பிரீமியம் ஸ்டோரி

கடந்த அக்டோபர் 1-ல் சந்தித்த இறக்கத்துக்குப் பிறகு, மீண்டு வந்த பங்குச் சந்தை அக்டோபர் 6-ம் தேதி மட்டுமே இறக்கம் கண்டது. மற்ற தினங்களில் ஏற்றத்தின் போக்கில் அனைத்துக் குறியீடுகளும் புதிய உச்சங்களை எட்டின.

டாக்டர் சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

அவற்றின் நகர்வு வரம்பின் அகலங்களும் பிரதான குறியீடுகளான நிஃப்டி, பேங்க் நிஃப்டி போலவே நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளன. என்.எஸ்.இ 500, மிட் மற்றும் ஸ்மால் 400 ஆகிய குறியீடுகள் புதிய உச்சங் களைக் கண்டன. இதன்மூலம் சந்தையில் முதலீட்டாளர்களின் ஈடுபாடு பரவலாக இருப்பதை உணர முடிகிறது.

இதனால் சிறு முதலீட்டாளர்களின் முதலீடு சந்தைக்குள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன. சந்தை புதிய உச்சங்களை நோக்கி நகர்வதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணியாக உள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து முதலீடுகளை மேற்கொண்டு வந்த எஃப்.ஐ.ஐ முதலீட்டாளர்கள் தற்போது தீவிரமாக முதலீடுகளை மேற்கொள்ளாதபட்சத்திலும் சந்தை தொடர்ந்து ஏற்றத்தின் போக்கைத் தக்கவைத்திருக்கிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

கடந்த வார கட்டுரையில் குறிப்பிட்டதுபோல, மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பிரிவுகளில் வலுவான ஏற்றத்தின் போக்கு இருப்பதால்தான் சந்தையில் காளையின் சென்டிமென்ட்டைத் தக்கவைத்துக்கொள்ள காரணமாக இருக்கிறது என்பதைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது.

துறை சார்ந்த குறியீடுகளும் சந்தையின் நகர்வுகளில் பங்கெடுத்துள்ளன. சில துறை சார்ந்த குறியீடுகளைத் தவிர, பெரும்பாலான குறியீடுகள் 52 வார உச்சத்தை எட்டியுள்ளன. இது பாசிட்டிவ்வான விஷயமாக இருப்பதுடன், இனிவரும் நாள்களில் ஏதேனும் இறக்கத்துக்கு சந்தை ஆளானாலும் இறக்கமானது பெரிய அளவில் இல்லாமல் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என்று எதிர்பார்க்கலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

எனவே, காளையின் போக்கில் நம்முடைய சென்டி மென்ட்டைத் தொடரலாம். வாராந்தர அடிப்படையிலான இறக்கங்களை வாங்குவதற்கான வாய்ப்புகளாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். தற்போது காலாண்டு நிதிநிலை முடிவுகள் வெளிவரத் தொடங்கி இருக்கின்றன. இவை சந்தையின் புதிய ஊக்குவிப்பு காரணிகளாக அமையும். இனி சந்தையில் குறிப்பிட்ட பங்குகள் சார்ந்து நகர்வுகள் இருக்கும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஜி.இ பவர் (GEPIL)

தற்போதைய விலை ரூ.331.50

வாங்கலாம்

மிட்கேப், ஸ்மால்கேப் பிரிவு களில் சந்தையின் போக்கில் சிறப்பாகச் செயல்படும் பங்கு களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான செயலாகும். அப்படி யான பங்குகளில் ஒன்று ஜி.இ பவர். தற்போது மின்துறை சார்ந்த பங்குகள் நல்ல டிமாண் டில் உள்ளன. அந்தத் தாக்கம் இந்தப் பங்கிலும் இருக்கலாம்.

எனவே, இந்தப் பங்கு தொடர்ந்து ஏற்றத்தின் போக்கில் இருக்கும். குறுகிய காலத்தில் 360 - 400 என்ற இலக்கு விலையை நோக்கி நகரும் என எதிர் பார்க்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.300 என வைத்துக்கொள்ளவும்.

அசோக் லேலாண்ட் (ASHOKLEY)

தற்போதைய விலை ரூ.146.85

வாங்கலாம்

சந்தை ஏற்றத்தில் ஆட்டோ மொபைல் துறை பங்குகள் மெதுவாகவே நகர்ந்தன. ஆனால், தற்போது வேகமெடுக்கத் தயாராக உள்ளன. அசோக் லேலண்ட் பங்கும் அதன் பிரேக் அவுட் நிலையை எட்டுவதற்கான சாத்தியங்களுடன் இருக்கிறது.

குறுகிய காலத்தில் ரூ.170 வரை உயர வாய்ப்புள்ளது. எனவே, தற்போதைய விலையில் ரூ.140 ஸ்டாப்லாஸுடன் வாங்கலாம்.

டிம்கென் இந்தியா (TIMKEN)

தற்போதைய விலை ரூ.1,872.70

வாங்கலாம்

இரண்டாம் காலாண்டு நிதிநிலை முடிவுகள் வெளிவரும் காலம் தொடங்கியுள்ள நிலையில் டிம்கென் இந்தியா பங்கு மீது கவனம் குவிந்துள்ளது. பாசிட்டிவ்வான முடிவுகள் காரணமாக இதில் வலுவான விலை நகர்வு காணப்படுகிறது.

இந்தப் பங்கின் நகர்வுகள் ஏற்கெனவே ஏற்றத்தின் போக்கில் இருப்பதால், தற்போது புதிய முதலீடுகள் உள்ளே வருவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. எனவே, குறுகிய காலத்தில் ரூ.2,200 வரை உயர வாய்ப்புள்ளது.

தமிழில்: திவ்யா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு