Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

கடந்த வாரத்தில் “தற்போதுள்ள சப்போர்ட் நிலைகளை மீறி இந்தியப் பங்குச் சந்தை நகரும்பட்சத்தில் அதைத் தீவிரமான நிகழ்வாகக் கருதி, அனைவரும் தங்களுடைய போர்ட்ஃபோலியோக்களில் மாற்றங்களைச் செய்ய வேண்டி வரலாம். எனவே, அனைத்து வர்த்தகர்களும் முதலீட் டாளர்களும் சந்தையில் இதற்கான அறிகுறிகளை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தோம்.

டாக்டர் சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

அதன்படி முடிந்த வாரத்தின் தொடக்கத்தில் வர்த்தகம் எதிர்பார்த்தது போலவே தொடங்கி கரடியின் ஆதிக்கத்திலேயே காணப்பட்டது. ஆனால், புதன் அன்று அப்படியொரு வீழ்ச்சி ஏற்படும் என்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. வாரம் முழுவதுமே ரஷ்யா-உக்ரைன் நிகழ்வுகள் காணப்பட்டாலும், வியாழன் அன்று போர் தொடங்கியதும்தான் உண்மையான தாக்கம் சந்தையில் எதிரொலித்தது. விலைநகர்வுகள் பலவீனமான தொடக்கத்திலிருந்து மீண்டுவரவில்லை. மாறாக, கொரோனாவுக்குப் பிறகு, மிகப்பெரிய இறக்கத்தை அன்றைய தினம் சந்தை சந்தித்தது.

மிக நீண்ட காலமாகவே ஒரே நாளில் 5% வரையிலான சரிவை நாம் சந்தித்திருக்கவில்லை. எனவே, வர்த்தகர்கள் எதிர்பாராத இந்த பெரும் சரிவால் பாதிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட அனைவரையுமே இந்தக் கடும் சரிவு உலுக்கியது. முடிந்த வாரத்தின் இடையில் நிஃப்டி 16800 என்ற நிலைகளிலிருந்து மீளும்போது பலரும் வலுவான பாட்டம் உருவாவதற்கான அமைப்பு எனப் பலரும் தைரியமாக இருந்தனர். இதனால் பல புதிய லாங் பொசிஷன்களை எடுத்தனர். இவையெல்லாம் சந்தைக்கு புதிய உற்சாகத்தைக் கொடுக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், வியாழன் அன்று முற்றிலும் எதிர்மறையான சூழலைச் சந்திக்க வேண்டியிருந்தது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பொதுவாக, இதுபோன்ற பெரிய இறக்கம் பதற்றமான பாட்டம் நிலைகளை உருவாக்கும். அதுதான் இப்போது நிகழ்ந்துள்ளது. இதற்கு சந்தை தற்போது கண்டுள்ள இறக்கங் களிலிருந்து உடனடியாக மீண்டுவிடும் என்று அர்த்தமில்லை. ஆனால், இறக்கத்தின் வேகமானது படிப்படியாகக் குறையும் என்று சொல்லலாம். எனவே, சந்தையில் பலவீனமான லாங் பொசிஷன்கள் பெருமளவில் கைவிடப்பட்டுள்ளன என்பது நன்றாகவே தெரிகிறது. அதே சமயம், இன்னும் நிலுவையில் உள்ள லாங் பொசிஷன்கள் வலுவான கரங்களில் உள்ளன என்றும் சந்தை மிகவும் இலகுவானதாக இருக்கிறது என்றும் சொல்லலாம்.

இந்த நிலையும் மாறும், எப்போதும்போல. வரலாற்றில் இதுவரை போர் ஆக்கிரமிப்புகள் நடக்கும்போதெல்லாம், பங்குச் சந்தைகள் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளையே உருவாக்கி இருக்கின்றன. இந்த முறையும் இதற்கு மாறாக நடப்பதற்கான எந்த வலுவான காரணங்களும் இல்லை. ஏனெனில், சந்தை இத்தனை நிகழ்வுகளுக்குப் பிறகும் இண்டெக்ஸ் 2020-21-ல் கண்ட ஏற்றத்தில் 23.6% ரிட்ரேஸ் மென்ட் நிலைக்குதான் இறக்கம் கண்டுள்ளது. இதிலிருந்து நிச்சயம் மீட்சி நடக்கும்.

ஆனால், தற்போது சந்தையில் சென்டிமென்ட் சற்று பாதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் விவகாரம் தொடர்பாக வரக்கூடிய செய்திகள் அடிப் படையில் சந்தையில் ஏற்ற இறக்கம் காணப்படும். எனவே, கவனமுடன் முடிவுகளை எடுக்க வேண்டும். இறக்கங்களில் வலுவான பங்குகளை தாராள மாக வாங்கலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஹிண்டால்கோ (HINDALCO)

தற்போதைய விலை ரூ.517.40

வாங்கலாம்

கடந்த வியாழன் அன்று முழு நாளும் பலவீனமாக இருந்த போதிலும் வலுவான தன்னை நிலைநிறுத்திக்கொண்ட பங்கு களில் ஒன்றாக ஹிண்டால்கோ உள்ளது. இது குறுகிய கால நகர்வுகளின் அடிப்படையில் முடிவெடுக்காமல் தங்களுடைய ஹோல்டிங்கை நீண்ட காலத்துக்கு விடாமல் இருக்கும் முதலீட்டாளர்கள் இந்தப் பங்கில் இருப்பதைக் காட்டுகிறது. எனவே, இப்பங்கு இறங்கினால் தாராளமாக வாங்கலாம். 500-510 என்ற வரம்புகளில் இப்பங்கில் லாங் பொசிஷன்களை எடுக்கலாம். வரும் மாதங்களில் இப் பங்கு ரூ.625 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.475க்குக் கீழ் வைத்துக்கொள்ளவும்.

ஃபைன் ஆர்கானிக்ஸ் (FINEORG)

தற்போதைய விலை ரூ.3,945.00

வாங்கலாம்

இந்தப் பங்கு சந்தையில் ஏற்பட்டுள்ள பலவீனத்தால் எந்தவித பாதிப்புக்கும் உள்ளாக வில்லை. தொடர்ந்து நிலையான நகர்வுகளைக் கொண்டிருந்தது. இப்பங்கின் நகர்வுகள் சில காலத்துக்கு பக்கவாட்டில் இருந் தாலும் வலுவான இறக்கங்களிலும் அதன் போக்கில் நிலையாக இருக்கும் திறன் பாசிட்டிவ் அறிகுறியாகும். எனவே, சந்தை யின் போக்கு ஏற்றத்துக்கு மாறும் போது இப்பங்கின் விலை ஏற்றமடைய அதிக வாய்ப்புள்ளது. எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். குறுகிய காலத்தில் ரூ.4,200 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.3,850க்குக்கீழ் வைத்துக்கொள்ளவும்.

ஜே.எஸ்.டபிள்யு எனர்ஜி (JSWENERGY)

தற்போதைய விலை ரூ.320.25

வாங்கலாம்

நீண்டகால அடிப்படையில் கவனிக்கக்கூடிய பங்குகளில் ஒன்று ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி. கடந்த வார சந்தையின் இறக்கத்திலும் இப்பங்கு நிலையான போக்கில் இருந்து வந்தது. இச்சிமோகு சிஸ்டத்திலும் இப்பங்கு நிலையாகவே உள்ளது. எனவே, தற்போதைய விலையில் இப்பங்கு நீண்ட கால முதலீட்டுக்கு சிறந்த தேர்வாக உள்ளது. வருங்காலத் தில் ரூ.365 - 375 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.300-க்குக் கீழ் வைத்துக்கொள்ளவும்.

தமிழில்: ஜெ.சரவணன்