பிரீமியம் ஸ்டோரி

பங்குச் சந்தையைப் பொறுத்தவரை பண்டிகைக்கால உற்சாகத்தை அது பிரதிபலிக்கவில்லை. முடிந்த வாரத்தில் சந்தை ஏற்ற இறக்கமான நிலையிலேயே வர்த்தகமானது. வாரத்தின் தொடக்கமானது வலுவான ஏற்றத்துடன் சிறப்பாகத் தொடங்கிய நிலையில் முந்தைய வாரத்தில் காணப்பட்ட இறக்கத்தின் போக்கு முடிவுக்கு வந்திருப்பதைப் போல தோன்றியது. ஆனால், தொடர்ந்து காளையின் போக்கு நீடிப்பதற்குத் தேவையான பங்குகள் வாங்கும் செயல்பாடு சாதகமாக அமையவில்லை என்பதை சந்தை உணர்ந்தது.

டாக்டர் சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

இதனால் திடீரென்று சந்தையின் பொசிஷன்கள் தங்களுடைய நிலையிலிருந்து பின்வாங்கின. இது புதன்கிழமை மேலும் அதிகரித்து சந்தையின் இறக்கமும் அதிகமாகக் காணப்பட்டது. முந்தைய வார இறக்க நிலையே இந்த வாரத்திலும் நிலைகொண்டது. தீபாவளி அன்று முகூர்த்த வர்த்தகம் உள்ளது என்றாலும், அது வெறும் சம்பரதாய நிகழ்வாகப் பெரும்பாலானோரால் பார்க்கப்படுவதால் அதில் பெரிதாகச் செயல்பாடுகள் இருப்பதில்லை. சந்தையின் போக்கிலும் எந்த மாற்றத்தையும் உண்டாக்குவதில்லை.

பிரதான சந்தையும் சற்று இறக்கம் காண ஆரம்பித்து, அதன் எல்லா பிரிவுகளிலும் லாபத்தை எடுக்கும் போக்கும் காணப்பட்டது. பலவீனமான வர்த்தகர்கள் தங்களின் பொசிஷன்களிலிருந்து வெளியேறுகின்றனர். இந்தப் போக்கு சந்தையை அதன் பொசிஷன் களின் அடிப்படையில் மென்மையானதாக மாற்றுவதற்கான சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது. இது ஒருவகையில் நல்ல விஷயம்தான். சந்தையின் போக்கு மீண்டும் பாசிட்டிவாக மாறும் வாய்ப்புகள் உருவாகும். அதற்கு சந்தைக்குச் சாதகமான செய்திகள் வருவது அவசியம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

மேலும் சந்தையில் அமெரிக்க ஃபெடரலின் டேப்பர் விவகாரத்தின் விளைவுகள் குறித்த எச்சரிக்கை உணர்வும் காணப்பட்டது. சாதகமாக அமையாவிட்டால் பெரிய எதிர்ப்புகளைச் சந்திக்க நேரிடலாம். பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் இரண்டாம் காலாண்டு நிதிநிலை முடிவுகள் வெளியாவது முடிவுக்கு வந்துவிட்டது. நிதி நிலை முடிவுகள் இதுவரை எதுவும் பெரிய அளவில் சந்தையின் செயல் பாட்டை ஊக்கப்படுத்தவில்லை. ஒருவேளை அதற்கான சாத்தியங்களுடன் உள்ள நிதிநிலை முடிவுகள் ஏற்கெனவே சந்தையில் தேவையான உந்துதலை நிறைவு செய்திருக்கலாம்.

நீண்ட வார விடுமுறைக்குப் பிறகு தொடங்கும் வரும் வாரத்தில் புதிய உந்து காரணிகளும் செய்திகளும் சந்தை நகர்வுகளைத் தீர்மானிக்கலாம். பிரதான சப்போர்ட் நிலையானது இன்னும் நிஃப்டி 17400 என்ற நிலையிலேயே உள்ளது. இந்த நிலையைச் சந்தை தக்கவைத்துக்கொள்ளும் வரை லாங் பொசிஷன்களைக் கொண்டிருப்பவர்கள் கவலைப் படத் தேவையில்லை.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

கே.பி.ஆர் மில் (KPR MILL)

தற்போதைய விலை ரூ.495.90

வாங்கலாம்

பங்கு விலை ஒருங்கிணைப்பு (கன்சாலிடேஷன்) நிகழ்வுக்குப் பிறகு, உண்டாகும் பிரேக் அவுட் அறிகுறிகள் எப்போதும் பாசிட்டிவானவை. அத்தகைய போக்கை கே.பி.ஆர் மில் நிறுவனப் பங்கு சார்ட் பேட்டர்ன்களில் பார்க்க முடிகிறது. எனவே, தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம்.

குறுகிய காலத்தில் ரூ.600 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.470-ல் வைத்துக் கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

வி.ஆர்.எல் லாஜிஸ்டிக்ஸ் (VRLLOG)

தற்போதைய விலை ரூ.431.00

வாங்கலாம்

சிறப்பான காலாண்டு நிதி நிலை முடிவுகளைக் கொண்ட நிறுவனப் பங்குகளுக்குச் சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. கடந்த வார்த்தில் அப்படியான அம்சங்களுடன் விஆர்எல் லாஜிஸ்டிக்ஸ் பங்கு விளங்கியது. இந்தப் பங்கில் நகர்வின் மீட்சி சிறப்பாக உள்ளது.

2020-ல் அடைந்த இறக்கத்திலிருந்து தொடர்ந்து சீரான ஏற்றத்தின் போக்கில் இருந்து வருகிறது. தற்போது அதன் வரலாற்று உச்சத்தை உடைக்கும் திறனுடன் இருக்கிறது. அடுத்த ஆறு மாதங்களில் புதிய உச்சமான ரூ.530 என்ற நிலையை எட்ட வாய்ப்புள்ளது.

ரூ.400 ஸ்டாப்லாஸுடன் இந்தப் பங்கை வாங்கலாம்.

லார்சன் & டூப்ரோ (L&T)

தற்போதைய விலை ரூ.1892.75

வாங்கலாம்

பொதுவாக மிகப் பெரிய நிறுவனப் பங்குகளில் சிறப்பான ஏற்றத்தின் போக்கு உருவாகும்போது அதில் நிறுவன முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறலாம். எல் அண்ட் டி பங்கில் அத்தகைய சாத்தியங்கள் தெரிவதால் நிலையான ஏற்றத்தை எதிர்பார்க்கலாம். மேலும், ஏற்றத்தின் நகர்வு தொடரும் என்று எதிர்பார்க்கலாம். ரூ.1,975 என்ற இலக்கு விலையுடன் இந்தப் பங்கை வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.1,850-ல் வைத்துக்கொள்ளவும்.

தமிழில்: திவ்யா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு