Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

கடந்த வாரம் சந்தை குறிப்பிட்ட வரம்பில் நகரலாம் எனக் கூறியிருந்தோம். ஆனால், சர்வதேச சந்தைகளிலிருந்து வந்த செய்திகள் பலவீனமாக இருந்ததால், செவ்வாய் அன்று மிகப் பெரிய அளவில் இறக்கம் உண்டாகி காளையின் போக்கை வலுவிழக்கச் செய்தது.

டாக்டர் சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

மேலும், முடிந்த வாரத்தில் வர்த்தக நாள்கள் குறைவாக இருந்ததன் காரணமாக கரடியின் போக்குக்கு எதிராக எதிர்வினை ஆற்றுவதற்குப் பெரும்பாலும் யாரும் முயற்சி செய்யவில்லை. இதனால் சந்தையின் இறக்கமும் கட்டுக்குள் இருந்தது.

மேலும், பங்கு விற்பனையும் பெரிய அளவில் இல்லாமல் இருந்தது. பெரும்பாலான வர்த்தகச் செயல்பாடுகளில் மிதமான விற்பனை காணப்பட்டது. அதே சமயம், முடிவுக்கு வந்ததாக கருதிய எஃப்.ஐ.ஐ பங்கு விற்பனை மீண்டும் தொடங்கியிருக்கிறது. இவ்வாறு மீண்டும் எஃப்.ஐ.ஐ விற்பனையாளர் களாக மாறியது சந்தை சென்டிமென்டில் நிலையற்றதன்மையை உண்டாக்கியிருக்கிறது.

வங்கித்துறை பங்குகளின் செயல்பாட்டில் முன்னேற்றம் தெரிகிறது. பேங்க் நிஃப்டி நகர்விலும் பாசிட்டிவ் போக்கு இருப்பதால், நிஃப்டியின் நகர்வில் மீட்சி உண்டாக இது உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

தனியார் வங்கிப் பங்குகளில் செயல்பாட்டில் ஏற்றத்தின் போக்கு தொடங்கியுள்ளது. ஹெச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் ஹெச்.டி.எஃப்.சி லிமிடெட் பங்குகள் முந்தைய வாரத்தில் நன்றாகச் செயலாற்றிய நிலையில், முடிந்த வாரத்தில் சற்று இறக்கத்தைச் சந்தித்தது. ஆனால், இவை வரும் வாரத்தில் மீண்டுவிடும். பேங்க் நிஃப்டியின் நகர்வுக்கு இவை குறிப்பிடத் தக்க அளவில் பங்கு வகிக்கும்.

தற்போது நிஃப்டியில் வங்கித்துறை 20% அளவுக்கு பங்கு வகிக்கின்றன. இவற்றின் செயல்பாடு முன்னேற்றம் காணும் போது நிஃப்டியின் நகர்விலும் அது எதிரொலிக்கும்.

காலாண்டு நிதிநிலை முடிவுகள் தொடங்கிவிட்டாலும் சில நிறுவனங்களின் முடிவுகளே வெளிவந்துள்ளன. மேலும், பல நிறுவனங்களின் முடிவுகள் வெளிவந்தால்தான் சந்தையில் காலாண்டு முடிவுகளின் தாக்கம் தெரிய ஆரம்பிக்கும்.

முடிந்த வாரத்தில் நீண்ட வார விடுமுறை வந்ததால், இனிவரும் வாரத்தில் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் ஏமாற்றம் அளித்தால் குறிப்பாக, முன்னணி நிறுவனங்களின் முடிவுகள் எதிர்பார்த்தபடி இல்லாவிட்டால், சந்தையில் சில இடைவெளிகளை உருவாக்கலாம்.

வரும் வாரம் முழுவதிலும் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வரிசையாக வெளிவரும் என்பதால், சந்தையின் கவனமும் செயல்பாடும் குறிப்பிட்ட பங்குகள் சார்ந்ததாகவே காணப்படும். இதனால் பிரதான சந்தைக் குறியீடுகள் ஒரு வரம்புக்குள்ளேயே தொடரும்.

ஆப்ஷன்ஸ் வர்த்தக கணிப்புகள் நிஃப்டியானது பிரதான மாக 17300 - 17800 என்ற வரம்பில் இருக்கலாம் என்றும், பிரதானக் குறியீடுகள் நிலையாக இருக்கும் வரை குறிப்பிட்ட பங்குகள் சார்ந்து பாசிட்டிவ்வான செய்திகள் வந்தால், அந்தப் பங்கில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பூனவல்லா ஃபின்கார்ப் (POONAWALLA)

தற்போதைய விலை ரூ.331.90

வாங்கலாம்

இந்தப் பங்கு சமீப காலமாகத் தொடர்ந்து செய்திகளில் இடம் பெற்று வருகிறது. இதனால் சந்தையில் இந்தப் பங்கின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்தப் பங்கில் நகர்வில் ஒருங் கிணைப்புக்கான செயல்பாடு காணப்பட்டு, ரவுண்டிங் பேட் டர்னும் உருவாகிய நிலையில், தற்போது பிரேக் அவுட் ஆகி தொடர்ந்து மேல்நோக்கி நகரத் தயாராகி இருக்கிறது. மேலும், மே மாதத்திலிருந்து இந்தப் பங்கு எஃப் அண்ட் ஓ பட்டியலிலும் இணைகிறது. தற்போதுள்ள ரவுண்டிங் பேட்டர்ன் இப் பங்கை ரூ.400 வரை கொண்டு செல்ல வாய்ப்புள்ளது. எனவே, ரூ.315 ஸ்டாப்லாஸுடன் இதை வாங்கலாம்.

ஜஸ்ட் டயல் (JUSTDIAL)

தற்போதைய விலை ரு. 907.00

வாங்கலாம்

கடந்த ஜூலை 2021-லிருந்து இந்தப் பங்கு இறக்கத்தின் போக்கில் இருந்துவருகிறது. இது தற்போது முடிவுக்கு வந்திருக் கிறது. முடிந்த வாரத்தில் இந்தப் பங்கின் நகர்வுகளில் புதிய உற்சாகத்தைப் பார்க்க முடிந்தது. எனவே, விலையும் முந்தைய உச்சத்தை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வால்யூ மும் அதிகரித்துள்ளது. இதன் சார்ட்டில் காணப்படும் இச்சி மோகு பேட்டர்ன் தடையற்ற நகர்வை இந்தப் பங்கில் சாத்திய மாக்கும். குறுகிய காலத்தில் ரூ.1,050 வரை உயரும் என்ற இலக்குடன் இப்பங்கை வாங்க லாம். ஸ்டாப்லாஸ் ரூ.900-க்குக் கீழ் வைத்துக்கொள்ளவும்.

ஐ.ஓ.எல் கெமிக்கல்ஸ் அண்ட் பார்மா (IOLCP)

தற்போதைய விலை ரூ.479.35

வாங்கலாம்

சில ஆண்டுகளுக்குமுன் சந்தையில் அதிகம் தேடப்பட்ட பங்குகளில் ஒன்றாக இது இருந்தது. ஆனால், அதன்பிறகு மோசமான காலங்களில் பங்கு விலை வீழ்ச்சி கண்டு, ரூ.300 வரை இறக்கம் கண்டது. இந்த நிலையிலிருந்து தற்போது மீண்டு வந்துகொண்டிருக்கிறது.

வர்த்தகம் அதிகமான வால்யூம்களில் நடப்பதுடன், நகர்வுகளில் துடிப்பும் உற்சாகமும் தெரிகிறது. சரிவிலிருந்து மீண்டு, உச்சத்தை எட்டுவதற்கான முயற்சியாக இது கருதப்படுகிறது.

எனவே, இந்தப் பங்கு விலை ரூ.580 - 620 வரை உயர வாய்ப்புள்ளது. இந்த இலக்கு விலையில் ரூ.455 ஸ்டாப் லாஸுடன் இந்தப் பங்கை வாங்கலாம்.

தமிழில்: ஜெ.சரவணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism