Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்..!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்..!

பங்குச் சந்தை

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

கடந்த வாரத்தில் இந்தியப் பங்குச் சந்தை நாம் நினைத்ததைவிடவும் சிறப்பாகச் செயலாற்றியது. நிஃப்டி 18173 வரை உயர்ந்து வர்த்தகமானது. ஒரு மாதத்துக்கு முன் நிஃப்டி 16000 புள்ளிகளுக்குக் கீழே சரிந்த போது, வெகு சிலர் மட்டுமே சந்தை மீண்டும் உச்சத்தை எட்டும் என்று நினைத்தார்கள். அது நடந்திருக்கிறது.

டாக்டர் சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

இண்டெக்ஸில் அதிகப் பங்கு வகிக்கும் நிறுவனப் பங்குகளில் காணப்பட்ட நல்ல ஏற்றம், இண்டெக்ஸையும் ஏற்றத்தை நோக்கி நகர்த்தியது. குறிப்பாக, ரிலையன்ஸ், ஐ.டி.சி பங்குகளின் நகர்வும், ஹெச்.டி.எஃப்.சி இணைப்பு பற்றிய செய்தியும் இண்டெக்ஸ் நகர்வுக்குப் பெரிய அளவில் உதவின. இதன் விளைவாக, சந்தையில் சென்டிமென்ட் சிறப்பாகக் காணப் பட்டு மிட்கேப், ஸ்மால்கேப் பங்குகளையும் மேல்நோக்கி நகர்த்தி நல்ல லாபம் பார்க்க வைத்தது.

அடுத்த வாரத்திலிருந்து நிறுவனங்களின் காலாண்டு நிதிநிலை முடிவுகள் வெளிவர இருப்பதால், அவற்றின் வருகை சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துவதைப் பார்க்கலாம். இதனால் ஒரு மாதத்துக்கு மிட்கேப், ஸ்மால்கேப் பங்குகளின் செயல்பாடுகள் மீது சந்தையின் கவனம் இருக்கும்.

சமீபத்தில் சந்தை விறுவிறுப்பாக நல்ல வரம்பில் ஏற்றம் கண்டது. எனவே, சந்தை இப்போது தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் விரும்பலாம். எனவே, பொறுமை காத்து, குறிப்பிட்ட பங்குகளைத் தேர்வு செய்து பணத்தை முதலீடு செய்வது விவேகமானதாக இருக்கும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்..!

மேலும், சந்தை நகர்வுகளின் வேகம் குறைய வாய்ப்புள்ள நிலையில், ஸ்மால்கேப், மிட்கேப் பிரிவுகளில் உள்ள பங்குகளில் அவை தொடர் பாக வரும் செய்திகளின் அடிப்படையில் மொமன்டம் வேகமெடுக்கும் சாத்தியங்கள் உள்ளன. அதற்கான சூழல் உருவாகும் வரை, நிறுவன நிதிநிலை முடிவுகளுக்காக சந்தை காத்திருக்க வேண்டும்.

தற்போது சந்தையில் ஒரு வரம்புக்குள்ளான நகர்வுகளை எதிர்பார்க்கலாம். எஃப்.ஐ.ஐ பங்கு விற்பனை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. சந்தைக்கு அழுத்தம் தரக்கூடிய இந்தக் காரணி தற்போது இல்லை. எனவே, இனி வரக்கூடிய இறக்கங்கள் லாபத்தை எடுப்பதன் காரணமாக நடக்குமே தவிர, புதிய பங்கு விற்பனைகளால் நடக்காது. ஆக, இந்த இறக்கங்கள் மிக மெதுவாகவும் குறைவாகவுமே இருக்கும். வரும் வாரத்தில் நிஃப்டி 17100 - 17700 என்ற வரம்பில் நகர வாய்ப்புள்ளது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்..!

பசந்த் அக்ரோ டெக் (BOM: 524687)

தற்போதைய விலை ரூ.23.20

வாங்கலாம்

உக்ரைன் போர் காரணமாக உரங்களின் விலை உயர்ந்ததால், உரப் பங்குகளுக்கான டிமாண்ட் சந்தையில் உருவாகியுள்ளது. இந்தத் துறையின் பெரும்பாலான பங்குகளின் சார்ட் நகர்வுகள் பாசிட்டிவ்வாகவே உள்ளன. இதுவரை மெதுவாக முன்னேறிவந்த பசந்த் அக்ரோ டெக்கில் தற்போது பிரேக்அவுட் நடக்கும் சாத்தியம் தெரிகிறது. இதில் வால்யூம் மற்றும் மொமன்டம் இரண்டுமே அதிகரித்து கவர்ச்சிகரமானதாக உள்ளது. குறுகிய காலத்தில் ரூ.35 - 40 வரை உயரலாம். ஸ்டாப் லாஸ் ரூ.17-க்குக் கீழ் வைத்துக்கொள்ளவும்.

டைனமெடிக் டெக் (DYNAMATECH)

தற்போதைய விலை ரூ.2,399

வாங்கலாம்

பாதுகாப்புத் துறை சார்ந்த பங்குகளில் ஒன்றான டைன மெடிக் டெக்னாலஜிஸ், இறக்கத்துக்குள்ளாகி இருந்தது. தற்போது அது முடிவுக்கு வந்துவிட்டதாகத் தெரிகிறது. மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியிருக்கிறது. இறக்கத்தின் போது மொமன்டம் வலுவாக இருந்ததால், விலை நகர்வு மீண்டு வர உதவியாக இருந்தது. இதன் சார்ட் பேட்டர்ன்களில் இலக்கு விலை ரூ.2,900 அளவில் தெரிகிறது. எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். ரூ.2,200-க்குக் கீழ் ஸ்டாப்லாஸ் வைத்துக் கொள்ளவும்.

கே.பி.ஐ குளோபல் இன்ஃப்ராடெக் (KPIGLOBAL)

தற்போதைய விலை ரூ.528.55

வாங்கலாம்

சமீபத்தில் பட்டியலிடப்பட்ட இந்தப் பங்கு சில மாதங் களாகவே சந்தையில் சிறப்பாகச் செயலாற்றி வருகிறது. இதன் விலை நகர்வுகள் சிறிய பின்னடைவுக்குப் பிறகு, விறுவிறுப்பாக ஏற்றம் கண்டு புதிய உச்சத்தை எட்டி யுள்ளன. இதேபோல் குறுகிய காலத்தில் ரூ.625 வரை உயரும் என எதிர்பார்க்கலாம். ஸ்டாப் லாஸ் ரூ.495-க்குக் கீழ் வைத்துக் கொள்ளவும்.

தமிழில்: ஜெ.சரவணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism