Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

கடந்த வாரத்தில் ‘நிஃப்டியின் பிரதான ரெசிஸ்டன்ஸ் நிலை 17400 - 17500 வரம்பில் தொடர்கிறது. இந்த நிலையை உடைத்து நகர்ந்தால்தான் மேலும் ஏற்றத்தின் போக்கை பார்க்கலாம்’ என்று கூறியிருந்தோம்.

டாக்டர் சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

சந்தைக்கு இந்த நிலையை எட்டுவது கடினமான வேலையாக இல்லை. காரணம், கடந்த வாரத்தின் தொடக்கத்திலேயே வர்த்தகம் இந்த வரம்பில்தான் காணப்பட்டது. தொடர்ந்து எந்தத் தடங்கலும் இல்லாமல் ஏற்றமும் கண்டது. இதனால் நிஃப்டி நிலையாகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு மீண்டுவந்ததால், சில வாரங்களுக்கு முன்பு கடினமாக இருந்த நகர்வு தற்போது சாத்திய மாகி கிட்டத்தட்ட 18000 வரை முன்னேறியது.

கடந்த 15 வர்த்தக தினங்களில் இந்திய பங்குச் சந்தையில் காணப்பட்ட சிறப்பான மீட்சியானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தாக உள்ளது. ஏனெனில், அக்டோபரில் எட்டிய உச்சத்திலிருந்து ஏற்பட்ட சரிவில் 62 சதவிகிதத்துக்கும் மேல் மீண்டுவந்திருக் கிறது. இந்த உறுதியான ஏற்றமானது, முதலீட்டாளர்களின் நல்ல ஈடுபாட்டினாலும், அதிகரித்து காணப்பட்ட மொமன்டத்தாலும் நிகழ்ந்துள்ளதைப் பார்க்க முடிகிறது.

கூர்மையான நகர்வுகள் உண்டாவது கரடியின் போக்குக்கான சிறப்பியல்பு. ஆனால், சமீப காலமாக எல்லா இறக்கங்களும் கரடியின் போக்கிலானது என்று சொல்ல முடியாததால், இனி அப்படிக் கருத முடியாது. அதே சமயம், சந்தை இதுவரை மீண்டுவந்துள்ள ஏற்றத்தில் தொடர்ந்து தன்னை நிலைநிறுத்திக்கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக, நிஃப்டி தொடர்ந்து ஏற்றத்தின் போக்கில் இருக்கவேண்டுமெனில், தன்னுடைய இடத்தை 17200 என்ற நிலைக்குக் கீழே நகர இடம்தரக் கூடாது.

நிஃப்டி தொடர்ந்து ஏற்றத்தில் இருக்க ஐ.டி துறையின் பங்களிப்பு மிகப் பெரிய ஆதரவாக இருந்துள்ளது. ஆனால், வார இறுதியை நெருங்கியதும் வட்டி விகிதம் உயர்த்தப்படுவது தொடர்பான அந்நியச் சந்தைகளின் அச்சத் தால், ஐ.டி துறையின் நகர்வில் காணப்பட்ட உற்சாகம் சற்றுக் காணாமல்போனது. ஐ.டி பங்குகள் பலருக்கும் நல்ல லாபத்தில் இருந்த தால், லாபத்தை எடுக்க யாரும் தயங்கவில்லை.

தற்போது காலாண்டு நிதிநிலை முடிவுகள் அடுத்த வாரம் வெளிவர இருக்கிறது. முன்னணி நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் பலவும் ஜனவரி 12-ம் தேதி வரவுள்ளன. இது முக்கிய மாக கவனிக்க வேண்டிய நிகழ்வாக உள்ளது.தவிர, பிற துறைகளும் கணிசமாகப் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், மூன்றாம் காலாண்டு நிதிநிலை முடிவுகளைப் பொறுத்தே இருக்கும். எனவே, வரும் வாரத்தில் சந்தையின் நகர்வு காளையின் போக்கில் ஒரு வரம்புக்குள் தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பூனவல்லா ஃபின்கார்ப் (POONAWALLA)

தற்போதைய விலை ரூ.249.10

வாங்கலாம்

பூனவல்லா குழுமத்தின்கீழ் இந்த நிறுவனம் வந்ததிலிருந்து இந்தப் பங்கின் மூலமாக கிடைக்கும் ஆதாயம் குறித்து மிகுந்த நம்பிக்கை யுடன் பங்குச் சந்தை இருந்தது. அதற்கேற்ப விலை நகர்வுகளும் நிலையான போக்கில் இருந்துவந்தது. இந்த நிலையில், கடந்த வாரத்தில் இந்தப் பங்கின் ஏற்றத்தின் போக்கில் புதிய உந்துதல் காணப்பட்டது. இதனால் இந்தப் பங்கு வரும் வாரங்களில் 285 வரை உயர வாய்ப்புள்ளது. ரூ.235 ஸ்டாப்லாஸுடன் இந்தப் பங்கை தற்போதைய விலையில் வாங்கலாம்.

என்.பி.சி.சி (NBCC)

தற்போதைய விலை ரூ.50.30

வாங்கலாம்

சமீபத்திய எஃப் அண்ட் ஓ நகர்வு இந்தப் பங்கில் புதிய உற்சாகத்தைக் கொண்டு வந்திருக்கிறது. மேலும், கடந்த வாரத்தில் நல்ல மொமன்டம் இதில் காணப்பட்டதால், ஏற்றமும் சிறப்பாக இருந்தது.

இதனால் கடந்த ஓராண்டின் ஸ்விங் உச்சத்தைத் தாண்டியதுடன், மேலும் தொடர்ந்து ஏற்றம் பெறும் சாத்தியங்களுடன் உள்ளது. எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். ரூ.65 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.45-க்குக்கீழ்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் (MAHLOG)

தற்போதைய விலை ரூ.707.00

வாங்கலாம்

லாஜிஸ்டிக்ஸ் பங்குகள் சில காலமாகத் தொடர்ந்து சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றன. அவற்றில் மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் 2020-ல் அடைந்த இறக்க நிலையான 200-லிருந்து தொடர்ந்து நன்றாக ஏற்றம் கண்டு தற்போதைய விலையை எட்டியுள்ளது. தற்போது லாஜிஸ்டிக்ஸ் துறையிலிருந்து புதிய பங்கு வெளியீடு (ஐ.பி.ஓ) வர உள்ளது. இதன் சந்தை மதிப்பும் மிகவும் உயர்வாக உள்ளது. இதன் வருகையால் இந்தத் துறையில் உள்ள சிறப் பான பங்குகளின் நகர்வுகளிலும் உந்துதலை உண்டாக்கும் வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.690. அடுத்த 2 - 3 மாதங்களில் இந்தப் பங்கு ரூ.840 வரை உயர வாய்ப்புள்ளது.

தமிழில்: ஜெ.சரவணன்