Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து இறக்கத்தின் போக்கில் இருந்ததால், கடந்த வாரம் வர்த்தகர்களும் முதலீட்டா ளர்களும் அதிக கவலைக்குள்ளாக வேண்டியிருந்தது. சந்தை மீண்டு வரும்போது எழுகிற நம்பிக்கை யானது சற்று இறக்கம் காணும் போது உடைந்துவிடுகிறது.

டாக்டர் சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

கடந்த வாரத்தில் திங்கள் கிழமையும் அப்படியான நம்பிக்கை உருவானது. ஆனால், தொடர்ந்து காளை தன் ஆதிக்கத்தில் சந்தையை ஏற்றத்தின் போக்கில் கொண்டு செல்ல முடியவில்லை. கரடியின் ஆதிக்கம் மீண்டும் சந்தையை இறக்கத்தில் கொண்டுபோனது.

ஆயினும் மூன்று காரணங்கள் மக்களை கரடியின் போக்குக்கு கொண்டு செல்வதில்லை. முதல் காரணம், இயல்பாகவே அனை வருக்கும் ஏற்றத்தின் போக்கில் இருப்பதற்கான ஆசை இருக்கும். அனைவரிடமும் போர்ட்ஃபோலி யோவின் மதிப்பு உயர்வதைத்தான் நாம் விரும்புவோம். அது காளையின் போக்கில் மட்டுமே நடக்கும். பொதுவாக, முதலீட்டாளர்கள் எதிர்காலத்தின் மீது நேர்மறையான நம்பிக்கையுடன் இருப்பார்கள். இதனால் பங்குகளை வாங்குகிறார்கள்.

இரண்டாவது காரணம், கடந்த மார்ச் 2020 முதல் 18 மாதங்கள் வரையிலான காலத்தில் சந்தையில் நல்ல வருமானம் பார்த்தனர். இதற்கு மாறாக, நஷ்டம் அடைவது தற்போது அவர்களால் ஜீரணிக்க முடியாத விஷயமாக இருக்கிறது. மூன்றாவதாக, சமீபத்திய காளைச் சந்தையில் முதலீடு செய்யவந்த புதிய முதலீட்டாளர்களுக்கு ஷார்ட் செல்லிங், லாஸ் புக்கிங் குறித்து எதுவும் தெரியவில்லை.

இப்படி காரணம் என்னவாக இருந்தாலும், அனைவருமே இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். அவர்கள் வர்த்தகர் களாக இருந்தாலும் சரி முதலீட்டாளர்களாக இருந்தாலும் சரி.

கடந்த வாரத்தில் விலை நகர்வுகள் மக்களை சரணடையும் நிலைக்குக் கொண்டு சென்றன. நிஃப்டியின் இறக்கத்தின் போக்கு 16000 என்ற நிலையை உடைத்து தீவிரமாக இறங்கியது. பெரும்பாலானோர் இதை எதிர்பார்க்கவில்லை. மார்ஜின் அழைப்புகள் மேலும் அழுத்தத்தை உண்டாக்கின. ஸ்மால் கேப், மிட்கேப் பங்குகள் மிக வேகமாகத் தங்களுடைய நிலையை இழந்ததால், அதைச் சமாளிப்பது கடினமானதாக இருந்தது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இந்தச் சமயத்தில், நிலைமையை மேலும் மோசமாக்கும் விதமாக ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி இருந்தது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு 77.50-ஆக குறைந்தது. ரூபாய் மதிப்பானது பங்குச் சந்தையுடன் நேரடித் தொடர்புடையதாக இருப்பதால், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடையும்போது நிஃப்டியும் வீழ்ச்சி அடைகிறது. தற்போது சந்தையைப் பாதிக்கும் முக்கியமான காரணிகளில் ஒன்றாக இது இருக்கிறது. ரூபாய் மதிப்பு நிலையாகும்வரை பங்குச் சந்தையும் நிலையான போக்குக்கு வருவதைப் பார்க்க முடியாது. ரூபாய் வலுவிழப்பது அந்நிய நிதி நிறுவனங் களையும் (எஃப்.ஐ.ஐ.கள்) பதற்றத்துக்குள்ளாகிவிடுகிறது. அவர்கள் தொடர்ந்து பங்குகளை விற்கவும் காரணமாகிறது.

நிஃப்டி அதன் உச்சநிலையிலிருந்து 2500 - 3000 புள்ளிகள் வரை இறக்கம் கண்ட பிறகு, பாசிட்டிவ் நகர்வுகளுக்கான தருணம் வர வாய்ப்புள்ளது. ஆனால், அது நிகழ்வதற்கு சில காரணிகள் அவசியம். சந்தையும் அதற்காகவே காத்திருக்கிறது.

சந்தையில் இப்போது பெரிய அளவில் முதலீடு செய்ய அவசரம் இல்லாமல் இருக்கிறது. எனவே, சந்தை செயல்பாடு களை குறுகிய காலத்துக்கானதாக வைத்துக்கொள்ளலாம். சாத்திய மான தருணங்களில் ஹெட்ஜிங் உத்திகளைப் பயன்படுத்தலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஐடிசி (ITC)

தற்போதைய விலை ரூ.253.45

வாங்கலாம்

சந்தையின் போக்கு எப்படி இருந்தாலும் நெகிழ்வாக செயல் படும் பங்காக ஐ.டி.சி இருப்பதால் அதன் விலை வீழ்ச்சியானது கட்டுக்குள் இருக்கிறது. மூன்று இறக்க சுழற்சி அலைகளுக்குப் பிறகு, தற்போது அதன் விலை 38% ரிட்ரேஸ்மென்ட் மண்டலத் தில் உள்ளது. விரைவில் சந்தை ஏற்றத்தின் போக்கில் நகர்ந்தால் அதன் பலனை அடையும் முன்னணி பங்குகளில் ஒன்றாக ஐ.டி.சி இருக்கும் என நம்பலாம். எனவே, ரூ.235 ஸ்டாப்லாஸுடன் தற்போதைய விலையில் வாங்க லாம். குறுகிய காலத்தில் ரூ.285க்கு மேல் உயர வாய்ப்புள்ளது.

சிசிஎல் புராடக்ட்ஸ் (CCL)

தற்போதைய விலை ரூ.324.00

வாங்கலாம்

சிறப்பான தொழில் வளர்ச்சி சாத்தியங்கள் உள்ள நிறுவனங் களின் பங்குகளில் இறக்கங்கள் உண்டாகும்போது அவற்றை வாங்குவதற்கான வாய்ப்பு களாகப் பார்க்கலாம். அப்படி யான பங்குகளில் ஒன்று சி.சி.எல் புராடக்ட்ஸ். மூன்று இறக்க சுழற்சி அலையானது 50% ரிட்ரேஸ்மென்ட் மண்டலத்தில் அதன் முந்தைய ஸ்விங் இறக்க நிலைக்குக் கொண்டுவந்துள்ளது.

இந்த நிலையில், இந்தப் பங்கில் இறக்கத்தின் போக்கு முடிவுக்கு வர வாய்ப்புள்ளது. இப்போதிருந்து இந்தப் பங்கை வாங்கி சேர்க்கலாம். குறுகிய காலத்தில் இது மீண்டும் ரூ.420 வரை செல்ல வாய்ப்புள்ளது.

குஜராத் கேஸ் (GUJGASLTD)

தற்போதைய விலை ரூ.569.40

வாங்கலாம்

இந்தப் பங்கின் நிதிநிலை முடிவுகள் சிறப்பாக இருப் பதுடன், சந்தை எதிர்பார்ப்புகளைத் தாண்டி இருந்ததால், அந்தப் பங்குகள் சிறப்பான செயல்பாட்டை வெளிப் படுத்தும். அது குஜராத் கேஸ் பங்கில் காண முடிகிறது.

இதன் சமீபத்திய காலாண்டு முடிவுகள் சந்தை எதிர் பார்த்ததைவிடவும் சிறப்பாக இருந்ததால், பங்கின் விலை நகர்வுகள் நன்றாகவே ஏற்றம் கண்டன. தொடர்ந்து ஏற்றம் காணும் சாத்தியங்களுடனும் உள்ளன.

தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். இதன் ஏற்றத்தின் போக்குக்கு இப்போது எதுவும் தடை இருப்பதாகத் தெரியவில்லை.

தமிழில்: ஜெ.சரவணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism