Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

அமெரிக்காவிலிருந்து வந்த வட்டி விகிதம் எதிர்மறையான தாக்கத்தின் காரணமாக இந்தியப் பங்கு சந்தை குறியீடுகள் கடுமையாக சரிந்ததால் சந்தை ஒரு குறிப்பிட்ட வரம்பில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு காற்றில் போனது. பெரும்பாலானவர்கள் எதிர்பார்த்ததைவிடவும் பல நிறுவனப் பங்குகளின் விலைகள் வெகுவாக சரிந்தன. 5-6 வர்த்தக தினங்களிலேயே நிஃப்டி 8 சதவிகிதம் வரை சரிந்தது.

டாக்டர் சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

கடந்த வாரத்தின் இடையில் விடுமுறை வந்ததால் இறக்கத்தின் போக்குக்கு இடைவெளி கொடுத்தது. ஆனால் வியாழன் அன்று வர்த்தகத்தில் எஸ்.ஜி.எக்ஸ் (SGX) ஏற்படுத்திய தாக்கம் சந்தையின் எதிர்மறையான தொடக்கத்தை அசைத்தது. இதனால் விலை நகர்வுகள் சற்று தக்கவைத்துக்கொண்டு, புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் குறைவான இறக்க நிலைகளில் வர்த்தகமாயின. மேலும், சந்தையில் ஏற்றத்துக்கான நகர்வு பெரிய அளவில் இல்லை, எனவே கரடியின் ஆதிக்கமே இன்னும் தொடர்ந்து காணப்படுகிறது. மீண்டும் காளையின் போக்கு சந்தையில் வருவதற்கு நிறைய முயற்சிகள் தேவைப்படும்.

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் செய்திகள் ஐ.டி துறைக்கு எதிர்மறையாகவே இருந்ததால், ஐ.டி பங்குகள் தொடர்ந்து இறக்கத்தின் போக்கில் காணப்பட்டன. கடந்த 7 வர்த்தக நாள்களில் இந்தத் துறையின் சரிவு செங்குத்தாக இருந்தது. இதனால் நல்ல நிதிநிலை முடிவுகளுடன் வந்த பங்குகள் போர்ட்ஃபோலியோவில் உருவாக்கிய ஆதாயங்கள்கூட காணாமல் போனது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

நகர்வுகளின் வேகம் விறுவிறுப்பாக இருந்தது. முன்னணி நிறுவனங்களின் டிசம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகள் நன்றாக இருந்தபோதிலும் சந்தை வீழ்ச்சிக்குள்ளானது. அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்.ஐ.ஐகள்) இந்தியப் பங்குச் சந்தைகளில் பெரும்பகுதி பங்களிப்பதால், அவர்கள் தொடர்ந்து முதலீடுகளை விற்று வெளியேறுவது காரணமாகவும் இந்த வீழ்ச்சி ஏற்பட்டிருக்கலாம்.

குறுகிய கால சார்ட் பேட்டர்ன்கள் ஏமாற்ற மளித்தாலும், நீண்ட கால சார்ட் பேட்டர்ன்கள் இன்னமும் சிறப்பாகவே உள்ளன. எனவே நீண்ட கால முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை, தற்போது ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சியானது சிறந்த பங்குகளை அதிகமாக வாங்குவதற்கான வாய்ப்பாகவே இருக்கிறது. சில புதிய நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகளும் வர உள்ளன.

எனவே முதலீட்டாளர்கள் நல்ல பங்குகளில் முதலீடு செய்வதற்கு வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அடுத்து சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் மத்திய பட்ஜெட் தயாராக இருக்கிறது. விரைவில் கவனம் அதன் பக்கம் திரும்பும்.

முதலீட்டாளர்கள் அமெரிக்காவிலிருந்து வரும் செய்திகளை கவனிப்ப திலிருந்து மாறுவார்கள். மேலும் மத்திய பட்ஜெட் சார்ந்து எதிர்பார்ப்புகளும் அதேசமயம் அச்சுறுத்தல் களும் உள்ளன. எனவே அதன் பின்விளைவுகளைக் கணிப்பது சற்று கடினம்தான். எதையும் பொறுத்திருந்து முடிவெடுப்பது நல்லது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

கனரா பேங்க் (CANBK)

தற்போதைய விலை ரூ.240.55

வாங்கலாம்

சமீப காலங்களில் வங்கித் துறை அவ்வளவு சிறப்பாகச் செயலாற்றவில்லை என்றாலும்கூட கடந்த காலாண்டில் வலுவான நிதிநிலை முடிவுகளுடன் வந்திருப்பதால் சந்தையில் உற்சாகத்தை ஏற்படுத்தி யிருக்கும் என்று நம்பலாம்.

இது அடுத்தகட்ட விலை ஏற்ற நகர்வுகளுக்கும் வழிவகுக்கும். கனரா வங்கியின் நிதிநிலை முடிவு வெளியான பிறகு வியாழன் அன்று வர்த்தகத்தில் அப்பங்கின் நகர்வுகள் வலுவாக ஏற்றம் கண்டன. இந்த ஏற்றத்தின் போக்கில் பங்கின் விலை குறுகிய காலத்தில் ரூ.280 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.230-க்குக் கீழ் வைத்துக்கொள்ளவும்.

சுஸ்லான் (SUZLON)

தற்போதைய விலை ரூ.11.55

வாங்கலாம்

ஒருகட்டத்தில் இந்த நிறுவனப் பங்கு சிறப்பாகச் செயலாற்றியது. புளூசிப் பங்காக இருந்த சுஸ்லான் வருவாய் நஷ்டத்தைச் சந்தித்ததால் அதன் கவர்ச்சியை இழந்தது. தற்போது சந்தையில் இதுபோன்ற கடந்த காலத்தில் சிறப்பாக இருந்த பங்குகளின் நகர்வுகளில் மீட்சி தெரிகிறது.

டெக்னிக்கல் அம்சங்களும் சுஸ்லான் பங்கில் சிறப்பாக உள்ளன. எனவே குறுகிய காலத்தில் ரூ.20 என்ற இலக்குடன் இப்பங்கை வாங்கலாம். ரூ.8-க்குக் கீழ் ஸ்டாப்லாஸ் வைத்துக்கொள்ளவும்.

டாடா பவர் (TATAPOWER)

தற்போதைய விலை ரூ.241.95

வாங்கலாம்

மின்சார உற்பத்தி நிறுவனப் பங்குகளுக்கு சந்தையில் நல்ல டிமாண்ட் இருந்து வருகிறது. அவற்றில் டாடா பவர் கடந்த அக்டோபர் வரை நல்ல ஏற்றத்தில் இருந்துவந்தது.

அதன்பிறகு கடந்த மூன்று மாதங்களாக கன்சாலிடேஷனில் இருந்துவருகிறது. தற்போது அதிலிருந்து மீண்டு ஏற்றமடைய தயாராக இருக்கிறது. ரூ.250 என்ற நிலையைத் தாண்டி ஒரு வரம்புக்கான நகர்வுக்கு பிரேக் அவுட் ஆக சாத்தியம் உள்ளது. அப்போது விலை ரூ.278-288 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.232-க்குக் கீழ் வைத்துக்கொள்ளவும்.

தமிழில்: ஜெ.சரவணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism