Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

இந்தியப் பங்குச் சந்தை கடந்த வாரத்தில் கொந்தளிப்பாகவே இருந்தது. வாராந்தர சார்ட்டுகளில் காணப்படும் பச்சை நிற கேண்டில்கள் நல்ல மீட்சியைப் பிரதிபலிப்பதாக இருந்தாலும் கடந்த வாரத்தில் சந்தையை அணுகுவது கடினமாகவே இருந்தது. நாளின் வர்த்தக தொடக்க இடைவெளிகளும் பெரும்பாலும் எல்லா நாள்களிலும் காணப் பட்டன.

டாக்டர் சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

இவை ஏதாவதொரு திசையில் சந்தையை நகர்த்துவதாக இருந்ததுடன், எந்தவித எச்சரிக்கை அறிகுறிகளும் இல்லாமல் இருந்தது. இன்ட்ராடே ஏற்ற இறக்கமானது மிக அதிகமாக இருந்தது. இதனால் சந்தையின் போக்கைத் தீர்மானிப்பது கடினமாக இருந்தது. சந்தை சற்று மீண்டுவந்ததால் வர்த்தகர்களும் சில நாள்களுக்கு கவலையில்லாமல் இருந்தனர்.

ஆனால், வியாழக்கிழமை அன்று காணப்பட்ட இடைவெளி பெரிய அளவில் ஏற்றத்துக்கான நகர்வாகப் பார்க்கப்பட்டது. ஆனால், அது நகர்வில் சாத்தியமாகவில்லை. எனவே, இப்போது சந்தை மீண்டுவந்திருந்தாலும் நிலையற்றத் தன்மை இன்னமும் நீடிக்கிறது. அதே சமயம், செய்திகளில் ரஷ்யா - உக்ரைன் போர் விவகாரம் மையக்கருவாக மாறிய தால், கொரோனா செய்திகள் காணாமல் போயின. தொடர்ந்து மாறுபட்ட அறிக்கைகள் வெளியானதால், சந்தை எந்தவித எச்சரிக்கை அறிகுறிகளும் இல்லாமல் மேல்நோக்கி நகர்ந்தது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

சந்தையில் சென்டிமென்ட் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் முதலீடுகள் நீடித்து இருப்பதற்கான சூழல் அமையவில்லை. இறக்கத்தில் குறைந்த விலையில் வெற்றிகரமாக வாங்கி யவர்கள்கூட சந்தை திரும்பியதும் பொசிஷன்களிலிருந்து வெளியேறியதைப் பார்க்க முடிந்தது. போர்ப் பதற்றத்தின் முக்கிய காரணிகளான கச்சா எண்ணெய், தங்கம் கடுமையாக உயர்ந்து அவை வரலாற்று உச்சத்தை எட்டிய நிலையில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் வலுவிழந்துள்ளது. எஃப்.ஐ.ஐ விற்பனை தொடர்ந்து அழுத்தத்தை உருவாக்கி வருகிறது. கடந்த சில நாள்களில் அவர்களின் விற்பனை உயர்ந்தது. அதிர்ஷ்டவசமாக உள்நாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடு செய்து வருவதால் எஃப்.ஐ.ஐ விற்பனையின் அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. இவ்வாறு நடக்காமல் இருந்தால், சந்தைக் குறியீடுகள் மேலும் மோசமான இறக்கத்தை அடைந்திருக்கும்.

கடந்த வாரத்தில் நடந்த டிரேடிங் சார்ட்டைப் பார்க்கும் போது, விலைகள் பிட்ச்ஃபோர்க்கில் குறிப்பிட்டுள்ள ஒரு நிலையிலிருந்து மீண்டுவந்துள்ளது. இந்த நிலையானது கிட்டத்தட்ட 2021 ஏப்ரலில் ஏற்பட்ட இறக்கத்திலிருந்து 62% ரிட்ரேஸ்மென்ட் நிலைக்கு அருகில் உள்ளது. தற்போதைய நகர்வின் போக்கு நிலைத்திருக்கும்பட்சத்தில், சந்தை 17000 என்ற நிலையை நோக்கி நகரும். அதே சமயம், முந்தைய இறக்கநிலைகளுக்கு மீண்டும் நகர்வதற்கும் வலுவான சாத்தியங்கள் உள்ளன. ஏனெனில், இன்னமும் சந்தையின் சென்டிமென்ட் பலவீனமாக எளிதில் உடையக்கூடியதாக, இழுத்த இழுப்புக்கு செல்லக்கூடியதாகவும்தான் இருக்கிறது.

காளையின் போக்கு உருவாகி சந்தையை ஏற்றத்துக்குக் கொண்டுசெல்ல பல புதிய உந்துதல்கள் தேவையாக உள்ளன. ஆனால், அதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளன. கச்சா எண்ணெய் விலை உயர்வு அவற்றில் முக்கிய மான ஒன்று. போர்ச் சூழலும் விரைவில் முடிவுக்கு வர வேண்டும். தேர்தல் முடிவுகள் ஆளும்கட்சியான பா.ஜ.க-வுக்கு சாதகமாக வந்திருப்பதால், சந்தையில் குறிப்பிட்ட வரம்பி லான நகர்வுகளைப் பார்க்கலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஐ.ஓ.எல் கெமிக்கல்ஸ் (IOLCP)

தற்போதைய விலை ரூ.412.00

வாங்கலாம்

சந்தை காளையின் ஆதிக்கத் தில் இருக்கும்போதெல்லாம் அதிகம் கவனிக்கப்பட்ட பங்காக இது இருந்தது. ஆனால், பின்னர் ஏற்பட்ட இறக்கத்தில் பங்கின் விலை அதன் உச்சமான 900 லிருந்து சமீபத்தில் ரூ.300 வரை இறங்கியது. தற்போது இந்தப் பங்கின் வர்த்தகத்தில் வால்யூம் அளவில் முன்னேற்றம் காணப் படுகிறது. இதன்மூலம் இந்தப் பங்கு அதிக விற்பனைக்கு உள்ளானதை உணர்த்தி மீண்டும் கவனத்தைத் திருப்பியுள்ளது. தற்போதைய விலையில் வாங்கலாம். குறுகிய காலத்தில் ரூ.500 - 530 வரை உயர வாய்ப்புள்ளது.

எரிஸ் லைஃப்சயின்ஸ் (ERIS)

தற்போதைய விலை ரூ.721.00

வாங்கலாம்

சில பார்மா பங்குகள் முன்னணி பார்மா பங்குகளைப் போல, மோசமான பாதிப்புக்கு உள்ளாகவில்லை. அவற்றில் ஒன்று, எரிஸ் லைஃப்சயின்ஸ்.

சமீபத்தில் காணப்பட்ட கடும் இறக்கத்திலும் இப்பங்கு 38% இறக்கத்திலிருந்து மீண்டது. அதே சமயம் இதன் ஆர்.எஸ்.ஐ இண்டி கேட்டரும் சப்போர்ட் நிலைக்கு வந்தது. எனவே, இந்தப் பங்கில் ஏற்றத்துக்கான சாத்தியம் உள்ளன. தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.670-க்குக் கீழ். குறுகிய காலத்தில் ரூ.800 வரை உயர வாய்ப்புண்டு.

வெங்கீஸ் (VENKEYS)

தற்போதைய விலை ரூ.2,212.95

வாங்கலாம்

இப்பங்கில் காணப்பட்ட இறக்கமானது அதன் விலையை உச்ச நிலையிலிருந்து 62% அளவுக்கு குறைந்துள்ளது. ஆனால், தற்போது இப்பங்கில் அதன் சப்போர்ட் நிலையிலிருந்து மீண்டு வருவதற்கான பேட்டர்ன் உருவாகி யுள்ளது. அதற்கான நகர்வுகளையும் பார்க்க முடிகிறது. இப்பங்கில் உண்டான இறக்கத்தின் போக்கு முடிவுக்கு வந்துள்ளது. தற்போதைய விலையில் இப்பங்கை வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.2000-க்குக் கீழ் வைத்துக்கொள்ளவும். குறுகிய காலத்தில் ரூ.2900 வரை உயர வாய்ப்புள்ளது.

தமிழில்: ஜெ.சரவணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism