பிரீமியம் ஸ்டோரி

இந்தியப் பங்குச் சந்தையில் சில எச்சரிக்கையான நகர்வுகளைப் பார்க்க நேர்ந்ததால், கடந்த வாரத்தில் இறக்கத் துக்கான ஸ்டாப்லாஸ் நிலையைப் பரிந்துரைத்திருந்தோம்.

டாக்டர் சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

ஆனால், சந்தை சிறப்பாகச் செயலாற்றியதால், அதற்கான தேவை இருக்கவில்லை. கடந்த வெள்ளியன்று மற்றும் ஓர் இறக்கம் காணப்பட்டபோது உச்ச நிலையில் பாட்டம் ஒன்று உருவானது. அதிலிருந்து சந்தை சற்று முன்னேற்றம் காணத் தொடங்கியது.

கடந்த வாரத்தில் குறிப்பிட்டதுபோல், சந்தையில் ஏற்ற இறக்கம் இருந்தது. உச்ச நிலைகளில் லாபத்தை எடுக்கும் போக்கும் இன்னமும் காணப்படுகிறது. மொத்தத்தில், சந்தை நகர்வுகளின் வரம்பானது வர்த்தகர்கள் பங்கேற்க போதுமான வாய்ப்புகளை வழங்கும் வகையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. சரிவு குறித்த பயத்தில் இருந்தும் வெளிவரவில்லை அதே நேரம், சந்தையின் ஏற்றத்தைத் தவறவிட்டு விடவும் தயாராக இல்லை.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பேங்க் நிஃப்டியும் பிரதான சந்தை குறியீடுகள் போலவே, கடந்த வாரத்தில் ஒரு வரம்புக்குள் வர்த்தகமானது. இதிலும் உச்சநிலைகளில் லாபத்தை எடுப்பதற்கான போக்கு காணப்படுகிறது. அதேபோல், இறக்க நிலைகளில் டிமாண்ட் உருவாவதும் பார்க்க முடிகிறது. ஆனாலும் மிட், ஸ்மால் 400 குறியீட்டில் நகர்வுகள் வித்தியாசமாக இருந்தன. அதில் சில புதிய உச்சங்களைக் காண முடிந்தது. இதன்மூலம் சந்தையின் குறியீடல்லாத பிரிவுகளில் செயல்பாடு தொடர்ந்து இருப்பது உறுதியாகிறது.

எனவே, சந்தைக் குறியீடுகள் இறக்கம் கண்டாலும் சிறு முதலீட்டாளர்களின் வர்த்தகம் தொடர்ந்து மிட்கேப், ஸ்மால்கேப் பிரிவுகளில் உற்சாகம் குறையாமல் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

மேலும், சந்தைக்குள் முதலீடுகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. தற்போது சந்தை முதலீடு வரவு சார்ந்தும், செய்திகள் சார்ந்தும் நகர்கிறது. அடுத்த வாரத்தில் நிறுவனங்களின் காலாண்டு நிதிநிலை முடிவுகள் வரத் தொடங்க இருப்பதால், அதிகமான செய்திகள் காத்திருக் கின்றன. இந்த முடிவுகள் சந்தையின் செயல்பாட்டை மந்தமாக்கும் சர்வதேசக் காரணிகளிலிருந்து விடுவித்து முன்னேற்றத்துக்குக் கொண்டுசெல்லும் என எதிர்பார்க்கலாம்.

உயரும் கச்சா எண்ணெய், எரிவாயு விலை, வலுவடையும் டாலர், வலுவிழக்கும் தங்கம், ஏற்ற இறக்கம் அதிகமாகக் காணப்படும் கிரிப்டோ வர்த்தகம் உள்ளிட்டவை வர்த்தகர்களின் சென்டிமென்டில் பாதிப்பை ஏற்படுத்துவதில் முக்கியமானவை. நிறுவனங்களின் காலாண்டு நிதிநிலை முடிவுகள் உள்நாட்டு வர்த்தகர்களுக்கு உற்சாகமளிப்பதாக இருக்கும்.

எனவே, வரும் வாரத்தில் பங்கு சார்ந்த நகர்வுகள் பிரதானமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். வரம்புகளில் நடக்கும் வர்த்தகம் துடிப்பான வர்த்தகர்களை இறக்கங்களில் வாங்கவும், ஏற்றங்களில் விற்கவும் தூண்ட வாய்ப்புள்ளது. எனவே, கவனம் தேவை!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

வொக்ஹார்ட் பார்மா (WOCK PHARMA)

தற்போதைய விலை ரூ.483.80

வாங்கலாம்

வர்த்தகர்கள், முதலீட்டாளர் களிடையே இந்தப் பங்கு மிகவும் பிரபலமாக இருந்து வருவதால், அடிக்கடி இந்தப் பங்கை பரிந்துரைக்கிறோம்.

கடந்த சில வாரங்களாகவே இதில் மெதுவாகக் காணப்படும் ஏற்றத்துக்கான போக்கு தற்போது வேகமெடுக்கத் தயாராக உள்ளது. அதற்கேற்ப மொமன்டம், வால்யூம் ஆகியவற்றிலும் முன்னேற்றம் காணப்படுகிறது.

எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். குறுகிய காலத்தில் 530 - 550 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.460-ல் வைத்துக்கொள்ளவும்.

ஹெச்.இ.ஜி (HEG)

தற்போதைய விலை ரூ.2,516.00

வாங்கலாம்

பல வாரங்களாகவே இந்தப் பங்கு நல்ல பிரேக்அவுட் நகர்வுக்காகக் காத்திருக்கிறது. தற்போது அதற்கான நேரம் வந்திருக்கிறது. வியாழன் அன்று இந்தப் பங்கில் காணப்பட்ட நகர்வு வரம்பு ஏற்றத்துக்கான போக்கு உருவானதன் அறிகுறியை உறுதிசெய்கிறது.

எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். ரூ.2,750 வரை உயர வாய்ப்புள்ளது. ரூ.2,400-ல் ஸ்டாப்லாஸ் வைத்துக் கொள்ளவும்.

ஃபைன் ஆர்கானிக்ஸ் (FINEORG)

தற்போதைய விலை ரூ.3,456.90

வாங்கலாம்

கெமிக்கல் பங்குகளுக்கு சந்தையில் நல்ல டிமாண்டில் இருந்து வருகிறது. இதில் கவனிக்க வேண்டியவை நிலையான ஏற்றத்தின் போக்கு காணப்படும் பங்குகள்.

இந்தப் பங்குகளில் ஒவ்வொரு இறக்கத்துக்குப் பிறகும் ஏற்றத்துக்கான நகர்வுகள் காண முடிகிறது. இத்தகைய போக்கு ஃபைன் ஆர்கானிக்ஸில் பார்க்க முடிகிறது. புதிய உச்சங்களை நோக்கி நகர்கிறது.

எனவே, தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். குறிப்பிட்ட காலத்தில் ரூ.3,700 வரை உயர வாய்ப்புள்ளது. ரூ.3,250ல் ஸ்டாப்லாஸ் வைத்துக் கொள்ளவும்.

தமிழில்: திவ்யா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு