Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

கடந்த வாரத்தில் சந்தையின் போக்கு குறித்து கவனமாக இருந்து முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும், இறக்கங்களில் வலுவான பங்குகளை தாராளமாக வாங்கலாம் என்றும் கூறியிருந்தோம்.

டாக்டர் சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

சந்தை கிட்டத்தட்ட அதற்கேற்பவே நகர்ந்தது. அது தொடர்ந்து எல்லா லாஜிக்கையும் மீறி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஏற்ற, இறக்கங்களுக்கு உள்ளானது. ரஷ்யா- உக்ரைன் போர் சூழல் தீவிரமாகிக்கொண்டே இருக்கும் சூழலில் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து எந்த தெளிவான முடிவுக்கும் வர முடியாத நிலையே உள்ளது. எனவே, தொடர்ந்து சவால்களைச் சந்திப்பதற்கு தயாராக இருக்க வேண்டும்.

இந்திய சந்தைகளின் இண்டெக்ஸ் குறியீடுகள் தங்களின் வலுவை இழந்துவிடவில்லை என்றாலும், முந்தைய வாரங்களில் கண்ட இறக்க நிலைகள் தொடர்ந்து அச்சுறுத்தலாகவே இருக்கின்றன.

இறக்கங்களிலிருந்து சந்தை உடனடியாக மீண்டு வந்திருந்தாலும், கடந்த வாரத்தில் சில வர்த்தக தினங்களில் குறிப்பிடத்தக்க வகையில் நகர்வுகளைப் பார்க்க முடிய வில்லை. விலைநகர்வுகள் இடைவெளியை நிரப்புவதற்கு ஏற்றம் காணும் அளவில்தான் இருந்தன.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

நிஃப்டி அதன் நகர்வுகளில் ஏற்பட்டிருந்த இடைவெளி களை நிரப்பியிருக்கிறது ஆனால், அதைத் தாண்டி பெரிதாக நகரவில்லை. மேல்நோக்கி நகர்த்துவதற்கான பாசிட்டிவ் காரணிகள் இல்லாததால் பெரும்பாலானவர் களைக் குறிப்பிட்ட பங்குகள் சார்ந்து முடிவெடுக்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கியது. இதனால் சந்தையில் நகர்வுகள் மிகவும் குறைவாகவே காணப்பட்டன.

இந்த நிலையில், சார்ட் நகர்வுகளை ஆராய்ந்து பார்க்கும்போது, சந்தையின் போக்கு தொடர்ந்து இறக்கத்துக்கான அழுத்தங்களுடனே காணப்படுகிறது.

சமீபத்திய இறக்க நிலைகளாக உள்ள 16470-16500 என்ற வரம்பானது அச்சுறுத்தலில் இருக்கிறது. தற்போது மெட்டல் துறை பங்குகளில்தான் வலுவான வாங்கும் ஆர்வம் காணப்படுகிறது.

காரணம், ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் விநியோக சங்கிலி பாதிக்கும் நிலை உருவாகியிருக்கிறது. இதனால் கமாடிட்டி பொருள்களின் விலை உயர்வு காரணமாக மெட்டல் பங்குகளில் முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியிருக்கிறது. சர்வதேச அளவில் ரஷ்யா, உக்ரைன் இரண்டும் உலோகங்கள் ஏற்றுமதியில் பெரிய அளவில் பங்கு வகிக்கின்றன.

அதேசமயம், பேங்க் நிஃப்டி தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது. இந்தக் குறியீட்டில் காணப்படும் கரடியின் போக்கானது தொடர்வதால், சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தி, இண்டெக்ஸ் குறியீடுகளையும் இறக்கத்துக்கு உள்ளாக்கி வருகிறது. இதில் சப்போர்ட் நிலையாக காணப்படும் 34000 என்ற நிலையான தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இந்த நிலையில், வரும் வாரத்தில் நகர்வுகளில் மீட்சி இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால், இந்தத் துறையில் மொமன்டம் தொடர்ந்து பலவீனமாக இருக்கிறது. மேற்சொன்ன நிலைகள் உடையும்பட்சத்தில் மொமன்டம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகலாம்.

இந்த வாரத்தில் எக்ஸ்பைரி தொடர்ந்து 16800 என்ற நிலைக்குக் கீழே தக்கவைத்திருக்கிறது. இந்த நிலையைக் காளையின் போக்கு உருவாவதற்கான வினையூக்கி நிலையாக எடுத்துக்கொள்ளலாம். அதுவரை இறக்கங்களில் நல்ல பங்குகளை வாங்கி, ஏற்றத்தில் விற்று லாபமெடுக்கும் அணுகுமுறையைத் தொடரலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஹிந்துஸ்தான் ஆயில் (HINDOILEXP)

தற்போதைய விலை ரூ.202.00

வாங்கலாம்

கடந்த சில மாதங்களாகவே இந்தப் பங்கு நிலையான ஏற்றத்தின் போக்கை உருவாக்கி இருப்பதால், சந்தையில் ஆர்வத்தைத் தூண்டியிருப்பதுடன் இதில் ஏற்றம் இருக்கும் என்பதற்கான நம்பிக்கையையும் அனைவருக்கும் ஏற்படுத்தி வந்திருக்கிறது.

இந்தப் பங்கில் காணப்படும் காளையின் போக்கு சமீபத்தில் ஏற்பட்ட இறக்கத்தால் எந்தவித பாதிப்புக்கும் உள்ளாகவில்லை.

மேலும், இதன் சப்போர்ட் நிலைகள் வலுவாக இருக்கிறது. தொடர்ந்து ஏற்றம் கண்டுவரும் வாரங்களில் 260 வரை விலை உயர வாய்ப்புள்ளது. எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.185-க்குக்கீழ் வைத்துக் கொள்ளவும்.

ஜிண்டால் ஸ்டீல் (JINDALSTEL)

தற்போதைய விலை ரூ.445.15

வாங்கலாம்

மெட்டல் பங்குகளில் தற்போது காணப்படும் ஏற்றத்தின் நகர்வுகள் இப்பங்கின் மீது புதிய ஆர்வத்தை உருவாக்கி உள்ளது. இதனால் இப்பங்கில் உருவாகியுள்ள மொமன்டம் கணிசமான ஏற்றத்தின் நகர்வையும் சாத்தியமாக்கி இருப்பதை கடந்த வாரம் பார்க்க முடிந்தது.

இந்த நகர்வு கடந்த ஒரு வருட ஏற்றத்தைத் தாண்டியிருப்பதால், மேலும் இப்பங்கில் தொடர் ஏற்றத்தைக் காணலாம். எனவே, தற்போதைய விலையிலும் ரூ.431 வரையிலான இறக்கத்திலும் இந்தப் பங்கை வாங்கலாம். ரூ.480 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.425-க்குக் கீழ் வைத்துக்கொள்ளவும்.

எரிஸ் லைஃப்சயின்ஸ் (ERIS)

தற்போதைய விலை ரூ.705.00

வாங்கலாம்

ஹெல்த்கேர் சர்வீசஸ் சார்ந்த பங்குகள் சில காலமாகவே சந்தையில் சிறப்பாக ஏற்றம் கண்டு வருகின்றன. எரிஸ் லைஃப்சயின்ஸ் பங்கின் விலை நகர்விலும் சமீபத்தில் ஏற்பட்ட இறக்கத்துக்குப் பிறகு நல்ல முன்னேற்றம் தெரிகிறது.

இந்தப் பங்கு சில வலுவான கிளவுட் சப்போர்ட் நிலைகளுக்கு இறங்கிய பிறகு நகர்வானது மீண்டு இரட்டை பட்டை மீட்சி பேட்டர்னை உருவாக்கியிருக்கிறது. இந்த பேட்டர்ன் உருவாகியுள்ள பங்குகளில் நகர்வுகள் ஏற்றத்தின் போக்கில் இருக்கும். எனவே, இப்பங்கை தற்போதைய விலையில் வாங்கலாம்.

அடுத்த சில வாரங்களில் ரூ.790 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.640-க்குக் கீழ் வைத்துக்கொள்ளவும்.

தமிழில்: ஜெ.சரவணன்