பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

இந்த வாரத்தில் நிஃப்டி குறியீடு 17500 புள்ளிகள் வரை அதிகரிக்கும் என்று குறிப்பிட்டிருந்தோம். அதுபோல, நிஃப்டி குறியீடு நமது இலக்கைக் கடந்து அதிகபட்சமாக 17540 வரை இந்த வாரம் உயர்ந்து வர்த்தகமாகியுள்ளது.

டாக்டர் சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

நாம் கணித்ததைப்போல, இந்த வாரம் பெரும்பாலும் பங்குச் சந்தை காளையின் பிடியிலேயே இருந்து வந்தது. முதலீட்டாளர்கள் இடையே பங்குகளை வாங்கும் ஆர்வம் அதிகரித்துள்ளதை இந்த வாரம் நன்கு அறிய முடிந்தது.

ரஷ்யா - உக்ரைன் இடையே நடந்த பேச்சு வார்த்தைகள் சற்று சாதகமான சூழ்நிலையைப் பங்குச் சந்தையில் உருவாக்கியுள்ளது. சென்ற வாரம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஐரோப்பிய பயணத்தின்போது ஐரோப்பா நாடுகள் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்குத் தடை விதிக்க வாய்ப்பு உள்ளது என்ற அச்சம் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது.

ஆனால், அது போன்ற தடை எதுவும் விதிக்கப்படாத காரணத்தால் கச்சா எண்ணெய் விலை சென்ற வாரத்தை ஒப்பிடும் போது 10% வரை குறைந்துள்ளது. இது பங்குச் சந்தைக்குச் சாதகமாக மாறியுள்ளது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

நிஃப்டி குறியீட்டின் சார்ட், காளைக்கு சாதகமாக இருப்பது போன்று தோன்றினாலும் நிலையான முன்னேற்றப் போக்கு இன்னும் தென்படவில்லை. என்றாலும், முதலீட்டாளர் களிடம் பாசிட்டிவ் போக்கு தோன்றத் தொடங்கியுள்ளதை ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் குறியீடுகளும் இந்த வாரம் உயர்ந்துள்ளதை வைத்து அறிய முடிகிறது.

இந்தச் சாதகமான போக்கு வரும் வாரத்திலும் தொடருமேயானால், இந்த வாரம் நிஃப்டி குறியீடு 17650-17700 என்ற அளவுக்கு உயரும். அதற்கு ஐ.டி, பேங்கிங் மற்றும் எஃப்.எம்.சி.ஜி துறை சார்ந்த பங்குகளின் ஒத்துழைப்பு மிக அவசியம். சந்தை இறங்கினால் நிஃப்டி முதல் ரெசிஸ்டன்ஸ் லெவல்-ஆக 17300 புள்ளிகளை வைத்துக்கொள்ளலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

சாரதா கார்ப் (Sharda CropChem)

தற்போதைய விலை ரூ.615

வாங்கலாம்

அக்ரோ கெமிக்கல் துறை சார்ந்த நிறுவனப் பங்குகள் தற்போது அதிக ஏற்றத்தைக் கண்டு வருகின்றன. அந்தத் துறையில் முக்கிய நிறுவனமான சாரதா கார்ப் நிறுவனத்தின் பங்கில் நிலையான ஏற்றத்துக்கான அறிகுறி தென்படத் தொடங்குகிறது.

கடந்த வியாழனன்று இந்த நிறுவனப் பங்கு 10% அப்பர் சர்க்யூட்டில் வர்த்தகமாகியுள்ளது. இந்த நிறுவனப் பங்கை தற்போதைய விலையில் வாங்கலாம். சில மாதங்களில் ரூ.720 வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.590-ஆக வைத்துக்கொள்ளலாம்.

பிர்லா கார்ப் (Birla Corp)

தற்போதைய விலை ரூ.1,180

வாங்கலாம்

சிமென்ட் துறை சார்ந்த நிறுவன பங்குகள் கடந்த இரண்டு மாதங்களாகக் கணிசமான சரிவைக் கண்டு வருகிறது. அந்த வகையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலை 50% வரை விலை குறைந்தது. அதன்பிறகு, தற்போது இந்த நிறுவனப் பங்கின் விலை உயரத் தொடங்கியுள்ளது. மேலும், சிமென்ட் விலை உயர்த்தப்பட்டது மற்றும் கச்சா எண்ணெய் விலை சற்றுக் குறைந்துள்ளது சிமென்ட் நிறுவனப் பங்குகளுக்கு சாதகமான விஷயமாகப் பார்க்கப் படுகிறது. இந்தச் சாதகமான போக்குக் காரணமாக வரும் காலத்தில் இந்தப் பங்கின் விலை ரூ.1,330 வரை விலை உயர வாய்ப்புள்ளது. அதனால், இந்த நிறுவனப் பங்கின் தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸாக ரூ.1,100 வைத்துகொள்ளலாம்.

கே.இ.ஐ இண்டஸ்ட்ரீஸ் (KEI Industries)

தற்போதைய விலை ரூ. 1,256

வாங்கலாம்

இந்த நிறுவனத்தின் பங்கு தற்போது அதன் உச்சபட்ச விலையில் வர்த்தகமாகி வருகிறது. இதன் சார்ட் பேட்டர்ன் இந்தப் பங்கு விலை மேலும் கணிசமாக உயரும் என்பதை உணர்த்துகிறது. அதனால் இந்த நிறுவனப் பங்கை தற்போதைய விலையில் வாங்கலாம். சில மாதங்களில் ரூ.1,500 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸாக ரூ.1,190 வைத்துக்கொள்ளலாம்.

தமிழில்: ஷியாம் ராம்பாபு