Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

கடந்த வாரத்தில் ‘‘சந்தையின் போக்கு குறித்த எதிர்பார்ப்புகள் தற்காலிகமான தாக இருக்கிறது. எனவே, சந்தைக்குள் முதலீடுகளைக் கொண்டு செல்லும் முன், கவனமாக இருக்கவும்’’ என்று கூறியிருந்தோம்.

டாக்டர் சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

அதற்கேற்ப பங்குச் சந்தை வரையறுக்கப் பட்ட வரம்புக்குள்ளாகவே வர்த்தகமானது. சந்தையின் இறக்கமானது முந்தைய வாரத்தின் இறக்க நிலைக்கு இறங்கவில்லை. அதே சமயம், சமீபத்திய உச்சங்களை எட்டுவதற்கான பலத்தையும் சந்தையால் பெற முடியவில்லை.

உண்மையில் கடந்த வார வர்த்தகம் கடும் இறக்கத்துடன் தொடங்கியது. இது சந்தையின் போக்கு குறித்த எதிர்பார்ப்புகளை மாற்றியது. அதன் பிறகு, சந்தையில் இறக்கமானது ஒரு வரம்புக்குள் காணப்பட்டது. ஆனால், அதிர்ஷ்டவசமாக மேலும் இறக்கத்தை உண்டாக்கவில்லை. நிஃப்டி நகர்வுகள் 17600 - 17200 என்ற வரம்புக்குள்ளாகவே இருந்தது. இதனால் வர்த்தகம் உற்சாகமில்லாமல் மந்தமாகவே காணப்பட்டது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

கடந்த வாரத்தில் ‘நிஃப்டியின் நகர்வு 17500 என்ற நிலையைக் கடந்து நகர்ந்தால், சந்தையின் சென்டிமென்டில் நல்ல மாற்றம் உண்டாகும்’ என்று கூறியிருந்தோம். ஆனால், சந்தை கடந்த வாரம் திங்கள்கிழமை இந்தப் புள்ளிக்கு அருகில் நகரத் தொடங்கினாலும், காளையானது அந்த நிலையைக் கடந்து மேலும் ஏற்றம் காணும் முயற்சியைக் கைவிட்டது. சந்தை நகர்வில் அதிகப் பங்கு வகிக்கும் வங்கி மற்றும் ஐ.டி துறை பங்குகளின் ஆதரவும் பெரிய அளவில் இல்லாததால், ஏற்றத்தின் போக்கில் நகர காளையால் முடியாமல் போனது.

டிசம்பர் 7-ல் நிஃப்டியின் நகர்வில் 17240 என்ற நிலையில் ஓர் இடைவெளி உண்டானது. இந்த இடைவெளியை நிரப்பும் வகையில் இறக்கம் கண்டுள்ள சந்தை, தற்போது அந்த நிலைக்கு அருகில் நிலைகொண்டுள்ளது. நிஃப்டி 17600 என்ற நிலைக்குமேல் உயர்ந்தால் மட்டுமே தொடர் ஏற்றத் தின் நகர்வு சாத்தியமாகும். இந்த நிகழ்வு நடக்காதபட்சத்தில் பெரிய அளவில் ஏற்றத்தை நம்மால் பார்க்க முடியாது.

பிரதான நிகழ்வாகக் காணப்பட்ட ஃபெட் நிகழ்வு இந்த வாரம் முடிந்துவிட்ட நிலையில், சந்தையின் கவனம் அட்வான்ஸ் வரி மற்றும் டிசம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகள் மீது திரும்பியுள்ளது. இவற்றுக்கு இன்னும் நாள்கள் இருப்பதால், 2022 ஜனவரி மாதம் பாதி வரை சந்தை கன்சாலிடேஷனுக்குள் இருக்கும்.

இதற்கு அர்த்தம், நிஃப்டி 17000 - 17600 வரம்புக்குள்ளாகவே வரும் வாரம் அல்லது சில வாரங்களுக்குத் தொடரும். வர்த்தகம் அவ்வளவு எளிதாக இருக்காது. குறிப்பிட்ட பங்கு சார்ந்த செயல்பாடுகளே பெரும் பாலும் ஆதிக்கம் செலுத்தும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஹிகல் லிமிடெட் (HIKAL)

தற்போதைய விலை ரூ.549.25

வாங்கலாம்

இந்த நிறுவனப் பங்கில் நல்ல விலைநகர்வு பேட்டர்னான டபிள்யூ (W) பேட்டர்ன் உருவாகி யுள்ளது. இந்த பேட்டர்னுக்கு அர்த்தம், இந்தப் பங்கு அக்குமுலேஷனுக்கு உள்ளாகியுள்ளது என்பதே. இந்த டபிள்யூ பேட்டர்ன் என்பது, பிரேக் அவுட்டுக்குத் தயாராக உள்ள இரட்டை இறக்க நிலையின் தொகுப்பாகும்.

இந்தப் பங்கில் இது ரூ.580 என்ற நிலையில் நிகழும் எனக் காட்டுகிறது. ஆனால், இதற்கான உந்துதல் ஏற்கெனவே பங்கின் நகர்வில் தொடங்கிவிட்டது.

எனவே, நடுத்தரக் கால அடிப்படையில் இந்தப் பங்கை வாங்கலாம். ரூ.650 - 675 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப் லாஸ் ரூ.520-க்குக் கீழ் வைத்துக் கொள்ளவும்.

மேக்ஸ் ஹெல்த்கேர் (MAXHEALTH)

தற்போதைய விலை ரூ.393.90

வாங்கலாம்

இந்தப் பங்கு இங்கு மீண்டும் பரிந்துரைக்கப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களாக இந்தப் பங்கின் விலை நகர்வு ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் இருந்து வருகிறது.

இந்தப் போக்கு நல்ல ரவுண்டிங் பேட்டர்னை உருவாக்கியுள்ளது. இந்த பேட்டர்ன் தற்போது ரூ.400-க்கு மேல் பிரேக் அவுட் ஆகத் தயாராகியுள்ளது.

இந்த பிரேக் அவுட் வெற்றிகர மாகும் பட்சத்தில், ரூ.475 வரை ஏற்றம் அடையும் என எதிர் பார்க்கலாம். எனவே, இந்தப் பங்கை ரூ.350 ஸ்டாப்லாஸுடன் வாங்கலாம்.

ஆர்.ஹெச்.ஐ மேக்னசிடா (RHIM)

தற்போதைய விலை ரூ.369.50

வாங்கலாம்

முன்பு ஓரியன்ட் ரெஃப்ராக்டரீஸ் என்ற பெயரில் இருந்த இந்த நிறுவனம் பழைமையான ஒன்று. தற்போது ஆர்.ஹெச்.ஐ மேக்னசிடா என்ற பெயரில் தற்போதைய காளையின் போக்கில் சிறப்பான நகர்வுகளைக் கொண்டிருக்கிறது.

தற்போது இந்தப் பங்கில் புதிய ஏற்றத்துக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. எனவே, வரும் நாள்களில் ரூ.440 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.370-க்குக் கீழ் வைத்துக்கொள்ளவும்.

தமிழில்: ஜெ.சரவணன்