Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

கடந்த வாரம் தொடங்கியதிலிருந்தே இந்தியப் பங்குச் சந்தை நகர்வானது இறக்கத்தின் போக்கில் தீவிரமாக இருந்தது. பெரிய வரம்பிலான இறக்கம் உருவாகிய நிலையில், அதிலிருந்து சந்தை மீண்டு வரவே இல்லை. அடுத்த இரண்டு வர்த்தக தினங்களுமே மந்தமான போக்கிலேயே தொடர்ந்தது.

டாக்டர் சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர்,
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

ஆனால், வியாழன் அன்று அமெரிக்க ஃபெட் வட்டி விகிதத்தை 0.75% உயர்த்திய நிலையில், வியாழன் அன்று சந்தை மீண்டும் மோசமான இறக்கத்துக்கு உள்ளானது. முந்தைய நாள் இரவு அமெரிக்க சந்தைகளில் இருந்து வந்த தகவல்கள் அன்றைய தினம் சந்தையை ஏற்றத்துடன் தொடங்கி வைத்தது. ஆனால், அதன்பிறகு டவ் ஃப்யூச்சர்ஸ் கடுமையாக சரிவைச் சந்தித்ததால், நிஃப்டியும் சரிவை நோக்கி விழுந்தது. ஃபெடரல் வட்டி உயர்வு நடவடிக்கை சுமுகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றமளித்ததால் சந்தை செயல்பாட்டாளர்களின் சென்டிமென்ட் பாதிக்கப்பட்டு அனைவரையும் அவர் களுடைய பொசிஷன்களிலிருந்து வெளியேறத் தூண்டியது.

வியாழன் அன்று வர்த்தகம் பாசிட்டிவ்வாகத் தொடங்கினாலும், போகப்போக மோசமாக இறக்கம் கண்டதால், சந்தையின் தற்போதைய இறக்கத்தின் புதிய இறக்க நிலைகளை உருவாக்க காரணமானது. மார்ச் முதல் மே மாதம் வரை காணப்பட்ட 15650-15700 என்ற இறக்கநிலை வரம்பு உடைக்கப்பட்டது. இந்த நிலையை உடைத்து சந்தை இறங்கியதால், பெரும்பாலான ஸ்டாப்லாஸ் நிலைகள் அதன் சப்போர்ட் நிலைகளுக்குக் கீழே சென்றது.

மொமன்டம் இண்டிகேட்டரைப் பார்க்கும் போது சந்தையின் இறக்கத்தின் போக்கில் புதிதாக ஒரு மொமன்டம் உருவாகியிருப்பது, ஆர்.எஸ்.ஐ இண்டிகேட்டர் உடைந்து ஓவர்சோல்டு சோனுக்குக் கீழே சென்றிருப் பதைப் பார்க்கும்போது தெரிகிறது. இத்தகைய சூழலில் ரிவர்சல் விலை நகர்வுகளில் டைவர் ஜன்ஸ் பேட்டர்னை உருவாக்க வாய்ப்புள்ளது. ஆனால், அதற்கு ரிவர்சல் நகர்வு தொடங்கிய பிறகு இந்த நிகழ்வு நடக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.

இப்போதைய நிலையில், விலை நகர்வும் மொமன்டமம் ஒரே தீவிரத்தில் இருப்பதால் இண்டெக்ஸ் குறியீடுகள் மேலும் அழுத்தத்துக்கு உள்ளாகி இறக்கம் அடையும் என எதிர்பார்க்கலாம்.

பங்குகள்... வாங்கலாம்...
விற்கலாம்!

தற்போதைய சந்தை நகர்வுகளுக்கு பிட்ச் ஃபோர்க் முறையைப் பயன்படுத்தி பார்த்தோ மேயானால், நம்மால் சப்போர்ட் நிலைகள் 15000-15100 என்ற வரம்பில் இருப்பதைக் காண முடியும். ஃபிபனோசி கணக்கீடும் இந்த நிலையில்தான் காணப்படுகிறது. எனவே, இந்த நிலையிலிருந்து மீண்டுவருவதற்கான எதிர்பார்ப்பு உருவாவது மிகவும் சீக்கிரம் எனறுதான் சொல்ல வேண்டும்.

தற்போது சந்தையின் நகர்வுகள் முழுமையாக அமெரிக்க சந்தையின் வசம் உள்ளது. அதாவது, அமெரிக்க பணவீக்கமும், அமெரிக்காவில் நிகழ்வும் மாற்றங்களும் நம்முடைய பிரச்னைகள் என்பது போல நம் நடவடிக்கைகள் இருக்கின்றன. இது அபத்தமானதுதான். ஆனால், இப்போதைக்கு நிலைமை அப்படித்தான் இருக்கிறது. விரைவில் இந்தியச் சந்தை அமெரிக்க சந்தைகள் ஏற்படுத்தும் தாக்கங்களுக்கு உள்ளாவதிலிருந்து வெளிவரும். அதற்கு கவனத்தைத் திசை திருப்பும் புதிய நிகழ்வு ஒன்று தேவையாக உள்ளது. அது கிடைக்கும் வரையில் நம்முடைய சந்தைகளில் பாதிப்புகள் தொடரவே செய்யும்.

பங்குகள்... வாங்கலாம்...
விற்கலாம்!

வி.ஐ.பி இண்டஸ்ட்ரீஸ் (VIPIND)

தற்போதைய விலை ரூ.578.00

வாங்கலாம்

சந்தையின் தற்போதைய இறக்கத்தின் போக்கை சமாளித்து சிறப்பாகச் செயல் பட்டுவரும் சில பங்குகளில் இதுவும் ஒன்று. பல பங்குகளின் விலைகள் மிக மோசமாக இறக்கம் கண்டுள்ள நிலையில், இப்பங்கு விலை 38% ரீட்ரேஸ் மென்ட் நிலையில் இறங்கி வர்த்தகமாகிறது. ஆர்.எஸ்.ஐ இண்டிகேட்டரும் சப்போர்ட் நிலைக்கு அருகில் உள்ளது. எனவே, இதில் ஏற்றத்துக்கான நகர்வுகளை எதிர்பார்க்கலாம். இப்பங்கை தற்போதைய விலை யிலும் ரூ.525 வரை இறக்கத்திலும் வாங்கலாம்.

ப்ராஜ் இண்டஸ்ட்ரீஸ் (PRAJIND)

தற்போதைய விலை ரூ.333.90

வாங்கலாம்

ஏற்றத்தின் போக்கில் இருக்கும் பங்குகளில் இறக்கங்கள் உண்டாகும்போது வாங்குவதற் கான வாய்ப்புகள் உருவாகும். ப்ராஜ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு ஏற்றத்தின் போக்கைத் தக்க வைத்துக்கொண்டு வருகிறது.

அதில் காணப்படும் இறக்க மும் பக்கவாட்டு கன்சாலிடேஷன் பேட்டர்னாகவே கடந்த பல மாதங்களாக இருந்துவருகிறது. தற்போது இப்பங்கின் விலை ரூ.300-க்கு அருகில் அதன் முக்கிய சப்போர்ட் நிலையைப் பரிசோதிக்க உள்ளது. இந்த சப்போர்ட் தன்னை தக்கவைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை இருப்பதால், தற்போதைய விலை யிலும் ரூ.300 வரை இறக்கத்திலும் இப்பங்கை வாங்கலாம். ரூ.300-க்குக் கீழ் ஸ்டாப்லாஸ் வைத்துக் கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்...
விற்கலாம்!

அதானி டோட்டல் கேஸ் (ATGL)

தற்போதைய விலை ரூ.2,370.00

வாங்கலாம்

கடந்த ஓர் ஆண்டில் அல்லது இரண்டு ஆண்டில் பங்குச் சந்தையில் அடைந்த ஏற்றத்தை விட்டுக் கொடுக்காத சில பங்குகளில் அதானி டோட்டல் கேஸ் ஒன்றாகும்.

இதற்குச் சான்று இப்பங்கின் சார்ட் பேட்டர்னில் காணப்படும் பொசிஷன்கள் ஹோல்டிங் ஆகும். அதாவது, முதலீட்டாளர்கள் நீண்ட காலமாக இப்பங்கில் பொசிஷன்களை விட்டு வெளியேறாமல் இருக்கிறார்கள்.

எனவே, சந்தை மீண்டும் ஏற்றத்தின் போக்கில் திரும்பும் போது இப்பங்கு ஏற்றத்தில் பயணிக்கும் என எதிர்பார்க்கலாம்.

தற்போதைய விலையில் இப்பங்கை வாங்கலாம். ரூ.2250-க்குக் கீழ் ஸ்டாப்லாஸ் வைத்துக்கொள்ளவும்.

தமிழில்: ஜெ.சரவணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism