Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

கடந்த வாரத்துக்கு முந்தைய வாரத்தில் பங்குச் சந்தை வர்த்தகம் பாசிட்டிவ்வான போக்கில் நிறைவடைந்தது. விலைகள் அதன் இறக்க நிலைகளிலிருந்து மீண்டு வலுவான ரிவர்சல் கேண்டில் பேட்டர்ன்களை உருவாக்கின.

டாக்டர் சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

ஆனால், அந்தப் போக்கு கடந்த வாரமும் தொடர்ந்து நிலைக்க போதுமான நிகழ்வுகள் தேவையாக இருந்தன. கடந்த வாரத்தில் முதல் இரண்டு நாள்கள் சர்வதேச செய்தி வரவுகளின் அடிப்படையில் தோராயமாக பாசிட்டிவ் போக்கில் நகர்ந்தது. இரண்டு பெரிய இடைவெளிகள் கொண்ட வர்த்தகத்தையும் பார்க்க முடிந்தது. ஏற்ற நகர்வுகள் வாரத்தின் இறுதி வரையிலும் தக்கவைத்துக்கொண்டன. இது வர்த்தகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

உக்ரைன் விவகாரத்தில் நேரடியாக எதுவும் நடக்கவில்லை என்றாலும், எண்ணெய், தங்கம் இரண்டும் உடனடியாக மீண்டு வந்தன. இதனால் கடந்த வாரத்தில் காளையின் போக்கு திரும்பி வருவதற்கான வலிமையைப் பெற்றது. கச்சா எண்ணெய் விலை அதன் சமீபத்திய உச்சமான 130 - 135 டாலரிலிருந்து 94 டாலர் வரையிலும் இறக்கம் கண்டது. உலகம் முழுவதுமுள்ள சந்தை செயற்பாட் டாளர்களுக்கு இது மிகப்பெரிய ஆசுவாசத்தைக் கொடுத்தது. இந்தியாவிலும் எரிபொருள் விலை 5 மாநிலத் தேர்தலுக்குப் பிறகு, உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் எரிபொருள் விலை உயர்வு குறித்த பயம் காணாமல் போனது. அதேசமயம் அரசு எரிபொருள் விலையை உயர்த்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றாலும் முன்பிருந்த அளவுக்கு பயம் இப்போது இல்லை.

மற்றொரு முக்கிய கமாடிட்டியான தங்கத்தின் விலையும் கணிசமாகக் குறைந்தது. 2078 டாலர் என்ற உச்சத்திலிருந்து 1895 டாலர் அளவுக்குக் குறைந்தது. இத்தகைய கூர்மையான இறக்கம், கச்சா எண்ணெய் விலை இறக்கத்துடன் இணைந்து சர்வதேச அளவில் வர்த்தகர்களிடையே காணப்பட்ட அச்சத்தைக் குறைத்தது. மேலும் 5 மாநில தேர்தல் முடிவு களும் ஆளும்கட்சியான பா.ஜ.க-வுக்கு சாதகமாகவே இருந்தது. 4 மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்துள்ளது. கூடுதலாக எதிர்பார்த்தபடியே அமெரிக்க ஃபெடரல் வங்கி 0.25 சதவிகிதம் வட்டி விகிதத்தை உயர்த்தியிருக்கிறது. இவையனைத்தும் சந்தையின் நகர்வுகளில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இந்த பாசிட்டிவ் காரணிகளால் பங்குச் சந்தை ஏற்றத்தின் போக்கில் நகர்ந்தது. இந்தப் போக்கு தொடர்ந்து வரும் வாரமும் இருக்க வேண்டுமெனில் அதற்கான காரணிகளின் பங்களிப்பும் அவசியம். அப்படி இருக்கும்பட்சத்தில் நிஃப்டி நகர்வுகள் 17500-ஐ நோக்கி நகரலாம். அந்த நகர்வில் முந்தைய இறக்கங்களின் சில ரீட்ரேஸ்மென்ட் இலக்குகளையும் சவால் செய்யும் என எதிர்பார்க்கலாம். குறிப்பிட்ட பங்குகள் சார்ந்த செயல்பாடுகள் சந்தையில் அதிகமாக இருக்கும். எனவே, சந்தையின் செயல்பாட்டுக்கு முந்தைய வாரங்களோடு ஒப்பிடுகையில் தொடர்ந்து பாசிட்டிவ்வாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. முதலீட்டாளர்கள் லாங் பொசிஷன்களை வைத்திருக்கலாம். இப்போதைய நிஃப்டி ஸ்டாப்லாஸ் நிலையாக 16800-க்குக் கீழ் வைத்துக் கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஐ.எஃப்.பி இண்டஸ்ட்ரீஸ் (IFBIND)

தற்போதைய விலை ரூ.995.00

வாங்கலாம்

ஒயிட் கூட்ஸ் உற்பத்தி நிறுவனப் பங்குகள் எப்போதுமே சிறப்பாகச் செயலாற்றி வருகின்றன. இவற்றில் ஒன்றான ஐ.எஃப்.பி இண்டஸ்ட்ரீஸ் பங்கில் இந்த வாரத்தில் சமீபத் திய இறக்கத்தின் 50 சதவிகித ரீட்ரேஸ்மென்ட் ரெசிஸ்டன்ஸ் நிலையிலிருந்து ஏற்றம் காணப் பட்டது. இதில் காணப்படும் அடுத்தகட்ட நகர்வுகள் அடுத் தடுத்த உச்சங்களுக்கு இட்டுச் செல்லும் வாய்ப்புகள் உள்ளன. மேலும், இப்பங்கில் தொடர்ந்து காணப் பட்ட இறக்கம் முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது. எனவே, இப்போதைய விலையில் வாங்கலாம். ரூ.1,080 வரை உயர வாய்ப்பு உள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.960-க்குக் கீழ் வைத்துக் கொள்ளவும்.

ட்ரென்ட் (TRENT)

தற்போதைய விலை ரூ. 1,265.40

வாங்கலாம்

இப்பங்கு சில காலத்துக்கு ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள்ளாகவே நகர்ந்துகொண்டிருந்தது. தற்போது அது முடிவுக்கு வந்து அதிலிருந்து ஏற்றம் காண தயாராக இருப்பது தெரிகிறது. கடந்த வாரத்தில் வலுவான பிரேக்அவுட் நிகழ்ந்து மேல் நோக்கி நகர்வதைப் பார்க்க முடிந்தது. மேலும், இதன் வர்த்தகத்தில் நல்ல வால்யூமும் மொமன்டமும் இருந்தது. வரும் நாள்களில் மேலும் ஏற்றம் காணப் படும் என எதிர்பார்க்கலாம். எனவே, இப்பங்கை தற்போதைய விலையில் வாங்கலாம். இலக்கு விலை ரூ.1,400 வரை உள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.1,200க்குக் கீழ் வைத்துக் கொள்ளவும்.

டிம்கென் (TIMKEN)

தற்போதைய விலை ரூ. 2,199.00

வாங்கலாம்

புதிய உச்சங்களுக்கு தொடர்ந்து நகரும் பங்குகள் எப்போதுமே கவனிக்கக்கூடியவையாக உள்ளன. (குறிப்பாக நிலையற்ற சந்தையில் உச்சங்களுக்கு நகரும் பங்குகள்) இவற்றில் சில சமயங்கள் இன்சைடர் வர்த்தகம் நடக்க வாய்ப்புள்ளது. அதுவே அதிக வால்யூமுடன் வர்த்தகம் ஆகும்போது பெரிய அளவிலான முதலீடுகள் உள்ளே வருவதாகக் கூறலாம். அத்தகைய பங்காக உள்ள டிம்கென் பங்கை ஆறு மாதத்துக்கு வைத்திருக்கும் வகையில் இப்போது வாங்கலாம். இலக்கு விலை ரூ.2,400. ஸ்டாப்லாஸ் ரூ.2,050க்குக் கீழ் வைத்துக்கொள்ளவும்.

தமிழில்: ஜெ.சரவணன்