Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

B U Y & S E L L

பிரீமியம் ஸ்டோரி

கடந்த வாரத்தில் கவனமாக சந்தையில் ஈடுபடுமாறு எச்சரிக்கை விடுத்திருந்தோம். மேலும், தேவைப்பட்டால் ஏற்றத்தில் லாபத்தை எடுக்கலாம் என்றும் கூறியிருந்தோம். ஆனால், அதற்கான தேவை ஏற்படவில்லை என்று சொல்லலாம். ஏனெனில், சந்தை முந்தைய வாரங்களில் உள்ளாகியிருந்த அபாயத்தில் இருந்து மீண்டு குறிப்பிட்ட அளவு ஏற்றத்தையும் கண்டுள்ளது. இன்ட்ரா டே, இன்ட்ரா வீக் ஏற்ற இறக்கங்கள் தொடர்ந்து காணப்பட்டாலும் சந்தையில் நகர்வு அவ்வளவு மோசமாக இல்லை எனலாம்.

டாக்டர் 
சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

கடந்த வாரத்தில் சர்வதேச நிகழ்வுகள் இறக்கத்துக்கான சாத்தியங்களுடன் இருந்தன. ஆனால், டவ் ஜோன்ஸ் மற்றும் பிற சந்தைகள் நிலையற்ற தன்மையிலிருந்து தங்களை மீட்டுக்கொண்டன. இதனால் சந்தைக்கு இருந்த நெருக்கடியும் விலகியது. வர்த்தகர்கள் உடனடியாக இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, குறைந்த விலையில் பங்குகளை வாங்கினர். இதனால் சந்தையில் உருவான புதிய உற்சாகம் நிஃப்டியை ஏற்றத்தை நோக்கி நகர்த்தியது. 15000 என்ற நிலையைக் கடந்து நகர்ந்தது. சில காலத்துக்கு கரடியின் போக்கிலிருந்து சந்தை தப்பித்தது என்பதை உறுதி செய்யும்படி இருந்தன. இது சில ஷார்ட் கவரிங் செயல்பாடுகளை ஏற்படுத்தியது. நிஃப்டி நன்றாக ஏற்றம் கண்டதுடன், இந்தப் போக்கு இருப்பதற்கான அறிகுறிகளையும் வெளிப்படுத்தியது.

ஆனாலும், சர்வதேச சந்தைகளில் காணப்படும் ஏற்ற இறக்கங்களால் வர்த்தகர்கள் எச்சரிக்கையாகவே முடிவுகளை எடுத்தார்கள். இதனால் ஆரம்ப இடைவெளிகள் தொடர்ந்து காணப்பட்டன. இதில் நல்ல விஷயம் என்னவெனில், அவர்கள் இறக்கத்தின் போக்கில் தங்களுடைய முடிவுகளை எடுக்கவில்லை என்பதுதான். எனவே, சந்தையில் காளையின் போக்கு உறுதியாக இருப்பதையும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் என்பதையும் உணர்த்துகிறது.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

தற்போது முக்கியத் தேவை நிஃப்டி அதன் ஏற்றத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். மேலும், நிஃப்டி 14600 என்ற நிலையைத் தாண்டி இறங்கக் கூடாது. தற்போது இசிமோகு கிளவுட் பேட்டர்ன் காணப்படுகிறது. மேலும், லேகிங் லைனும் உடைத்து நகர முயற்சி செய்கிறது. அப்படி நடக்கும்பட்சத்தில் சந்தையில் புதிதாக ஏற்றத்தை நோக்கிய மொமென்டம் உருவாவதைக் காணலாம்.

ஆக மொத்தத்தில், சந்தையில் காளையின் போக்கு மீண்டும் வந்துள்ளது. எனவே, இறக்கங்களை முதலீடு செய்யும் வாய்ப்புகளாக எடுத்துக் கொள்ளலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

இந்தியா சிமென்ட்ஸ் (INDIACEM)

தற்போதைய விலை ரூ.196.90

வாங்கலாம்

பிரபல பங்கு வர்த்தகர் மற்றும் முதலீட்டாளர் ஆர்.கே.தமானி இந்தப் பங்கில் ஆர்வம் காட்டத் தொடங்கியதிலிருந்து இந்தப் பங்குக்கு அதிக டிமாண்ட் இருந்து வருகிறது. இதனால் தற்போது வரை சிறப்பான நகர்வுகளைப் பார்க்க முடிகிறது. காலப்போக்கில் இந்தப் பங்கில் உச்சபாட்டம் நிலை உருவாகி நல்ல ஏற்றத்துக் கான போக்கும் உருவானது. சமீபத்தில் சிமென்ட் துறை பங்குகளுக்கு நல்ல டிமாண்ட் இருப்பதால், இந்தப் பங்கு மேலும் ஏற்றமடைவதற்கான சாத்தியங்களுடன் இருக்கிறது. எனவே, ரூ.180 ஸ்டாப்லாஸுடன் தற்போதைய விலையில் வாங்கலாம். ரூ.250 வரை உயர வாய்ப்புள்ளது.

ராடிகோ கைதான் (RADICO)

தற்போதைய விலை ரூ.599.80

வாங்கலாம்

மதுபான நிறுவனப் பங்குகள் நல்ல டிமாண்டில் இருந்து வருவதால் அவற்றின் நகர்வு களும் சந்தையில் சிறப்பாக இருக்கின்றன. ராடிகோ பங்கும் சிறப்பான ஏற்றத்தில் இருந்து வருகிறது. ஏற்கெனவே இந்தப் பங்கை பரிந்துரையும் செய்திருக் கிறோம். வாராந்தர சார்ட்டைப் பார்க்கும்போது, இந்தப் பங்கு நிலையான ஏற்றத்தின் போக்குக் கான சாத்தியங்களுடன் இருக்கிறது. பெரிய அளவில் முதலீடு உள்ளே வரும்போது இதற்கான சாத்தியம் காணப் படும். இந்தப் பங்கு தற்போது புதிய முதலீடுகளுக்கான அறிகுறிகளுடன் இருக்கின்றன. எனவே, ரூ.570 ஸ்டாப்லாஸுடன் இந்தப் பங்கை வாங்கலாம். ரூ.700 வரை உயர வாய்ப்புள்ளது.

அதானி ட்ரான்ஸ்மிஷன் (ADANITRANS)

தற்போதைய விலை ரூ.1,385.75

வாங்கலாம்

அதானி குழுமப் பங்குகள் அனைத்தும் நல்ல ஏற்றத்தின் போக்கில் இருந்து வருகின்றன. அவற்றில் அதானி ட்ரான்ஸ்மிஷன் வலுவான சிறப்பான போக்கில் இருப்பதுடன், தொடர்ந்து அந்தப் போக்கு நீடிப்பதற்கான சாத்தியங்களும் உள்ளன. பங்கின் சார்ட்டை பார்க்கும்போது, வாங்கலாம் என்பதற்கான அறிகுறிகள் நன்றாகவே தெரிகின்றன. குறிப்பிட்ட இடைவெளி களில் இறக்கம் கண்டிருந்தாலும் சராசரி லைனை உடைக்க இன்னும் அவகாசம் இருக்கிறது.

ஏ.டி.எக்ஸ் ஆசிலேட்டர் ஆதரவாக உள்ளது. இதன் பாசிட்டிவ் டிஐ லைனும் சிறப்பான பொசிஷனில் உள்ளது. எனவே, பங்கு தொடர்ந்து ஏற்றம் கண்டு, ரூ.1,500 வரை உயர வாய்ப்புள்ளது. ரூ.1,325 ஸ்டாப்லாஸுடன் இந்தப் பங்கை வாங்கலாம்.

தமிழில்: திவ்யா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு