Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! முதலீட்டாளர்கள் கவனத்துக்கு..!

B U Y & S E L L

பிரீமியம் ஸ்டோரி

இந்தியப் பங்குச் சந்தை கடந்த வாரம் நிறைவடைந்ததில் இருந்து பார்க்கும்போது, சந்தை தொடர்ந்து ஏற்றம் கண்டு அதன் முந்தைய உச்சங்களுக்கு அருகில் நெருங்கியதைப் பார்க்க முடிந்தது. ஏற்கெனவே குறிப்பிட்ட ஏற்றத்தைச் சந்தை பதிவு செய்துள்ள நிலையில் விரைவிலேயே புதிய உச்சங்களை எட்டுவதற்கான அறிகுறிகளுடன் இருக்கிறது.

டாக்டர் 
சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

ஏற்கெனவே நாம் குறிப்பிட்டிருந்தபடி, பிற குறியீடுகளான நிஃப்டி ஜூனியர் மற்றும் மிட்கேப் உள்ளிட்டவை அவற்றின் வரலாற்று உச்சங்களை எட்டியுள்ளன. நிஃப்டி யும் அதன் புதிய உச்சத்தை அடையும்போது சந்தை இன்னும் உற்சாகம் அடையும்.

கடந்த வாரத்தில் வங்கித்துறை குறியீட்டில் காணப்பட்ட மீட்சியானது நிஃப்டிக்குக் கூடுதல் உந்துதலாக இருந்தது. இதனால், பங்கு விலை மேலும் ஏற்றம் கண்டன.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! முதலீட்டாளர்கள் கவனத்துக்கு..!

நிறுவனங்களின் நான்காம் காலாண்டு நிதிநிலை முடிவு கள் தொடர்ந்து சிறப்பாக இருந்துள்ளன. 771 நிறுவனங்களின் முடிவுகளில் 569 பாசிட்டிவ் லாப வளர்ச்சியைக் கொண்டுள்ளன. அவை 55% எபிட்டா வளர்ச்சியையும் 65% லாப வளர்ச்சியையும் கொண்டுள்ளன. இதுவும் சந்தையின் போக்குக்கு உந்துதலாக இருந்தது.

இந்தியப் பங்குச் சந்தை அதன் வரலாற்று உச்சத்தை உடைத்து ஏறும்பட்சத்தில் மொமென்டம் மேலும் ஊக்குவிக்கப்பட்டு நகர்வின் வேகத்தைக் கூட்டும் என்று எதிர்பார்க்கலாம். இதற்கு வங்கித்துறை தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுவது அவசியம்.

வரும் வாரத்தில் சந்தை 15400 என்ற நிலையைத் தக்கவைத்துக்கொண்டு மேலும் ஏற்றத்தின் போக்கில் நகர்ந்தால் நிஃப்டி 15600 என்ற நிலைக்கு எட்டுவதைப் பார்க்கலாம். எனவே, காளையின் போக்கில் பொசிஷன்களை வைத்திருப் பவர்கள் அவற்றைத் தொடரலாம். 15050 என்ற புதிய ஸ்டாப்லாஸுடன் மேலும் புதிய முதலீடுகளை மேற்கொள்ளலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! முதலீட்டாளர்கள் கவனத்துக்கு..!

ராலிஸ் (RALLIS)

தற்போதைய விலை ரூ.308.85

வாங்கலாம்

இரண்டு வருடமாக இருந்த பெரிய ரவுண்டிங் பேட்டர்ன் வெற்றிகரமாக பிரேக் அவுட் ஆகி ஏற்றம் கண்டிருக்கிறது. தற்போது அது யு-வி பேட்டர்னாக மாறியுள்ளது. இதனோடு நீண்டகாலமாக இருந்துவரும் ஒருங்கிணைப்பும் உள்ளதால், நீண்டகால முதலீட்டுக்கு ஏற்ற பங்காக உள்ளது. ஓராண்டு காலத்தில் ரூ.400-450 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் 285 ரூபாயுடன் இந்தப் பங்கை 6 முதல் 12 மாத முதலீடாக வாங்கலாம்.

ஜி.என்.எஃப்.சி (GNFC)

தற்போதைய விலை ரூ.392.00

வாங்கலாம்

ஜி.என்.எஃப்.சி பங்கின் விலை போக்கில் நல்ல ஏற்றம் தெரிகிறது. நீண்டகாலமாக இந்தப் பங்கின் ஏற்றத்துக்கான விகிதம் மந்தமாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து குறிப்பிட்ட அளவு வேகமெடுத்திருக்கிறது. தற்போது படிக்கட்டு வடிவிலான பேட்டர்ன் உருவாகியுள்ளது. எனவே, பங்கின் விலை குறுகிய காலத்தில் ரூ.440-450 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் 380 ரூபாயுடன் பங்கை வாங்கலாம்.

வி கார்ட் இண்டஸ்ட்ரீஸ் (VGUARD)

தற்போதைய விலை ரூ.263.25

வாங்கலாம்

இந்தப் பங்கில் நீண்ட காலமாகக் காணப்பட்ட ஒருங்கிணைப்பு தற்போது சிறப்பான நிலையில் உள்ளது. இந்த ஒருங்கிணைப்பு காலத்தில் இரண்டு நல்ல ரவுண்டிங் பேட்டர்ன்களையும் உருவாக்கியுள்ளது. நீண்டகாலத்துக்கான சார்ட்டிலும் நல்ல ஒருங்கிணைப்பு பேட்டர்னைப் பார்க்க முடிவது முக்கிய அம்சமாகும்.

தற்போது பங்கின் விலை நகர்வு பிரேக் அவுட் ஆகி ஏற்றம் காணத் தொடங்கி யுள்ளது. ரூ.244 ஸ்டாப்லாஸுடன் தற்போதைய விலையில் வாங்கலாம். குறுகிய காலத்தில் ரூ.320 வரை உயர வாய்ப்புள்ளது.

தமிழில்: திவ்யா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு