Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! முதலீட்டாளர்கள் கவனத்துக்கு..!

BUY & SELL

பிரீமியம் ஸ்டோரி

இந்திய சந்தைக் குறியீடுகள் தொடர்ந்து அடுத்தடுத்த உச்சங்களை எட்டியதால் சந்தையின் போக்கில் மாற்றம் உண்டாகவில்லை. கடந்த வாரம் திங்களன்று நன்றாக வர்த்தக மாகத் தொடங்கி உடனடியாக வரலாற்று உச்சத்தை எட்டியது. இந்த உடனடி ஏற்றம் ரெசிஸ்டன்ஸ் நிலைகளை உடைத்ததால், புதிய மொமென்டத்தை உருவாக்கியது. ஆனாலும், ஏற்கெனவே நல்ல உச்சத்தில் இருந்ததால் இதனால் பெரிய அளவில் ஏற்றம் நடக்கவில்லை. இதனால் அடுத்த சில வர்த்தக நாள்களில் குறிப்பிட்ட வரம்புகளிலேயே நகர்வுகள் காணப்பட்டன. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், அந்த நாள்களில் கீழ்நிலை நிழல் கேண்டில்கள் உருவாயின. இதன்மூலம் இறக்க நிலைகளில் முதலீடுகள் செய்யப்பட்டிருப்பதை உணர முடிகிறது. இது கடினம் இல்லாமல் குறியீடுகள் ஏற்றம் காண்பதை உறுதி செய்தது.

டாக்டர் 
சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

மேலும், மே மாத தொடக்க நிலையிலிருந்து சந்தை நல்ல ஏற்றம் கண்டிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாக உள்ளது. இந்த நகர்வுகள் சிறிய அளவிலான கேன்டில் பேட்டர்ன் களைத் தொடர்ச்சியாக உருவாக்கின. இந்தப் போக்கு சந்தையின் ஏற்றத்தை நிலையாக வைத்திருந்தன. இது சந்தையில் நிலவிவந்த நிலையற்ற தன்மைக்கும், சந்தை போக்கில் ஈடுபாடு அற்று காணப்பட்ட மந்தநிலைக்கும் எதிரானதாக இருந்தது. எனவே, இந்த ஏற்றத்தைப் பெரிய கவலை சுவரைத் தாண்டிய ஏற்றமாக நாம் கருதலாம். இந்த ஏற்றத்தில் நம்பிக்கையற்ற நிலை தொடர்ந்தால் தற்போதைய போக்கும் மேலும் தொடரும் எனலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! முதலீட்டாளர்கள் கவனத்துக்கு..!

மற்றொரு சுவாரஸ்யமான விஷயம், சென்செக்ஸ் அதன் முழுமையான உச்சத்தை எட்டவில்லை. இது மேலும் உற்சாகத்தைக் கூட்டுகிறது. குறியீடுகள் அதிக தாக்கம் உண்டாக்கும் ரிலையன்ஸ் போன்ற பங்குகள் சிறப்பாகச் செயல் பட்டால், சென்செக்ஸ் அதன் உண்மை யான உச்சத்தை எட்டத் தயாராக இருக்கும். ஆனால், இது நடக்குமா என்பதைவிடவும், எப்போது நடக்கும் என்பதுதான் கேள்வி.

வரும் வாரத்தைப் பொறுத்தவரை, நிஃப்டி அதன் 15500 என்ற நிலையை வலுவாகத் தக்கவைத்துக் கொள்ளும் பட்சத்தில் 15750 வரை உயர வாய்ப்பு உள்ளது. எனவே, காளையின் போக்கில் இருப்பவர்கள் மாற்றியமைக்கப்பட்ட 15250 என்ற ஸ்டாப்லாஸுடன் அவற்றைத் தொடரலாம். இந்த வரம்பில் உண்டாகும் இறக்கங்களை வாங்கும் வாய்ப்பாகப் பயன்படுத்தலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! முதலீட்டாளர்கள் கவனத்துக்கு..!

ஓபராய் ரியால்டி (OBEROIRLTY)

தற்போதைய விலை ரூ.661.45

வாங்கலாம்

முத்திரைக் கட்டண (stamp duty) மாற்றம் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்குச் சாதகமாக இருப்பது மற்றும் அண்மைக் காலத்தில் பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்படத் தொடங்கியிருப்பது ஆகியவை கட்டுமானத் துறையை வளர்ச்சிப் பாதைக்குத் திருப்பி இருக்கிறது.

சிறந்த ரியல் எஸ்டேட் பங்காக ஓபராய் ரியால்டி உள்ளது. நடப்பு வாரத்தில் இதன் பங்கின் விலையில் ரேஞ்ச் பவுண்ட் என்பதைத் தாண்டி பிரேக் அவுட் ஆகியிருக்கிறது.

குறுகியகாலத்தில் பங்கின் விலை ரூ.730-க்கு உயரக்கூடும். ஸ்டாப்லாஸ் ரூ.600 வைத்துக் கொள்ளவும்.

வோடாஃபோன் ஐடியா (IDEA)

தற்போதைய விலை ரூ.9.40

வாங்கலாம்

நீண்டகாலமாக இறக்கத்திலேயே இந்தப் பங்கு விலை வர்த்தகமாகி வந்தது. சில நல்ல செய்திகள் இந்தப் பங்கின் விலையை ஏற்றம் காண வைத்திருக்கிறது.

ஒருங்கிணைந்த நிலையிலிருந்து மீண்டு அதிக வால்யூம் உடன் விலை அதிகரிக்க ஆரம்பித்திருக் கிறது. குறுகிய கால இலக்குடன் இந்தப் பங்கில் முதலீடு செய்ய லாம். விலை ரூ.14-15-க்கு உயரக் கூடும். ஸ்டாப்லாஸ் ரூ.7.50 வைத்துக்கொள்ளவும்.

டிமார்ட் (DMART)

தற்போதைய விலை ரூ.3,194

வாங்கலாம்

அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் லிமிடெட் (Avenue Supermarts Ltd) என்கிற டிமார்ட் நிறுவனப் பங்கின் மதிப்பீடு அதிகமாக இருந்தாலும், இந்தப் பங்கை வாங்குவது அதிகமாக இருக்கிறது. 2021–ம் ஆண்டு முதல் நீண்டகாலமாக பங்கின் விலை பக்கவாட்டு நகர்வில் இருந்துவந்தது,

தற்போது காளையின் போக்குக்கு மாறியிருக்கிறது. வால்யூம் மற்றும் மொமென்டம் பங்கின் விலையை உயர்த்தியுள்ளது. பங்கின் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்துக்கு ரூ.3,325-க்கு மேல் செல்லும் எதிர்பார்க்கப் படுகிறது. ஸ்டாப்லாஸ் ரூ.3,075 என வைத்துக்கொள்ளவும்.

தமிழில்: திவ்யா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு