Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

கடந்த வாரத்தில் ‘இறக்கங்கள், தோராயமாக 16700 என்ற நிலைகளில் உச்ச பாட்டம்களை உருவாக்க வாய்ப் புள்ளது. அத்தகைய இறக்க நிலைகளில் ஏதேனும் திருப்பங்கள் ஏற்பட்டால் அது குறைந்த ரிஸ்க்குடனான முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கலாம்’ என்று கூறியிருந்தோம்.

டாக்டர் சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

அதேபோல், கடந்த வாரத்தில் நிஃப்டி 16800 வரை இறங்கி, பின்னர் ஏற்றம் அடையத் தொடங்கியது. இது எதிர்பார்த்ததுதான். செவ்வாய் அன்று சந்தை ஒரு வரம்புக்குள் நகரத் தொடங்கியதும், மேலும் ஏற்றம் அடையும் என்ற எதிர்பார்ப்பை உருவாக் கியது. ஆனால், சந்தை அந்த எதிர்பார்ப்பை பொய்யாக்கும் விதமாக வாரத்தின் மீதமுள்ள வர்த்தக நாள்களிலும் அந்த வரம்புக்குள்ளேயே வர்த்தகமானது. மேலும், வாராந்தர எக்ஸ்பைரி, மாதாந்தர, காலாண்டு மற்றும் ஆண்டு எக்ஸ்பைரியுடன் சேர்ந்துகொண்டதால், என்னதான் நடக்கிறது பார்க்கலாம் என்று பெரும்பாலானோர் காத்திருந்தனர். அதன் படியே, 30-ம் தேதி எக்ஸ்பைரியானது எதிர்பார்க்கப்பட்ட பயமுறுத்தும்படியான தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை.

தற்போது குறுக்கீடாக இருந்த இந்த நிகழ்வு காலவதியாகி விட்டதால், சந்தையில் இனிவரும் நாள்களில் நல்ல நகர்வுகளை எதிர்பார்க்கலாம்.

நிஃப்டியைவிடவும் சற்று மோசமாகச் செயலாற்றிய பேங்க் நிஃப்டி முடிந்த வாரத்தில் இறக்கம் கண்டு 27 டிசம்பர் தினத்தில் காணப்பட்ட இறக்கத்துக்கு மேல் தன்னை நிலைநிறுத்திக்கொண்டது. தற்போது இந்தத் துறையின் மீது கண்காணிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். தனியார் வங்கிகள் இன்னும் தங்களுடைய செயல்பாட்டை தொடங்க வில்லை. தங்களின் நகர்வை தீர்மானிக்க காலாண்டு நிதி நிலை முடிவுகளின் வருகைக்காகக் காத்திருக்கின்றன.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஐ.டி துறை பங்குகள் முக்கிய செயல்பாட்டை வழங்கி யுள்ளன. மேலும், ரிலையன்ஸ், ஐ.டி.சி போன்ற பெரிய சந்தை மதிப்புள்ள பங்குகளின் செயல்பாடு அவ்வப்போது பங்களிப்பதால், நிஃப்டி தன்னுடைய நிலையில் நிலைநிறுத்திக் கொள்ள உதவுகின்றன.

ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் குறியீடுகள் தங்களுடைய போக்கில் நிலையாக இருந்து வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஏற்றத்தை நோக்கி நகர்கின்றன. இதற்கு உதவியாக சிறு முதலீட்டாளர்களின் தொடர் பங்களிப்பு இருந்துவருகிறது.

நிஃப்டியின் பிரதான ரெசிஸ்டன்ஸ் தொடர்ந்து 17400-500 என்ற நிலையிலேயே இருக்கிறது. தொடர்ந்து ஏற்றங்களை நிஃப்டி அடைய வேண்டுமெனில், இந்த நிலையை உடைத்து ஏற்றம் காண வேண்டும். அதற்கு பாசிட்டிவான நிகழ்வு அல்லது செய்தி தேவை. அதுவரை அக்ரசிவ் முதலீடு மற்றும் வர்த்தகம் செய்ய அத்தகைய நிகழ்வுக்காக நாம் காத்திருக்க வேண்டும்.

அதேசமயம், இறக்கங்கள் ஏற்படும்போது அவற்றை முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளாக எடுத்துக்கொள்ளலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

கிராஃபைட் இந்தியா (GRAPHITE)

தற்போதைய விலை ரூ.527.55

வாங்கலாம்

உள்நாட்டில் கிராஃபைட் எலக்ட்ரோட் விலை கடந்த சில வாரங்களாகவே கடுமையாக உயர்ந்துவருவது தொடர்பான செய்திகள் கிராஃபைட் இந்தியா மற்றும் ஹெச்.இ.ஜி ஆகியவற்றின் மீது புதிய ஆர்வத்தைத் தூண்டியுள்ளன.

அவற்றிலும் கிராஃபைட்டின் நகர்வுகள் ஹெச்.இ.ஜி-யை விடவும் நன்றாகக் காண முடிவதால், அதில் டிமாண்ட் அதிகமாக இருப்பது தெரிகிறது.

இந்தப் பங்கில் கடந்த ஆறு மாதங்களில் காணப்பட்ட இறக்கத்தின் போக்கு முடிவுக்கு வந்து ஏற்றம் அடைய தொடங்கி யுள்ளது. ரூ.680 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.500-க்குக் கீழ் வைத்துக் கொள்ளவும்.

டான்லா பிளாட்ஃபார்ம்ஸ் (TANLA)

தற்போதைய விலை ரூ.1,845.40

வாங்கலாம்

இப்பங்கு ஏற்றம் கண்டுவந்த போதெல்லாம் ஒருவித சந்தேகம் தொடர்ந்து நிலவி வந்தது, ஆனாலும், இந்தப் பங்கு தொடர்ந்து தனது நிலையான ஏற்றத்தின் போக்கை தக்க வைத்துக்கொண்டுள்ளது.

கடந்த சில வாரங்களில் இந்தப் பங்கின் நகர்வுகளில் கன்சாலிடேஷன் போக்கு காணப்பட்டது. தற்போது அதிலும் ஏற்றம் அடைய தயாராகியிருப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

இந்தப் பங்கு ரூ.2,100 வரை உயர வாய்ப்புள்ளது. ரூ.1,800 ஸ்டாப்லாஸுடன் இந்தப் பங்கை வாங்கலாம்.

நாராயண ஹிருதயாலயா (NH)

தற்போதைய விலை ரூ.604.05

வாங்கலாம்

மருத்துவத் துறையின் மிக உயர்ந்த ஆளுமைகளில் ஒருவர் இந்த ஹெல்த்கேர் பங்கின் புரொமோட்டராக இருக்கிறார்.

இந்தப் பங்கு மெதுவாகவும் நிலையாகவும் தொடர்ந்து வளர்ச் சியின் போக்கில் இருந்துவருகிறது. இந்த மெதுவான ஏற்றத்தின் போக்கிலிருந்து பிரேக்அவுட் ஆகி நன்றாக ஏற்றம் காணத் தயாராக இருக்கின்றன.

இதற்குக் காரணம், கடந்த வாரத்தில் இதன் விலை நகர்வுகள் பிட்ச்ஃபோர்க் ரெசிஸ்டன்ஸை உடைத்து நகர்ந்திருக்கின்றன.

எனவே, இந்தப் பங்கை தற்போதைய விலையில் வாங்கலாம். குறுகிய காலத்தில் ரூ.670 வரை உயர வாய்ப்புள்ளது. ரூ.590-க்குக்கீழ் ஸ்டாப்லாஸ் வைத்துக்கொள்வது அவசியம்!

தமிழில்: ஜெ.சரவணன்