Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

அந்நிய நிதி நிறுவனங்கள் (FII) பங்குகளை வாங்குவதைக் குறைத்து, விற்பதைத் தொடர்ந்து வந்ததால், காளை தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்வது சற்று கடினமாகவே இருக்கிறது. தவிர, ஆர்.பி.ஐ-யின் வட்டி விகித உயர்வு செய்தியானது அவர் களுக்குப் பெரிய இடியாக இருந்தது. அரசு எல்.ஐ.சி ஐ.பி.ஓ வெளியீட்டை வெற்றிகரமாக நிறைவு செய்ய எல்லா விதமான முயற்சிகளையும் மேற்கொண்டு வந்த நிலையில், வட்டி விகித உயர்வு செய்தியானது அதிர்ச்சியை அளிப்பதாக இருந்தது.

டாக்டர் சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

சந்தையைப் பதற்றமான நிலையிலேயே வைத்திருந்த இன்னொரு விஷயம், ஃபெடரல் வங்கியின் கூட்டம். ஆனால், எதிர்பார்த்தபடியே 0.5%தான் உயர்த்தப்பட்டது.இதை சந்தையானது பாசிட்டிவ்வாகவே எடுத்துக் கொண்டதால், அடுத்த வர்த்தக நாளில் சந்தை ஓர் இடைவெளியுடன் தன் நகர்வைத் தொடங்கியது. ரிசர்வ் வங்கி வட்டி விகித உயர்வு செய்தியால் சந்தை தீவிர சரிவைச் சந்தித்து வந்ததைக் கட்டுப்படுத்த அமெரிக்க ஃபெட் செய்தி உதவியது. ஆனால், அந்த ஏற்றமும் அன்றே காணாமல் போனது.

காலாண்டு முடிவுகளும் கலவையாக இருக்கின்றன. இதுவரை வெளியான 300 நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளில் 60% நிறுவன முடிவுகள் பாசிட்டிவ்வாக உள்ளன. ஆனால், சந்தை சென்டிமென்ட்டானது ஏற்கெனவே இதற்கு போதுமான அளவுக்கு எதிர்வினை ஆற்றிவிட்டது. மேலும், எதிர்பார்ப்பைத் தாண்டி எந்த நிறுவனப் பங்கும் ஏற்றம் அடைந்து ஆச்சர்யம் தராததால், சந்தையிலும் பெரிய நகர்வுகள் இல்லை. உதாரணமாக, டாடா ஸ்டீல் நிறுவனம் இதுவரை இல்லாத அளவுக்கு (டி.சி.எஸ் லாபத்தைக் காட்டிலும்) அதிகமாக லாபத்தை ஈட்டியுள்ள நிலையிலும் பங்கின் விலை ஏற்றம் காணவில்லை. இதிலிருந்து சந்தை சென்டிமென்ட் இறக்கத்தின் போக்கில் இருப்பதாகக் கருதலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

சார்ட் பேட்டர்ன்களைப் பார்க்கும்போது, நிஃப்டி 16400-16600 என்ற வரம்பில் சப்போர்ட் நிலை உருவாகியிருக்கிறது. மேலும் இந்த நிலையில், சில ரீட்ரேஸ்மென்ட் இறக்க தொகுப்புகளும், முந்தைய இடைவெளி வரம்புகள் உருவாவ தற்கான சாத்தியங்களும் தெரிகின்றன. இவற்றை சந்தை எந்த அளவுக்கு எளிதாக சமாளிக்கிறது என்பதைப் பொறுத்தே சந்தை செயல்பாட்டாளர்களின் மனநிலையைத் தெரிந்துகொள்ள முடியும். தினசரி சார்ட்டுகளில் விலை நகர்வுகள் சற்றுக் கணிக்க முடியாதபடி இருப்பதுடன், வர்த்தகத்தின் மொமன்டமும் சீர்குலைந்துவிடுகிறது. இதனால் விலைகள் சப்போர்ட் நிலைகளை உடைத்து நகர்கின்றன. குறுகிய காலத்துக்கு இந்த நெகட்டிவ் போக்கு காணப்படுகிறது. 17500 என்ற நிலையானது தொடர்ந்து முக்கிய ரெசிஸ்டன்ஸாக இருக்கிறது.

எனவே, இப்போதைக்கு லாங் பொசிஷன்கள் எடுத்து வர்த்தகம் செய்யும்போது சற்றுக் கவனமாக இருக்க வேண்டும். அதே சமயம், சில ஷார்ட் பொசிஷன்களையும் யோசிக்க லாம். முதலீட்டாளர்கள் பங்குகளை மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுப்பதுடன், பங்கு களின் எண்ணிக்கையை அளவாக வைத்துக்கொள்வது நல்லது.

இனி, வாங்கக்கூடிய நிலையில் உள்ள பங்குகளைப் பார்ப்போம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டிசிஎம் ஶ்ரீராம் (DCMSHRIRAM)

தற்போதைய விலை ரூ.1,196.60

வாங்கலாம்

பல மாதங்களாக இருந்த கன்சாலிடேஷன் நிலையிலிருந்து மீண்டுவர இப்பங்கு முயன்று வருகிறது. அது வெற்றிகரமாக நடக்கும்பட்சத்தில் இப்பங்கின் நகர்வுகளில் ஏற்றத்தின் போக்கை பார்க்கலாம். ரூ.1,200 என்ற நிலையை உடைத்து நகரும் பட்சத்தில் இப்பங்கை வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ. 1,100க்குக் கீழ் வைத்துக்கொள்ளவும். ஏற்றத்தின் போக்கில் இப்பங்கு ரூ.1,450 வரை உயர வாய்ப்புள்ளது.

சுமி கெமிக்கல்ஸ் (SUMICHEM)

தற்போதைய விலை ரூ.443.35

வாங்கலாம்

இப்பங்கு கடந்த ஒரு வருடங் களுக்கும் மேலாகவே மெதுவாக, ஆனால் நிலையான ஏற்றத்தின் போக்கில் இருந்துவருகிறது. இது புதிய பிரேக் அவுட் உச்சங்களை நோக்கிய நகர்வுகளுக்கான நிகழ்வாகவே கருதலாம். இது போன்ற நிகழ்வு இப்பங்கில் மீண்டும் நடக்கும் அறிகுறிகள் தெரிகின்றன. மேலும், சிறப்பான மொமன்டமும் இதில் தெரிவதால், பங்கின் விலையைப் புதிய உச்சங் களுக்கு விரைவில் கொண்டு செல்லும். எனவே, ரூ.420 ஸ்டாப் லாஸுடன் இப்பங்கை வாங்கலாம். ரூ.530 வரை இப்பங்கு உயர வாய்ப்புள்ளது.

டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் இந்தியா (TIINDIA)

தற்போதைய விலை ரூ.1,875.90

வாங்கலாம்

சந்தையில் நிலையான போக்கில் இருந்துவரும் ப்ளூ சிப் பங்குகளில் ஒன்று, டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ். இதன் சிறப்பான செயல்பாடு நீண்டகால அடிப்படையில் கவனிக்கக்கூடிய பங்கு என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இதில் அடுத்தகட்ட ஏற்றத்துக்கான புதிய நகர்வுகள் ஏற்படும் சாத்தியங்கள் உள்ளன. எனவே, நீண்டகால இலக்கில் இப்பங்கை வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.1,700-க்குக் கீழ் வைத்துக்கொள்ளவும். வரும் மாதங்களில் புதிய உச்சங்களுக்கு நகரும் என எதிர்பார்க்கலாம்.

தமிழில்: ஜெ.சரவணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism