Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

கடந்த வாரத் தொடக்கத்தில் அதற்கு முந்தைய வார இறுதி நாள் வர்த்தகத்தின் நிறைவிலிருந்து, சந்தையை ஏற்றத்தின் போக்கில் நகர்த்துவதற்கான முயற்சிகளைத் தீவிரமாக எடுத்தது. அதனால், ஓரளவுக்கு நல்ல வரம்பிலான நகர்வையும் பார்க்க முடிந்தது. ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு ஏற்றத்தின் போக்கு தொடர்ந்து நீடிக்காமல் பலருக்கும் ஏமாற்றமளித்தது. அதேசமயம், சந்தை ஏற்றத்துக்கான முயற்சியைக் கைவிடவில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும். சமீபத்திய வாரங்களில் சந்தை எளிதில் தன்னுடைய ஏற்றத்துக்கான முயற்சிகளை கைவிடும் அளவுக்கு இருந்த நிலையில், கடந்த வாரத்தின் நகர்வுகள் சற்று பாசிட்டிவான சென்டிமென்டை உருவாக்கியிருக்கிறது.

டாக்டர் சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

ஆனால், அது மட்டும் போதுமா என்ற கேள்வியும் எழுகிறது. போதாதுதான்... ஏனெனில், ஏப்ரல் மாதத்தில் கண்ட உச்சத்திலிருந்து கடுமையான இறக்கத்தை இந்தியப் பங்குச் சந்தை சந்தித்திருக்கிறது. எனவே, இதிலிருந்து நல்லதொரு மீட்சியை அடையாதபட்சத்தில், அதாவது நிஃப்டி 15700 என்ற சப்போர்ட் நிலைக்கு அருகிலிருந்து மீண்டு, ஏற்றத்தின் போக்கில் வலுவாக நகராதபட்சத்தில் சந்தையின் போக்கு தொடர்ந்து நிலையற்றதாகவே இருக்கும்.

அதேசமயம், பாசிட்டிவ்வான விஷயங்களும் உள்ளன. அவற்றில் ஒன்று, ஐ.டி துறையின் முன்னணிப் பங்குகள் ஏற்றமடையத் தொடங்கியிருக்கிறது. இதற்குக் காரணம், நாஸ்டாக் இண்டெக்ஸ் நகர்வுகள் சப்போர்ட் நிலைகளை நெருங்கியதோடு ஏற்றமடையவும் தொடங்கியிருக்கிறது. இது நம்முடைய சந்தையிலும் எதிரொலிக்கிறது. அது மட்டுமல்லாமல், நாஸ்டாக் இண்டெக்ஸுடன் தொடர் புடைய பங்குகள் ஏற்கெனவே கணிசமாக இறங்கியிருந்தது.பெருமளவில் இப்பங்குகள் விற்கப்பட்டுள்ளன. எனவே, ஏற்றமடைவதற்கான சாத்தியங்களுடனும் உள்ளன. இவை ஏற்றம் காணும்போது அது நிஃப்டியிலும் ஏற்றத்தைக் கொண்டு வரும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ரிலையன்ஸ் மற்றும் சில ஆட்டோ, எஃப்.எம்.சி.ஜி துறை பங்குகள் நல்ல ஏற்றத்துடன் உள்ளன. எனவே, வரும் நாள்களில் சந்தையின் பிற பிரிவுகளிலிருந்தும் சந்தைக்கு சாதகமான ஆதரவு வர வாய்ப்புள்ளது.

மிட்கேப், ஸ்மால்கேப் பங்குகள் தொடர்ந்து அழுத்தத்தில் இருந்து வருகின்றன. இந்தப் பிரிவுகளுக்கு ஏற்ப சாதகமான நல்ல செய்திகள் வந்து உதவினால் மட்டுமே பாசிட்டிவ் சென்டிமென்ட் உருவாகும். ஆனால், நிதிநிலை முடிவுகள் வெளியாகும் காலம் முடிந்துவிட்டது. அது பெரிய நகர்வு களைக் கொண்டு வரவில்லை. அந்த வகையில், முதலீடு சார்ந்த நகர்வுகளைவிட சந்தையில் வர்த்தகம் சார்ந்த நகர்வுகளையே பார்க்க முடியும்.

ஹிமாத்ரி ஸ்பெஸாலிட்டி கெமிக்கல் (HSCL)

தற்போதைய விலை ரூ.71.70

வாங்கலாம்

இந்தப் பங்கை ஏற்கெனவே பரிந்துரை செய்திருக்கிறோம். தற்போது இந்தப் பங்கு கன்சாலி டேஷன் நிலையை நிறைவு செய்து பிரேக் அவுட் ஆகி, மேல்நோக்கி நகரத் தயாராகி யிருக்கிறது. இதை உறுதி செய்யும் விதமாகவே இதன் சார்ட் பேட்டர்ன்களும் உள்ளன. மேலும், கடந்த வாரத்தில் இந்தப் பங்கின் நகர்வுகளில் வலுவான ஏற்றமும் காணப் பட்டது. இந்தப் போக்கில் பங்கின் விலையைக் குறுகிய காலத்தில் ரூ.90 - 95 வரை கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளது. ரூ.62-க்குக் கீழ் ஸ்டாப்லாஸ் வைத்துக் கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

கே.இ.ஐ இண்டஸ்ட்ரீஸ் (KEI)

தற்போதைய விலை ரூ.1,309.65

வாங்கலாம்

புதிய உச்சங்களை நோக்கி நகரும் பங்குகளை எப்போதுமே நாம் விரும்புவோம். சந்தை நிலையற்ற போக்கில் இருக்கும் போதும் புதிய உச்சங்களை நோக்கி நகரும் பங்காக கே.இ.ஐ இண்டஸ்ட்ரீஸ் விளங்குகிறது. தற்போதும்கூட தொடர் இறக்கங்களின்போதும் நிலையான ஏற்றத்தின் போக்கு இந்தப் பங்கில் காணப்படுகிறது. இது வலுவான முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்தப் பங்கை வாங்கி வருகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. எனவே, தற்போதைய விலையிலும் இறக்கங்களிலும் இந்தப் பங்கை வாங்கலாம். குறுகிய காலத்தில் ரூ.1,450 வரை உயர வாய்ப்புள்ளது. ரூ.1,250-க்குக் கீழ் ஸ்டாப்லாஸ் வைத்துக் கொள்ளவும்.

மைண்ட்ட்ரீ (MINDTREE)

தற்போதைய விலை ரூ.3,064.80

வாங்கலாம்

ஐ.டி பங்குகள் ஏற்றத்தின் போக்கில் நகர்வதற்கான சென்டிமென்டில் உள்ளன. பெரும்பாலான ஐ.டி பங்குகள் நல்ல இறக்கத்தைப் பதிவு செய்திருக்கின்றன. எனவே, தற்போதைய ஏற்றம் துறை சார்ந்த நகர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மைண்ட்ட்ரீ பங்கு 38 % ரீட்ரேஸ்மென்ட் நிலைக்கு இறங்கியுள்ளது. தற்போது நன்றாக மீண்டுவருவதற்கான பேட்டர்னையும் உருவாக்கியுள்ளது. எனவே, தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். ரூ.3,700 வரை உயர வாய்ப்புள்ளது. ரூ.2,850-க்குக் கீழ் ஸ்டாப்லாஸ் வைத்துக்கொள்ளவும்.

தமிழில்: ஜெ.சரவணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism