து முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தோம்.

டாக்டர் 
சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

நிலையான ஏற்றத்தின் போக்குக்கு அடிப்படை காரணிகளில் ஒன்று, சிறந்த மொமென்டம். சந்தையில் முந்தைய ஏற்றத்தின் நகர்வு நிஃப்டி 15000 புள்ளிகளைக் கடந்து நகரும் அளவுக்கு வலுவாக இருந்தபோதிலும் அதை சாத்தியப்படுத்தத் தேவையான மொமென்டம் இல்லை என முந்தைய வாரத்திலும் குறிப்பிட்டிருந்தோம். எனவே, ஏற்றத்தின் போக்குக்கான நிலைத்தன்மை குறித்து நமக்கு சந்தேகம் நிலவுகிறது. இதை உறுதி செய்யும் வகையில் சந்தை தொடர்ந்து ஏற்றமடைவதற்கான முயற்சிகளில் தோல்வியடைந்துள்ளது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

கடந்த வாரத்தில் வர்த்தகம் வலுவாகவும் நகர்வுகள் நல்ல வரம்புடனும் ஆரம்பித்தது. நிஃப்டி நகர்வு 15000 நிலையையும் நெருங்கி தொடர் ஏற்றத்துக்கான நம்பிக்கையைக் கொடுத்தது. ஆனால், விலை நகர்வுகள் குறிப்பிட்ட வரம்புடன் சரிந்து காளையின் போக்கில் மிகுந்த ஏமாற்றத்தை உண்டாக்கியது. இன்ட்ரா டே சார்ட்டுகளில் ரிவர்ஸ் தீவு பேட்டர்ன்கள் உருவாகின. இந்த பேட்டர்ன்படி, விலை நகர்வுகள் மீண்டும் அதன் ஆதார இடத்துக்கே திரும்பும். அதன்படி, சந்தை அடுத்தடுத்த நாள்களில் 14500 வரை இறங்கியது. வியாழன் அன்று விடுமுறை இல்லாமல் இருந்தால், இன்னும் மோசமான அளவுக்கு இறங்கியிருக்க வாய்ப்புள்ளது. எஸ்.ஜி.எக்ஸ் இந்த நிலைக்கும் கீழே இறங்கி வர்த்தகம் ஆனதால், வெள்ளிக் கிழமை மீண்டும் சந்தை ஆரம்பித்ததும் இறக்கம் காண நேரிடலாம்.

நிஃப்டி 14500 என்ற நிலைகளில் உருவாகியுள்ள பேட்டர்ன் நகர்வுகள் முடிவுக்கு வந்தபிறகு சந்தை ஓரளவுக்கு பாசிட்டிவ் போக்குக்குத் திரும்பும் என எதிர்பார்க்கலாம். இதற்குக் கீழே 14465 என்ற நிலையில் அடுத்த சப்போர்ட் இருக்கிறது. இந்த நிலையை உடைத்து நகர்ந்தால் டபுள் டாப் பேட்டர்ன் உருவாகும். அது முக்கிய மாற்றங்களைக் கொண்டுவரும்.

எனவே, முதலீட்டாளர்கள் கவனமாக இருந்து பங்குகளைத் தேர்வு செய்ய வேண்டும். முந்தைய முதலீடுகளில் லாபத்தை எடுக்க விரும்பினால் எடுக்கலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

ஐடியா (IDEA)

தற்போதைய விலை ரூ.8.80

வாங்கலாம்

நீண்டகால இறக்கத்தின் போக்குக்குப் பிறகு இந்தப் பங்கில் கடந்த வாரம் சில பாசிட்டிவ் நகர்வுகளைப் பார்க்க முடிந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தாதாரர்கள் எண்ணிக்கை கூடியிருப்பது தொடர்பாக வந்திருக்கும் செய்தி பங்கின் நகர்வுக்கு உதவியது. இன்டர் மீடியட் ரெசிஸ்டன்ஸ் ட்ரெண்ட் லைனுக்கு மேலே பிரேக்அவுட் ஆகி நகரும் நிலையில் உள்ளது. குறுகிய காலத்தில் ரூ.10 - 11 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.7.50 உடன் இந்தப் பங்கை வாங்கலாம்.

பல்ராம்பூர் சீனி (BALRAMCHIN)

தற்போதைய விலை ரூ.318.50

வாங்கலாம்

ஏற்கெனவே பலமுறை இந்தப் பங்கை வாங்க நாங்கள் பரிந்துரை செய்திருக்கிறோம். இதுவரை இந்தப் பங்கு இரு மடங்கு விலை ஏற்றம் கண்டிருக்கிறது.

தற்போதைய விலையில் லாபத்தை எடுப்பவர்கள் எடுக்க லாம். ரூ.270 வரை இறங்கினால், கொஞ்சம் பொறுத்திருந்து மீண்டும் இந்தப் பங்கை வாங்கலாம்.

ஏ.ஐ.ஏ இன்ஜினீயரிங் (AIAENG)

தற்போதைய விலை ரூ.1,908.90

வாங்கலாம்

நீண்டகால இலக்குக்கு சில பங்குகளை வாங்க சரியான தருணம் இது. பல மிட்கேப் பங்குகள் நன்றாக ஏற்றம் கண்டதில் அவை மதிப்பு உயர்ந்திருக்கிறது. ஆனால், சில நல்ல பங்குகளின் நகர்வுகள் ஒருங்கிணைப்புக்கு உள்ளாகி நிலையான போக்கில் இருக்கின்றன. அவற்றில் ஏ.ஐ.ஏ பங்கும் ஒன்று.

1,815 என்ற நிலையில் நல்ல சப்போர்ட்டுடன் 12 மாத இலக்கில் இந்தப் பங்கில் முதலீடு செய்யலாம். இந்த சப்போர்ட் நிலைக்குக்கீழ் ஸ்டாப்லாஸ் வைத்துக்கொள்ளவும். பங்கு விலை ரூ.2,050-2,100 வரை உயர வாய்ப்புள்ளது.

தமிழில்: திவ்யா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு