Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

இந்தியப் பங்குச் சந்தையை பாதிக்கும் செய்திகள் இந்த வாரம் பெருமளவு இல்லாதிருந்தபோதிலும் சந்தையின் நகர்வு முன்னோக்கி செல்லவில்லை. ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கங்கள் அதிக அளவு இருந்த போதிலும் நிஃப்டி புள்ளிகள் வியாழக்கிழமை அன்று 17,222 என்று கடந்த வார எக்ஸ்பயரி அளவிலேயே முடிவடைந்துள்ளது. குறுகியகால ஏற்றங்கள் ஆப்ஷன் முறையில் வர்த்தகம் செய்யும் வர்த்தகர்களுக்கு ஏற்புடையதாக இருந்தாலும், நீண்டகால முதலீட்டாளர்களுக்கு சந்தையின் போக்கு சாதகமாக இல்லை.

டாக்டர் சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

பேங்க் நிஃப்டியும் இதே போக்கில் வர்த்தகமாகி வந்தாலும் வியாழக்கிழமை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வங்கித்துறை பங்குகளை அதிக அளவுக்கு விற்பனை செய்துள்ளனர் என்ற செய்தி வந்ததன் காரண மாக, சற்று அதிக இறக்கத்தைச் சந்தித்துள்ளது. மேலும், கோட்டக் வங்கி மற்றும் ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் வெளிநாட்டு முதலீட்டாளர் கள் அதிக அளவு பங்குகளை விற்பனை செய்ததால் பேங்க் நிஃப்டி குறியீடு அதிக அளவு சரிவை சந்தித்தது. இதன் பாதிப்பு காரணமாக வியாழன் அன்று நிஃப்டி குறியீடு சற்று சரிந்து முடிவடைந்தது.

மேலும், அமெரிக்காவைத் தொடர்ந்து சில ஐரோப்பா நாடுகள் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மீது தடை விதிக்க வேண்டும் என்று பேசத் தொடங்கியதன் காரணமாக சென்ற வாரம் சற்று சரிவை சந்தித்த விலை, மீண்டும் அதிக அளவு உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து ரஷ்யாவும், தன்னிடம் நட்பாக இல்லாத நாடுகள் ரஷ்யாவிடமிருந்து வாங்கும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வர்த்தகத்துக்கு ரஷ்ய கரன்சியான ரூபல் மூலமே பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியது, கச்சா எண்ணெய் விலையை மேலும் உயர்த்தியுள்ளது. அமெரிக்காவின் பணவீக்க விகிதமும் அந்த நாட்டின் 40 ஆண்டுக்கால உச்சத்தில் இருப்பது சந்தையில் பாதகமானதாகப் பார்க்கப்படுகிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

கடந்த சில மாதங்களைப் போல் வெளி நாட்டு முதலீட்டாளர்கள் சென்ற வாரம் பங்கு களை அதிக அளவு விற்பனை செய்யாமல் இருந்தது சந்தையின் சரிவைக் குறைத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 2,800 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளனர். இது கடந்த ஆறு மாதங்களில் மிக அதிக அளவாகும்.

அமெரிக்காவின் அதிக பணவீக்கம் காரணமாக அதிக அளவு வட்டி விகிதம் உயர்த்தப்பட இருப்பது சந்தைக்கு பாதகமாக மாறலாம். என்றாலும், அட்வான்ஸ் டாக்ஸ் அதன் உச்ச அளவில் வசூலாகி இருப்பது மற்றும் ஏற்றுமதியின் அளவு உச்சத்தில் இருப்பது நமது நாட்டுக்கு சாதகமானது. சென்ற வாரம் நிஃப்டி குறியீடு அதிகபட்சமாக 17500 வரை செல்லும் என்று குறிப்பிட்டிருந்தோம். அந்த நிலையே வரும் வாரத்துக்கும் பொருந்தும். சந்தை இறக்கத்தைச் சந்தித்தால் நல்ல பங்கு களை நீண்டகால நோக்கில் வாங்கலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

மிண்டா கார்ப் (Minda Corp)

தற்போதைய விலை ரூ.206.85

வாங்கலாம்

ஆட்டோ உபரி வாகனத் தயாரிப்பு நிறுவனமான மிண்டா கார்ப் பங்கின் விலை நிலையான ஏற்றத்தைச் சந்தித்து வருகிறது. மேலும், பல ஆட்டோ உபரி வாகன நிறுவன பங்குகள் நல்ல ஏற்றத்தைச் சந்தித்துள்ளன. இது இந்தப் பங்குக்கு சாதகமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. தற்போதைய விலையில் வாங்கலாம். ஆறு மாத காலத்தில் 290 ரூபாய் வரை இந்தப் பங்கு உயர வாய்ப்பு உள்ளது. ரூ.180 ஸ்டாப்லாஸ் வைத்துக்கொள்ளலாம்.

ஹிந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளோரர் (Hindustan Oil Explo)

தற்போதைய விலை ரூ.220

வாங்கலாம்

சமீபத்தில் நிறுவனத்தைப் பற்றிய பாசிட்டிவ் செய்தி காரணமாக இந்த நிறுவனப் பங்கு விலை கணிசமான உயர்வைச் சந்தித்தது. அதன் பிறகு, சில காலம் கன்சாலிடேஷனைத் தொடர்ந்து இந்தப் பங்கின் போக்கில் ஏற்றத்தின் அறிகுறி தென்படத் தொடங்குகிறது. தற்போதைய விலையில் வாங்கலாம். ஆறு மாத காலத்தில் 300 ரூபாய் வரை விலை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸாக ரூ.210 வைத்துக்கொள்ளலாம்.

அவாந்த் சுகர் (Avadh Sugar)

தற்போதைய விலை ரூ.752

வாங்கலாம்

சக்கரைப் பங்குகளின் விலைக்கு தற்போது நல்ல டிமாண்ட் நிலவி வருகிறது. அதிக அளவு வெளிநாடுகளுக்கு இந்த நிறுவனம் சர்க்கரையை ஏற்றுமதி செய்து வருகிறது. மேலும், மத்திய அரசு பெட்ரோலுடன் சர்க்கரையின் உப பொருளான எத்தனால் அளவை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது சர்க்கரைத் துறை சார்ந்த நிறுவனங்களுக்கு சாதக மான விஷயமாகப் பார்க்கப் படுகிறது. இந்த நிறுவனத்தின் பங்குகள் தற்போது கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்த நிறுவனப் பங்குகளை தற்போ தைய விலையில் வாங்கலாம். இன்னும் சில மாதங்களில் ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸாக ரூ.700 வைத்துக்கொள்ளவும்

தமிழில்: ஷியாம் ராம்பாபு