Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

முந்தைய வாரத்தில் காணப்பட்ட தொடர் வீழ்ச்சியை அடுத்து கடந்த வாரத்திலும் பங்குச் சந்தை அச்சுறுத்தும் வகையில் அதிக சரிவுகளுடன் காணப்பட்டது.

டாக்டர் சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

லோவர் டாப்-லோவர் பாட்டம் பேட்டர்ன் கடந்த வாரத்திலும் தொடர்ந்த நிலையில், திங்களன்று அக்டோபர் மாத இடையில் அடைந்த உச்சத்திலிருந்து 7% இறக்கம் அடைந்த பிறகு சற்று பின்வாங்கியது. இதற்கு முன்பு 2021 பிப்ரவரி-ஏப்ரல் காலத்தில் காணப்பட்ட இறக்கத்தின் போக்கு போலவே, தற்போதைய போக்கும் இருக்கிறது.

ஆனாலும் முந்தைய இறக்கம் அதிக காலம் எடுத்துக்கொண்டது மட்டுமல்லாமல், பெரும்பாலும் ஒன்றின்மேல் ஒன்று என்ற வகையிலும் நகர்வுகள் காணப்பட்டன.

ஆனால், இந்த முறை நகர்வுகள் சற்று வித்தியாசமான போக்கில் உள்ளது. இதனால் உடனடியாக மீண்டுவரவில்லை எனில், சந்தையின் போக்கு கடினமானதாக இருக்கலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

கடந்த வாரத்தில் நாம் குறிப்பிட்டது போல, முந்தைய ஸ்விங் இறக்க நிலையான 17500 என்ற நிலையைத் தாண்டி இறங்கினால், தொடர் இறக்கம் காணப்படும் என்று சொல்லி இருந்தோம். அதன்படியே நகர்வு அந்த நிலையைச் சோதித்தது. இந்த நிலையைத் தாண்டி இறங்கியதுடன், மீண்டும் முந்தைய சப்போர்ட் நிலைக்கு மீண்டுவருவதற்கு முன் நிஃப்டி 17216 வரை இறங்கியது.

ஒருவேளை, இந்த இறக்கத்தின்போக்கில் நிஃப்டியின் அதிகபட்சமாக 17500 வரை இறங்கலாம். இந்த நிலையைப் பாதுகாக்கும் வகையில் ஆப்ஷன் டிரேடர்கள் செயல்பாடு காணப்பட்டது. கூடவே, மாதாந்தர எக்ஸ்பைரி இந்த அதிகபட்ச ஸ்விங்கைத் தாண்டி வெற்றிகரமாக நகர்ந்தது.

கடந்த வாரத்தின் மூன்று வர்த்தக நாள்களில் நிஃப்டியின் நகர்வு மிகக் குறைவான வரம்பில் காணப்பட்டதால், சந்தையின் சென்டிமென்டில் பாதிப்பு அதிகமாக இருந்தது. முன்பு காணப்பட்டது போன்ற வலுவான ஏற்றத்தின் போக்கு இல்லாததால் வர்த்தகர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.

ஆனால், புதிதாகப் பட்டியலான பங்குகள் சிறப்பான செயல்பாட்டில் உள்ளன. பேடிஎம் பங்கும் அதன் ஆரம்ப வீழ்ச்சியிலிருந்து மீண்டுவந்தது. பிற புதிய வரவுகளிலும் வர்த்தகம் குறிப்பிடும் வகையில் காணப்பட்டது. இதனால் ஸ்மால் மற்றும் மிட்கேப் பிரிவுகள் மீதான சென்டிமென்டில் மீட்சியைப் பார்க்க முடிந்தது. சந்தைக்கான செய்திகளும் குறைவாகவே இருந்ததால், லார்ஜ்கேப் பிரிவுகளில் மந்தநிலை தொடர்ந்தது.

தற்போது எக்ஸ்பைரியும் முடிந்துவிட்ட நிலையில், சந்தை இனி சாதகமான காலத்தை எதிர்நோக்கி இருக்கிறது. தற்போது நிஃப்டியின் பிரதான சப்போர்ட் இறங்கி 17000 நிலையில் உள்ளது.

மேலும், நிஃப்டி நகர்வுகள் 17800 என்ற நிலையைத் தாண்டி நகர்வதற்குக் கடினமானதாகவே காணப்படுகின்றன. எனவே, சந்தையின் போக்கைத் தீர்மானிக்கும் விதமான நகர்வுகள் உருவாகும் வரை இந்த வரம்பில் முடிவுகளை எடுக்கலாம். சந்தையின் செயல்பாடு பங்குகள் சார்ந்ததாகவே இருக்கும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

நியோஜென் கெமிக்கல்ஸ் (NEOGEN)

தற்போதைய விலை ரூ.1515.00

வாங்கலாம்

சமீபத்தில் பட்டியலான பங்கு களில் நிலையான ஏற்றத்தின் போக்கு காணப்படும் ஒரு பங்காக நியோஜென் உள்ளது. இந்த நிறுவனம் பேட்டரிகளில் பயன்படுத்தப்படும் ரசாயனங் களை உற்பத்தி செய்வதால், எலெக்ட்டிரிக் வாகனத்துறை சார்ந்த பங்கு என்ற வகையிலும் பிரபலமாக உள்ளது. இதன் விலை நகர்வுகள் நல்ல மொமன்டத்துடன் நிலைத்து காணப்படுகிறது. தொடர்ந்து இதில் முதலீடுகள் வந்தவண்ணம் உள்ளன.

எனவே, தற்போதைய விலையிலும் இறக்கத்திலும் இந்தப் பங்கை வாங்கலாம். குறுகிய காலத்தில் ரூ.1,650 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப் லாஸ் ரூ.1,450-க்குக் கீழ் வைத்துக் கொள்ளவும்.

நசாரா டெக்னாலஜிஸ் (NAZARA)

தற்போதைய விலை ரூ.2,374.00

வாங்கலாம்

கேமிங் துறை எதிர்காலத்துக் கான வாய்ப்புகளைத் திறக்கும் புதிய திறவுகோலாக உள்ளது. இந்தத் துறையில் சந்தையில் பட்டியலாகியுள்ள ஒரே பங்கு நசாரா டெக்னாலஜிஸ்.

இந்தப் பங்கில் அதிரடி ஏற்ற நகர்வுகள் காணப்பட்ட நிலையில், சமீபத்தில் திடீர் இறக்கத்துக்கு உள்ளானது. இது 61.8% ரீட்ரேஸ்மென்ட் வரை நகர்ந் துள்ளது.

தற்போது இந்த நிலையிலிருந்து ‘சுத்தி வடிவ மீட்சி’ உருவாகும் போக்கு காணப்படுகிறது. எனவே, குறுகிய காலத்தில் ரூ.2,800 வரை மீண்டுவர வாய்ப்புள்ளது. எனவே, ரூ.2,100 ஸ்டாப்லாஸுடன் இந்தப் பங்கை வாங்கலாம்.

கிளீன் சயின்ஸ் (CLEAN)

தற்போதைய விலை ரூ.2,208.90

வாங்கலாம்

அக்டோபர் மாதத்திலிருந்து இந்தப் பங்கில் இறக்கத்தின் போக்கு காணப்படுகிறது. தற்போது இந்த இறக்கமானது முடிவுக்கு வந்து ஒருங்கிணைப்பு நிலையைத் தாண்டி நகர்ந்து புதிய உச்சங்களை எட்டத் தயாராக உள்ளது. விரைவில் ரூ.2,350 வரை உயர வாய்ப்புள்ளது. எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.2,100-க்குக் கீழ் வைத்துக்கொள்ளவும்.

தமிழில்: திவ்யா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism