Published:Updated:

பங்குகள் வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

பங்குகள் வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

கடந்த வாரம் இந்தியப் பங்குச் சந்தை அதற்கு முந்தைய வாரத்தைவிடவும் சற்று ஏற்றம் கண்டது. ஐ.டி துறையின் முன்னணி நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் எதிர்பார்த்தபடி இருந்தபோதிலும் துறை சார்ந்த குறியீட்டிலும் சந்தையிலும் பாசிட்டிவ் சென்டிமென்டைத் தூண்டுவதில் தோல்வியடைந்தது.

டாக்டர் சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் வருவாய் வளர்ச்சியில் காணப்பட்ட ஏற்ற இறக்கங்களைத் தொடர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததால், இந்தியப் பங்குச் சந்தைகள் மீண்டும் சரிந்தன. இதன் தாக்கம் வாரம் முழுவதும் தொடர்ந்து சந்தையின் சென்டி மென்டை பாதித்தது.

சமீபத்தில் காணப்பட்ட ஏற்றம் விலை நகர்வுகள் கடந்த அக்டோபரில் கண்ட உச்சத்தை சவால் செய்யும் என வர்த்தகர் களிடையே சற்று நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால், 4 - 5 வாரங்களில் காணப்பட்ட உற்சாகமான நகர்வு கடந்த வாரத்தில் காணாமல் போனது. வங்கி மற்றும் ஐ.டி ஆகிய இரண்டும் பிற துறை குறியீடுகளுடன் சேர்ந்து பொதுவாக, நிஃப்டியின் நகர்வுகளுக்கு ஆதரவாகப் பங்களிப்பது வழக்கம்.

ஆனால், இந்த முறை அவை எந்த ஆதரவையும் வழங்கவில்லை. குறிப்பாக, ஐ.டி பங்குகளின் விலை டிசம்பர் காலாண்டு நிதிநிலை முடிவு களுக்குப் பிறகு சரிவை சந்தித்ததால், நிஃப்டியில் ஏற்றம் உண்டாகவில்லை. வங்கிப் பங்குகளின் நிதிநிலை முடிவுகள் இன்னும் வர ஆரம்பிக்க வில்லை.

பங்குகள் வாங்கலாம்... விற்கலாம்!

ஆட்டோமொபைல் துறையும் மந்தமாக இருக்கிறது. எஃப்.எம்.சி.ஜி முன்னணி பங்குகளும் அழுத்தத்தில் உள்ளன. உலோகப் பங்குகள் குறுகிய நேரமே சிறப்பாகச் செயலாற்றிவிட்டு, பின்னர் உற்சாகத்தை இழந்து பலவீனமாயின. இதனால் சந்தையின் போக்கு முழுவதும் செய்திகளின் அடிப்படை யில் ஏற்றம் காண்பதும் சரிவைச் சந்திப்பதுமாக மாறியது.

பெரிய அளவில் சரிவுகள் உண்டாகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அதே சமயம், மத்திய பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பும் உள்ளது. ஆனால், இந்த முறை பட்ஜெட்டில் சில அரசியல் நோக்கங்களுடனான நடவடிக்கைகள் இருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில், சில மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடக்கவுள்ளன. அவற்றின் வெற்றி வாய்ப்புகள் பா.ஜ.க-வுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. எனவே, மத்திய பட்ஜெட் மீதான எதிர்பார்ப்புகள் சற்று பயம் கலந்தவையாகவே இருக்கின்றன.

டிசம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகள் மாத இறுதி வரை இருக்கும் என்பதால், குறிப்பிட்ட பங்கு சார்ந்த செயல்பாடுகள் தொடரும். நிதிநிலை முடிவு களைப் பொறுத்து சந்தையின் கவனம் ஸ்மால், மிட்கேப் பங்குகளை நோக்கி திரும்பலாம். இவை நிஃப்டியின் நகர்விலும் எதிரொலிக்கும்.

எனவே, வரும் வாரத்தில் சந்தையானது ஒரு வரம்புக்கு உட்பட்ட செயல்பாட்டிலும், குறிப்பிட்ட பங்கு சார்ந்த நடவடிக்கையிலும் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

பங்குகள் வாங்கலாம்... விற்கலாம்!

பாரத் டைனமிக்ஸ் (BDL)

தற்போதைய விலை ரூ.460.15

வாங்கலாம்

பாதுகாப்புத் துறை எப்போதும் பங்குச் சந்தையின் ஆர்வமிக்கத் துறையாக இருந்து வருகிறது. ஏனெனில், இந்தத் துறையின் செயல்திறன் சிறப்பானது என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, இந்தத் துறையில் ஒரு பங்கு நன்றாகச் செயலாற்றினால், அது கணிசமான ஏற்றத்தை அடையும். அப்படியான பங்காக பாரத் டைனமிக்ஸ் உள்ளது.

இதன் சார்ட் பேட்டர்ன் சிறப்பாக உள்ளது. தற்போது அதில் பிரேக் அவுட் ஆகி ஏற்றம் அடைவதற்கான சாத்தியங்கள் தெரிகின்றன.

தற்போதைய விலையில் வாங்கினால் ரூ.500 - 530 வரை உயரலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.420-க்குக் கீழ் வைத்துக்கொள்ளவும்.

வாஸ்கான் இன்ஜினீயர்ஸ் (VASCONEQ)

தற்போதைய விலை ரூ.33.90

வாங்கலாம்

ரியல் எஸ்டேட் பங்குகள் சந்தையில் சிறப்பாக மீண்டு வந்துள்ளன. அவற்றில் வாஸ்கான் இன்ஜினீயர்ஸ் பங்கு சமீபத்தில் வெளியான டிசம்பர் காலாண்டு முடிவுகளில் சிறப்பான லாபத்தைப் பதிவு செய்து சந்தையின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் பேட்டர்ன்களும் உற்சாகம் தருவதாக இருக்கின்றன. பாட்டம் நிலையில் தலைகீழான தலை, தோள்பட்டை பேட்டர்னை உருவாக்கியுள்ளது. அதிலிருந்து தற்போது ரவுண்டிங் பேட்டர்ன் உருவாகியுள்ளது.

எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். குறுகிய காலத்தில் ரூ.50 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.27-க்குக் கீழ் வைத்துக்கொள்ளவும்.

இந்தோ கவுன்ட் இண்டஸ்ட்ரீஸ் (ICIL)

தற்போதைய விலை ரூ.266.80

வாங்கலாம்

ஊக்கமளிக்கும் வகையிலான அரசு கொள்கைகள், ஏற்றுமதி சந்தைகளின் வாய்ப்புகள் ஆகிய காரணங்களால் டெக்ஸ்டைல் துறை சார்ந்த பங்குகளுக்கு தற்போது சந்தையில் டிமாண்ட் அதிகரித்துள்ளது.

இந்தத் துறையில் இந்தோ கவுன்ட் இண்டஸ்ட்ரீஸ் பங்கு கன்சாலிடேஷன் போக்கிலிருந்து பிரேக் அவுட் ஆகி சிறப்பான ஏற்றத்தை தொடங்கிய ுள்ளதைக் காட்டுகிறது. எனவே, தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். ரூ.325 வரை உயரும் என எதிர்பார்க்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.240-க்குக் கீழ் வைத்துக் கொள்ளவும்.

தமிழில்: ஜெ.சரவணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism