Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

கடந்த வாரம் நிஃப்டி 17500-க்கு அருகில் ரெசிஸ்டன்ஸ் நிலையைச் சந்திக்கலாம் எனக் குறிப்பிட்டிருந்தோம். அதேபோல் கடந்த வார நகர்வில் 17430 வரை சென்றது. தொடர்ந்து சர்வதேச சந்தைகளிலிருந்து எதிர்மறையான செய்திகள் வரவே அந்த நகர்வு நீர்த்துப்போனது. டவ் ஜோன்ஸ் சந்தையில் பலவீனமான நகர்வுகள் காணப் பட்ட நிலையில், எதிர்மறை செய்திகளாலும், அமெரிக்க டாலர் மதிப்பு பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வலுவடைந்ததாலும் இந்தியச் சந்தை பாதிப்புக்குள்ளாகி இறக்கம் அடையத் தொடங்கியது. இது தொடர்ந்த போதிலும் ஏப்ரல் 19-ல் அடைந்த சரிவு அளவுக்கு இறங்காமல் ஓரளவுக்கு நிலை நிறுத்திக்கொண்டது. இது சந்தைக்கு ஊக்கம் அளிப்பதாக இருந்தாலும் நிஃப்டி இண்டெக்ஸ் அதன் சமீபத்திய ஸ்விங் உச்ச நிலையான 17450-ஐ கடந்து பிரேக்அவுட் போக்கை உருவாக்கியிருப்பதையும் கவனிக்க வேண்டும்.

டாக்டர் சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

சந்தையில் அதிகப் பங்களிப்பு வகிக்கும் துறைகள் சிறப்பான செயல்பாட்டை வழங்கு வதில் தோல்வி அடைந்துள்ளன. வங்கித் துறையும் ஐ.டி துறையும் இன்னும் அழுத்தத்தில் தான் இருக்கின்றன. காளையின் போக்கில் சந்தையைக் கொண்டு செல்லும் பொறுப்பை முழுவதுமாக ரிலையன்ஸ் பங்கு ஏற்க வேண்டிய சூழல்தான் உள்ளது. அதானி குழுமப் பங்குகள் சிறப்பான நகர்வுகளைத் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றன. சந்தையின் போக்கை ஏற்றத்தில் கொண்டு செல்லும் வழக்கமான துறைகள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் செயல்படவில்லை.

மிட்கேப், ஸ்மால்கேப் பிரிவுகளின் செயல்பாடு சந்தையின் சென்டிமென்டுக்கு உந்துதலாக இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், நடக்கவில்லை. நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் இந்தப் பிரிவில் பங்குகளை ஏற்றத்தை நோக்கி நகர்த்தும் நேரத்துக்கு சந்தைக் காத்திருக்கிறது எனலாம். ஒருவேளை வரும் வாரத்தில் இந்தச் செயல்பாடு சந்தையை நகர்த்த வாய்ப்புள்ளது. அதேசமயம் நிறுவனங்களின் மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகள் சற்று பாசிட்டிவ்வாகவே வந்து கொண்டிருப்பதால், சந்தையின் சென்டிமென்ட் நிஃப்டியை 17000-க்கு மேலேயே தன்னை தக்க வைத்துக்கொன்டுள்ளது எனலாம்.

அந்நிய நிதி நிறுவனங்களின் (எஃப்ஐஐ) பங்கு விற்பனையும் தொடர்ந்துகொண்டிருக் கிறது. இதன் எதிரொலியால் உள்நாட்டு முதலீட்டாளர்களும் பங்குகளை வாங்குவது மந்தமாகி இருக்கிறது. முன்பு சந்தையின் நகர்வை உள்நாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பு தான் பெரிய அளவில் இறங்காமல் கட்டுக்குள் வைத்திருந்தது. ஆனால், பெருமளவு பங்குகளின் விலை ஏற்றம் தடைபட்டிருப்பதால் முதலீட்டாளர் களின் பெரும்பாலான முதலீடுகள் முடங்கிக் கிடக்கின்றன. இதனால், புதிய முதலீடுகளை மேற்கொள்வதற் கான செயல்பாடும் முயற்சியும் இல்லாமல் இருக்கிறது. வரும் நாள் களில் நிஃப்டி நகர்வு 16800-17000 என்ற வரம்பில் தொடரும் என்று எதிர்பார்க்கலாம். இந்த நிலை இறக்கத்தின் போக்குக்கான சப்போர்ட்டாக இருக்கும். ஏற்றத்தின் போக்கில் 17500-17700 என்ற வரம்பு ரெசிஸ்டன்ஸ் நிலையாக இருக்கும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

கிரெடிட் ஆக்சஸ் கிராமின் (CREDITACC)

தற்போதைய விலை ரூ.1,051.10

வாங்கலாம்

நீண்டகால அடிப்படையிலான முதலீட்டுக்கான பங்காக இது உள்ளது. அனாலிஸ்ட்டுகளால் இப்பங்குக்கு சிறந்த ரேட்டிங்கும் தரப்பட்டுள்ளது. தற்போது இப்பங்கில் பிரேக் அவுட்டுக்கான அறிகுறிகள் தெரிவ தோடு பங்கின் விலையை புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்லும் சாத்தியங்களும் உள்ளன. எனவே, தற்போதைய விலையில் இப்பங்கை வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.995-க்குக் கீழ் வைத்துக்கொள்ளவும். விரைவில் இப்பங்கு விலை ரூ.1,100 வரை உயரலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

கே.பி.ஐ.டி டெக்னாலஜிஸ் (KPITTECH)

தற்போதைய விலை ரூ. 570.50

வாங்கலாம்

சமீப காலமாக ஐ.டி துறை பங்குகள் சற்று அழுத்தத் தில் இருந்து வந்தாலும், இந்நிறுவனத்தின் மார்ச் காலாண்டு முடிவுகள் சிறப்பாக உள்ளதன் காரணமாக இப்பங்கில் வலுவான பாசிட்டிவ் நகர்வுகளைப் பார்க்க முடிகிறது. குறுகிய காலத்தில் இப்பங்கு விலை ரூ.665 வரை உயரலாம். ரூ.550 ஸ்டாப் லாஸுடன் இப்பங்கை தற்போதைய விலையில் வாங்கலாம்.

கோத்ரேஜ் அக்ரோவெட் (GODREJAGRO)

தற்போதைய விலை ரூ. 570.40

வாங்கலாம்

பங்கின் வர்த்தகத்தில் நீடித்த இறக்கத்துக்குப் பிறகு, அதிக அளவிலான வால்யூம் மீட்சியோ, இறக்கத்திலிருந்து ஏற்றத்தின் போக்கிலான நகர்வோ தெரியும்பட்சத்தில் அதை காளையின் போக்குக்கான அறிகுறிகள் என நம்பலாம். கோத்ரேஜ் அக்ரோவெட் பங்கின் சார்ட் பேட்டர்ன் அப்படியான அறிகுறிகளுடன் இருக்கிறது. பங்கின் விலை இச்சிமோகு கிளவுட் நிலையிலிருந்து நகர்ந்து ஏற்றம் காண தொடங்கியிருப்பதோடு, வலு வான ஏற்றத்துக்கான நீண்ட மெழுகுவத்தி பேட்டர்னும் பார்க்க முடிகிறது. இந்த பேட்டர் னுக்கு ஆதரவாக வர்த்தகம் நல்ல வால்யூமுடன் நடக்கிறது. இவையெல்லாம் இப்பங்கு ஏற்றம் காணும் என்பதை உறுதி செய்கின்றன. இப்பங்கை ரூ.555 ஸ்டாப் லாஸுடன் வாங்கலாம். குறுகிய காலத்தில் பங்கு விலை ரூ.625 வரை உயர வாய்ப்புள்ளது.

தமிழில்: ஜெ.சரவணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism