Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

இந்தியப் பங்குச் சந்தையில் நல்ல மாற்றம் வரும் என்ற நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால், எதிர்பார்ப்புக்கு முரணாகவே சந்தையின் செயல்பாடு இருந்தது. சந்தையின் நகர்வு மீது நம்பிக்கையை அதிகரிக்கிற சின்னச் சின்ன ஆதாரங்களை நாம் சேர்த்து வைத்துக்கொண்டிருந்தோம்.

டாக்டர் சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

ஆனால், நம்பிக்கைக்கான அத்தனை ஆதாரங்களையும் முந்தைய வாரத்தின் வெள்ளிக்கிழமை அன்று சந்தை உடைத்து தகர்த்ததோடு மட்டுமல்லாமல், இறக்கத்தின் போக்கு கடந்த வாரம் முழுவதுமே சிறிய அளவில் தொடர்ந்தது.

இறக்கம் அவ்வளவு தீவிரமானதாக இல்லை என்றாலும், சிறிய வரம்புகளில் ஏற்ற இறக்கமான சூழல் நீடித்துக் காணப்பட்டது. இதனால் வெற்றிகரமான வர்த்தகத்துக்கு தொடர்ந்து சவால்களை உருவாகிக் கொண்டிருந்தது.

போர்ட்ஃபோலியோ மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்தித்ததால், அதன் பாதிப்பிலிருந்து முதலீட்டாளர்களும் தப்பவில்லை.

பங்குகள்... வாங்கலாம்...
விற்கலாம்!

ஒரு சிறிய புள்ளிவிவர ஆய்வு, பங்குச் சந்தை முதலீடு குறித்த ஒரு தெளிவைத் தரும். கடந்த வருடம் அக்டோபரில் கண்ட உச்சத்துக்குப் பிறகிலிருந்து இதுவரையிலான விலை நகர்வு களைப் பார்த்தோமானால், நிஃப்டி 500-ல் உள்ள 50% பங்குகள் தற்போது 30% அல்லது அதற்கும்மேலான இறக்க மதிப்பில் வர்த்தக மாகிறது.

இதிலிருந்து நல்ல தரமான பங்குகள்கூட எந்த அளவுக்கு பாதிப்பை அடைந்திருக்கிறது என்பதைப் பார்க்க முடியும். நிஃப்டியில் சில குறிப்பிட்ட பங்குகளைத் தவிர, பெரும்பாலான பங்குகள் அதன் சமீபத்திய ஆறு மாத குறைந்தபட்ச விலையில் வர்த்தகமாகின்றன.

இதற்கிடையில் முக்கியமான நிகழ்வாக எதிர்பார்க்கப்பட்ட ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை கூட்டம் கடந்த வாரத்தில் நடந்தது. அக்கூட்டத்தில் 0.50% அளவுக்கு ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டது.

ஆனால், இந்த வட்டி விகித உயர்வு ஏற்கெனவே எதிர்பார்த்ததுதான் என்பதால், பெரிய தாக்கத்தை சந்தையின் போக்கில் உண்டாக்கவில்லை. வட்டி உயர்வு அறிவிப்பு வெளியான பிறகும்கூட, சந்தை ஒரு வரம்பில் மட்டுமே வர்த்தகமானது. இதிலிருந்து பெரிய உந்து காரணிகள் ஏதும் இல்லாமல் சந்தையின் சென்டிமென்ட் மாற்றத்துக்குள்ளாகி ஏற்றத்தின் போக்கில் நகர்வதற்கான சூழல் இல்லை என்பது உறுதியாகத் தெரிந்தது.

பங்குகள்... வாங்கலாம்...
விற்கலாம்!

இதனால் நகர்வுகள் தனிப்பட்ட பங்குகள் சார்ந்ததாகவே இருக்கிறது. இது போன்ற சந்தையின் போக்கில் ஏற்றம் அடையக்கூடிய நல்ல நிறுவனப் பங்குகளைத் தேர்ந்தெடுப்பதும் கூட கடினமானதாக இருக்கும்.

வர்த்தகத்தில் வருமானம் பார்க்க வேண்டும் எனில், பொசிஷன்களை சற்று நீண்டகாலத்துக்கு வைத்திருக்க வேண்டியதாக இருக்கும். இதற்கு அதிக பொறுமையும் அதற்கேற்ப மூலதனமும் தேவை. வர்த்தகர்களிடம் இவை இருப்பது அரிதுதான். இனி பங்குகள் பற்றிப் பார்ப்போம்.

இந்தியன் எனர்ஜி எக்ஸ்சேஞ்ச் (IEX)

தற்போதைய விலை ரூ.184.85

வாங்கலாம்

புதிதாகப் பட்டியலான எக்ஸ் சேஞ்ச் நிறுவனப் பங்குகளில் சந்தை காளையின் போக்கில் இருக்கும்போது மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய பங்குகளில் இதுவும் ஒன்றாகும்.

ஆனால், கடந்த எட்டு மாதங் களாக இப்பங்கு இறக்கத்தின் போக்கில் இருந்தது. இந்நிலையில், இதன் தற்போதைய விலையில் இறக்கத்தின் போக்கு முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது.

50% ரீட்ரேஸ்மென்ட் நிலையை எட்டியுள்ள இப்பங்கு இறக்கத்தின் போக்கை நிறைவு செய்வதற்கான பேட்டர்னுடன் உள்ளது. மேலும், முதலீடு செய்வதற்கு ஏற்ற ரிஸ்க் குறை வான பங்காகவும் உள்ளது. குறுகிய காலத்தில் ரூ.225 இலக்கு விலையுடன் இப்பங்கை வாங்கலாம்.

பங்குகள்... வாங்கலாம்...
விற்கலாம்!

டாடா கம்யூனிகேஷன்ஸ் (TATACOMM)

தற்போதைய விலை ரூ.963.80

வாங்கலாம்

இப்பங்கு ரூ.1,500 என்ற விலைக்கு அருகில் மூன்று முறை உச்சநிலையை எட்டிய பிறகு, இறக்கம் காண ஆரம்பித்து 950 என்ற நிலை வரை விலை குறைந்தது.

இந்த நிலையில், 50% ரியாக்‌ஷன் ஜோனில் இருப்ப தால், இப்பங்கின் பேட்டர்ன் களில் சில பாசிட்டிவ் -ஆன அம்சங்கள் உருவாகியிருப்பது தெரிகிறது. இதன் ஆர்.எஸ்.ஐ இண்டி கேட்டரும் ஆழமான அதீத விற்பனை நிலையில் உள்ளது. இதனால் இப்பங்கில் மேலும், இறக்கம் உண்டாவது தடுக்கப்படும்.

குறுகிய காலத்தில் இப்பங்கின் விலை மீண்டும் ரூ.1,275 என்ற நிலைக்கு உயரும் என எதிர் பார்க்க லாம். ரூ.900-க்குக் கீழ் ஸ்டாப்லாஸ் வைத்துக்கொள்ளவும்.

டிவி18 பிராட்காஸ்ட் (TV18BRDCST)

தற்போதைய விலை ரூ.46.45

வாங்கலாம்

ஐ.பி.எல் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் அடுத்ததாக இந்நிறுவனம் ஒளிபரப்பு உரிமையைப் பெற்றுள்ள உலக கோப்பை கால்பந்து போட்டிகள் விரைவில் தொடங்க உள்ளன.

தொடர்ந்து வரும் காலத்தில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சி களைத் தன்வசம் வைத்துள்ள டிவி18 நிறுவனப் பங்கு அதன் தற்போதைய 40-45 விலை வரம்பில் மதிப்புமிக்க பங்காக விளங்குகிறது.

ஆர்.எஸ்.ஐ இண்டிகேட்டரும் அதன் அதீத விற்பனை நிலையிலிருந்து வெளிவந்துள்ளது. எனவே, இப்பங்கு ரூ.55 - 57 வரை உயரும் என எதிர்பார்க்கலாம்.

தமிழில்: ஜெ.சரவணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism