பிரீமியம் ஸ்டோரி

நீண்ட நாள்களுக்குப் பிறகு, சந்தையில் இறக்கத்தின் போக்கில் சில நகர்வுகளைப் பார்க்க முடிந்தது. கடந்த வாரத்தில் ஒரே ஒரு நாள் தவிர, தொடர்ச்சியாக சீரான இறக்கத்தின் போக்கு சந்தையில் காணப்பட்டது. இதனால் இண்டெக்ஸானது கடந்த வாரத்தில் எக்ஸ்பைரி வர்த்தகம் வரை தொடர் இறக்கத்துக்குள்ளானது. நிஃப்டி 18000 என்ற நிலையில் வர்த்தகர்களின் செயல்பாடுகளில் பெரிய ஷார்ட் பொசிஷன்கள் காணப்பட்ட தால், சந்தை மீள்வதற்கான நம்பிக்கை சிறிதளவு உண்டானது. ஆனால், அன்றைய நாள் முழுவதும் தொடர்ந்து பங்கு விற்பனைக்கான அழுத்தம் காணப்பட்டதால், அது வெற்றி அடையவில்லை. இதனால் நிஃப்டி சமீபத்தில் எட்டிய உச்சமான 18000 புள்ளிகளுக்குக் கீழே நிறைவு செய்தது.

பங்குகள்... வாங்கலாம்...  விற்கலாம்!

சந்தையில் ஏற்றத்துக்கான சென்டிமென்ட் தொடர்ந்து இருப்பதற்குக் காரணமாக பேங்க் நிஃப்டி இருந்தது. கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து ஏற்றம் கண்டதன் மூலம் பேங்க் நிஃப்டி சந்தையின் போக்கில் பெரும்பங்கு வகித்தது. ஆனால், அதுவும் எக்ஸ்பைரி தினத்தில் திடீர் முடிவுக்கு வந்தது. இதனால் நிஃப்டியை மேலும் இறக்கத்தை நோக்கி இழுக்கக் காரணமானது.

கடந்த வாரத்தில் தொடர் இறக்கம் காணப்பட்டதற்கு பல காரணங்கள். அவற்றில் சில: ஐ.பி.ஓ விண்ணப்பங்களுக்கு முதலீடுகள் திருப்பப்பட்டுள்ளன. இதனால் இரண்டாம் நிலை சந்தையில் முதலீடுகள் குறைந்தது. செபியின் கண்காணிப்பு நடவடிக்கைகளால் லாப வரம்பு குறித்த கவலையை உண்டாக்கியுள்ளது. எனவே, தரகு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் பொசிஷன்களைக் குறைத்துக் கொள்ள அறிவுறுத்தும் கட்டாயத்துக்கு ஆளானார்கள். எஃப்.ஐ.ஐ முதலீட்டாளர்கள் தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த ஆண்டில் முதன்முறையாக எஃப்.ஐ.ஐ முதலீடுகள் நெகட்டிவ் போக்கில் உள்ளன. நிறுவனங்களின் சிறப்பான நிதிநிலை முடிவுகள் ஏற்கெனவே சந்தையில் போதுமான நகர்வுகளை ஏற்படுத்திவிட்டதாகத் தெரிகிறது.

பங்குகள்... வாங்கலாம்...  விற்கலாம்!

இப்படியான சூழலில், சந்தையின் போக்கு வியாழன் அன்று எக்ஸ்பைரி வரை இறக்கத்தில் தொடர்ந்தது. இதனால் அடுத்த தொடருக்கான பொசிஷன்கள் நெகிழ்வான போக்கைத் தொடர வாய்ப்புள்ளது. வாய்ப்பு கிடைத்தால் காளையின் போக்கு உள்ளே வரும் சாத்தியமுள்ளது. விலைகள் தினசரி சார்ட் நகர்வுகளில் 25 இ.எம்.ஏ (exponential moving average) என்ற நிலைக்கு இறக்கம் கண்டுள்ளது. இந்த நிலையை ஏப்ரல்-மே இறக்கங்களின்போதும், சமீபத்திலும் சப்போர்ட் நிலையாகக் கொண்டிருந்தது. இந்தக் கட்டத்தில் சந்தையின் போக்கு தாக்குப் பிடித்தால் இந்த இறக்கமானது மற்றுமொரு சப்போர்ட் நிலையாக மாறும் என்று எதிர்பார்க்கலாம்.

தற்போது காளையின் போக்கு சற்றுத் தடுமாற்றம் கண்டுள்ளது. ஆனால், முதலீட்டாளர்கள் வெளியேறும் அளவுக்கு மோசமாகவில்லை. நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகளும் சாதகமாகவே அமைந்துள்ளன. இதனால் பங்கு விற்பனைக்கு வர்த்தகர்களைத் தூண்டும் சாத்தியங்கள் இல்லை. எனவே, குறிப்பிட்ட பங்குகள் சார்ந்த விலை நகர்வுகளை வரும் வாரங்களில் காணலாம். இதனால் இறக்க நகர்வுகளை சிறப்பான பங்குகளை வாங்குவதற்கான வாய்ப்புகளாகவே பார்க்கலாம்.

பங்குகள்... வாங்கலாம்...  விற்கலாம்!

மிண்டா கார்ப் (MINDACORP)

தற்போதைய விலை ரூ.148.80

வாங்கலாம்

இந்த ஆட்டோ உதிரிபாக நிறுவனப் பங்கு நீண்ட காலத்துக்கு நிலையான போக்கில் இருந்துவருகிறது. தற்போது இதன் ஏற்றத்தின் போக்கு தொடரும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. வலுவான வால்யூம் மற்றும் புதிய மொமன்டம் இதன் வர்த்தகத்தில் தெரிகிறது. இதனால் புதிதாக இதில் முதலீடுகள் வரும் அறிகுறிகள் தெரிகின்றன. எனவே, ரூ.220 இலக்கு விலை. ஸ்டாப்லாஸ் ரூ.135-ல் வைத்துக்கொள்ளவும்.

டி.வி.எஸ் மோட்டார் (TVSMOTOR)

தற்போதைய விலை ரூ.653.05

வாங்கலாம்

டி.வி.எஸ் மோட்டார் பங்கின் சார்ட் பேட்டர்ன்களில் நிலையின் ஏற்றத்தின் போக்கு காணப்படுகிறது. முதல் அரை யாண்டில் இந்தப் பங்கின் நகர்வுகள் சிறப்பான ஏற்றத்தின் போக்கில் இருந்தன. ஆனால், அதன்பிறகு பெரிய அளவிலான ஒருங்கிணைப்புக்கு உள்ளானது. தற்போது விலை நகர்வானது அதன் உச்சத்துக்கு வந்து பிரேக் அவுட் ஆகி ஏற்றம் அடையத் தயாராக இருக்கிறது. குறுகிய காலத்தில் ரூ.700-720 வரை உயர வாய்ப்புள்ளது. ரூ.625 ஸ்டாப் லாஸ்.

பிர்லா கார்ப்பரேஷன் (BIRLACORPN)

தற்போதைய விலை ரூ.1,434.00

வாங்கலாம்

நிலையான வளர்ச்சியைக் கொண்டுள்ள துறைகளில் ஒன்றாக சிமென்ட் துறை உள்ளது. இந்தத் துறையில் உள்ள சிறந்த பங்குகள் சந்தை இறக்கங்களின்போது விலை இறக்கம் காண்பதற்கு மாறாக, கன்சாலிடேஷன் போக்குக்கு உள்ளாயின. அவற்றில் சிறந்த உதாரணமாக பிர்லா கார்ப் இருப்பதை அதன் சார்ட் நகர்வுகள் உணர்த்துகின்றன.

இதில் விலை நகர்வுகள் பக்கவாட்டில் காணப்பட்டதுடன், மொமன்டமும் தொடர்ந்து தக்கவைத்துள்ளது. எனவே, ஏற்றத்தின் போக்கைத் தொடரக் காத்திருக்கிறது எனலாம். அடுத்த ஆறு மாதங்களில் 1700 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் 1350-ல் வைத்துக்கொள்ளவும்.

தமிழில்: திவ்யா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு