Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

இந்தியப் பங்குச் சந்தை பெரிதும் எதிர்பார்த்திருந்த நிகழ்வு நடந்து முடிந்துவிட்டது. அதன் தாக்கம் சமீபத்தில் உண்டான இறக்கங்களிலிருந்து சந்தையை மீட்டு வலுவான ஏற்றத்தின் நகர்வில் கொண்டு சென்றது. மத்திய பட்ஜெட் வளர்ச்சியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தாலும், அதற்கு காளையின் போக்குக்கான அம்சங்களைத் தூண்டும் அளவுக்குத் திறன் இல்லாமல் போனது. சொல்லப் போனால், பத்திரச் சந்தை எதிர்மறையாக எதிர்வினை ஆற்றியிருக்கிறது. ரூபாய் மதிப்பும் சரிந்து பலவீனமானது. இதனால் நிஃப்டியின் ஏற்றத்தின் போக்கு தடைபட்டது. பட்ஜெட்டுக்கு அடுத்த சில நாள்களில் வர்த்தகமானது வரம்புக்கு உள்ளேயே காணப்பட்டது. பட்ஜெட்டுக்குப் பிந்தைய சந்தை நகர்வுகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். பட்ஜெட்டுக்கு முன் பல நாள்கள் கூர்மையான இறக்கத்தைப் பார்க்க முடிந்தது. இதனால் குறியீடுகள் 8% இறக்கத்தைச் சந்தித்தன.

டாக்டர் சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

பங்குகளின் மதிப்பில் 20-30% இறக்கங்கள் காணப்பட்டன. பட்ஜெட்டுக்குப் பின் சந்தையில் காணப்பட்ட 800 புள்ளிகள் ஏற்றமானது, மீண்டும் இறக்கம் கண்டு ஜனவரியில் காணப்பட்ட 17650 என்ற நிலைக்கே திரும்பியது. குறுகிய காலம் மட்டுமே இருந்த உடனடி ஏற்றமானது சந்தைக்கு ஆசுவாசம் தந்த ஏற்றம் எனலாம். ஆனால், தொடக்கத்தில் இருந்த நகர்வு நீடித்திருக்கவில்லை. இதனால் பத்திரச் சந்தையில் காணப்பட்ட எதிர்வினை நகர்வும் இதையொட்டி முடிவுக்கு வந்தது.

அதன் பிறகு, பத்திரச் சந்தையில் பெரிய அளவில் நகர்வுகள் உண்டாகவில்லை. இதனால் பங்குச் சந்தையிலும் பட்ஜெட்டுக்குப் பிறகான இரண்டு வர்த்தக தினங்களிலும் நகர்வுகள் குறைவாகவே இருந்தன.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

மத்திய பட்ஜெட் சந்தைக்கு புதிய உற்சாகத்தை வழங்கியது என்பதில் சந்தேகமே இல்லை. ஏனெனில், அதில் எதிர்பார்த்த சில விஷயங்கள் இருந்தன. குறிப்பாக, வலுவான மூலதனச் செலவினங்கள், நீண்ட கால ஆதாய வரியில் வரி விதிப்புகள் பெரிதாக இல்லாதது முக்கியமான விஷயங்களாக இருந்தன.

கிரிப்டோ சொத்துகளுக்கு வரி விதித்ததன் மூலம் மறை முகமாக அங்கீகரித்தது. தனிநபர் மற்றும் கார்ப்பரேட் வரி விகிதங்களில் பெரிய மாற்றங்களைச் செய்யாதது உள்ளிட்டவை சந்தையின் சென்டிமென்டைத் தூண்டின.

இவற்றின் அடிப்படையில் சந்தையின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, வாராந்தர இறக்கங்களிலிருந்து மீண்டு ஆதரவு நிலைகளுக்கு நகர்ந்திருக்கிறது. இதன்மூலம் காளையின் போக்கு நீடிப்பதாகவே கருதலாம். தற்போது காணப்படும் இறக்கத்தின் நகர்வு முடிவுக்கு வந்ததும் மீண்டும் ஏற்றத்தை நோக்கி சந்தை நகர அதிக வாய்ப்புள்ளது. எனவே, இறக்கங்களில் முதலீடுகளை மேற்கொள்ளலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஜீனஸ் பவர் (GENUSPOWER)

தற்போதைய விலை ரூ.84.60

வாங்கலாம்

மத்திய பட்ஜெட்டில் பலன் அடையக்கூடிய எரிசக்தி சார்ந்த உள்கட்டமைப்பு நிறுவனங்களில் ஜீனஸ் பவர் பங்கின் செயல்பாடு நிலைத்தன்மை யுடன் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இதன் சார்ட்டில் காணப்படும் நகர்வு சராசரியும் பங்கின் போக்குக்கு சாதகமாக உள்ளது. பட்ஜெட்டுக்குப் பிறகு, இந்தப் பங்கில் அதிக வால்யூமில் வர்த்தகச் செயல்பாடு காணப் பட்டது. மேலும், பங்கில் புதிய மொமன்டம் உருவாகி இருப்ப தால், குறுகிய காலத்தில் இப்பங்கின் விலை ரூ.120 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப் லாஸ் ரூ.74-க்குக் கீழ் வைத்துக் கொள்ளவும்.

ஈஸ் மை ட்ரிப் (EASEMYTRIP)

தற்போதைய விலை ரூ.597.25

வாங்கலாம்

பட்ஜெட்டில் சில அறிவிப்பு கள் சிறந்த மேப்பிங் (mapping) வந்திருப்பதால், அதில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் நல்ல பலனை அடைவதற்கான சாத்தியங்கள் உருவாகும் என்று தெரிகிறது. அவ்வாறு நிகழும் பட்சத்தில் இப்பங்குக்கு அது பெரிய நிகழ்வாக இருக்கும்.

இப்பங்கில் மூன்று மாத கன்சாலிடேஷனுக்குப் பிறகான பிரேக் அவுட் நகர்வு தெரிகிறது. இதனால் இப்பங்கு அதன் சமீபத்திய உச்சங்களை சவால் செய்து ஏற்றம் காண வாய்ப்பு உள்ளது. ரூ.730 வரை உயரலாம். தற்போதைய விலையில் வாங்க லாம். ரூ.590-க்குக் கீழ் ஸ்டாப்லாஸ் வைத்துக்கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

அசாஹி இந்தியா (ASAHIINDIA)

தற்போதைய விலை ரூ.597.95

வாங்கலாம்

கன்சாலிடேஷன் நிலைகளில் இருந்து வரம்புகளில் பிரேக் அவுட் ஆகிறது எனில், அது ஏற்றத்துக்கான நல்ல அறிகுறி ஆகும். ஏனெனில், எந்தவித விலை சேதத்தையும் உண்டாக்காமல் லாபத்தை எடுக்கும் நிகழ்வு நடந்திருப்பதை அது பிரதிபலிக்கிறது. அப்படியான நிகழ்வுகள் பலமுறை இப்பங்கில் நடந்திருப்பதை அதன் சார்ட்டிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. அதன்படி, தற்போது இப்பங்கில் காணப்படும் பிரேக் அவுட் நிகழ்வு, தொடர்ந்து பல்வேறு உச்சங்களை இப்பங்கில் கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம். தற்போது இப்பங்கில் ஏற்றத்துக்கான இலக்கு ரூ.700-ஆக உள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.575க்குக் கீழ் வைத்துக்கொள்ளவும்.

தமிழில்: ஜெ.சரவணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism