Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

கடந்த வாரத்தில் பங்குச் சந்தை சரிவின் போக்கில் இருந்தாலும், நிஃப்டி தன்னை 15200 என்ற நிலையில் தக்கவைத்துக் கொண்டது. மேலும், ஓரளவு ஏற்றத்துக்கான நகர்வையும் உருவாக்கியது. ஆனாலும், இந்த நகர்வுகள் தற்காலிகமானதாகவே இருப்பதால், ஒரு முடிவுக்கு வருவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லாமலே இருக் கிறது. இறக்கமானது இப்போதைக்கு சற்று கட்டுக்குள் இருக்கிறது என்கிற முடிவுக்கு மட்டுமே நம்மால் வர முடிகிறது.

டாக்டர் சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர்,
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

சந்தையில் காளையின் சென்டிமென்ட் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. மீண்டும் காளை ஆதிக்கம் பெற வேண்டுமெனில் அதற்கு சந்தை செயற்பாட்டாளர் களுக்கு நம்பிக்கை தரக்கூடிய சாதகமான செய்திகள், நிகழ்வுகள் அதிகம் தேவை யாக உள்ளன.

ஆனால், வருத்தம் தரும் விஷயம் என்னவெனில், இப்போதைக்கு காளைக்கு சாதகமான செய்திகள் எதுவும் இருப்பதாக உறுதி யாகத் தெரியவில்லை. இப்போது சந்தையில் அதிக மாகப் பேசப்படும் விஷயம், அமெரிக்க ஃபெடரல் அந்நாட்டின் பொருளாதாரச் சூழல் குறித்து வெளியிடும் அறிக்கைகளைப் பற்றித்தான் இருக்கிறது.

முன்னணி தனியார் வங்கிப் பங்குகளின் தொடர்ச்சியான இறக்கத் தால் பேங்க் நிஃப்டியும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

சந்தையின் தற்போதைய இறக்க நிலையிலும் உறுதியாக இருக்கும் ஒரே துறை ஆட்டோமொபைல்தான். இந்தத் துறையில்தான் புதிய முதலீடுகள் வருவது தெரிகிறது. இது ஆட்டோ மொபைல் துறையின் சில பங்குகளில் சப்போர்ட் நிலை களிலிருந்து ஏற்றத்துக்கான நகர்வை உருவாக்கியுள்ளது. ஆனாலும், அவற்றின் பங்களிப்பு நிஃப்டியில் குறைவாகவே இருப்பதால், அந்தப் பங்குகள் நன்றாக ஏற்றம் கண்டாலும்கூட நிஃப்டியில் அவற்றின் தாக்கம் பெரிய அளவில் இல்லை.

ரூபாய் மதிப்பின் தொடர் வீழ்ச்சி சந்தையில் அழுத்தத் தைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டே இருக்கிறது. ரிசர்வ் வங்கி டாலர்களைத் தொடர்ந்து விற்பதாலும், ஏற்றுமதியாளர்கள் ஹெட்ஜிங் செய்வது குறைவாக இருப்பதாலும் ஃபார்வேர்ட் பிரீமியம் பல ஆண்டு இறக்கத்தில் உள்ளது. இதனால் எஃப்.ஐ.ஐ. களின் வர்த்தகமும் கவர்ச்சிகரமானதாக இல்லை. எனவே, தொடர்ந்து சந்தையிலிருந்து முதலீடுகள் வெளியேறுவது உறுதியாகத் தெரிகிறது. இது ரூபாயின் மீது தொடர்ந்து அழுத்தத்தை உண்டாக்கும். ரூபாய் மதிப்பு வலுவிழந்தால், பங்குச் சந்தை குறியீடுகளும் வலுவிழக்கும்.

அக்டோபர் 2021-க்குப் பிறகு, தொடங்கிய இறக்கத்தின்போக்கில் ஜூன் 20-ம் தேதி அதிகபட்ச இறக்கநிலை பதிவானது. ஜூன் 21 முதல் ஏற்பட்டுள்ள திருப்பமானது சுவாரஸ்யமான விஷயமாகப் பார்க்கப் படுகிறது. இது எந்தளவுக்கு சந்தையின் போக்கில் மாற்றங்களைக் கொண்டுவருகிறது எனப் பார்க்கலாம்.

நடுத்தரக் காலத்துக்கு சந்தையின் போக்கு அழுத்தத் தில்தான் இருக்கிறது. எனவே, சந்தையின் நகர்வுகள் இப்போதைக்கு குறுகிய காலத்துக்கானதாகவே இருக்கும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

எக்ஸ்ப்ரோ இந்தியா (XPROINDIA)

தற்போதைய விலை ரூ.1,026.25

வாங்கலாம்

இது சந்தையின் ஏற்றப்போக்கில் மிகவும் கவனிக்கப் பட்ட பங்குகளில் ஒன்றாகும். இது தொடர் ஏற்றம் கண்டு 1,620 என்ற உச்சம் வரை உயர்ந்தது. அதன் பிறகு, அந்த உச்சநிலையிலிருந்து பின்வாங்கி இறங்க ஆரம்பித்து, தற்போது 1,000 என்ற அளவில் வர்த்தகமாகிறது. இந்தப் பங்கை புதிய முதலீட் டாளர்கள் வாங்கியுள்ளனர். இது அதன் இறக்க நிலைகளில் ஆதரவாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். எனவே, தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். ரூ.800-க்குக் கீழ் ஸ்டாப்லாஸ் வைத்துக் கொள்ளவும். இப்பங்கு மீண்டும் அதன் பழைய உச்சத்தை எட்டும் என்று நம்பலாம்.

ட்ரென்ட் (TRENT)

தற்போதைய விலை ரூ.1,030.50

வாங்கலாம்

இப்பங்கு தற்போதைய இறக்கத்தின் போக்கில் அதன் பிரதான சப்போர்ட் நிலையை எட்டியுள்ளது. முந்தைய இறக்கங்களின்போது இந்த நிலையில் மேலும் இறங்காமல் பங்கைக் கட்டுக்குள் வைத்திருந்தது. இந்த முறையும் இறக்கத்தைக் கட்டுக்குள் வைக்கும் என நம்பலாம். மேலும், இப்பங்கு 1,000 என்ற நிலையில் பல ஸ்விங் இறக்கங் களை உண்டாக்கியிருக்கிறது. அவை அனைத்தும் டிமாண்டை உருவாக்குவதாக இருந்திருக்கின்றன. எனவே, இப்பங்கை தற்போதைய விலையில் வாங்கலாம். குறுகிய காலத்தில் ரூ.1,225 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.900-க்குக் கீழ் வைத்துக்கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

அசோக் லேலாண்ட் (ASHOKLEY)

தற்போதைய விலை ரூ.139.50

வாங்கலாம்

சந்தையின் தற்போதைய பலவீனமான சூழலிலும் ஆட்டோமொபைல் பங்குகள் நிலையாக வர்த்தகமாகி வரு கின்றன. நீடித்து காணப்பட்ட பக்கவாட்டிலான நகர்வுகள் அனைத்து பங்குகளையும் அதன் பிரேக் அவுட் நிலை யிலிருந்து உடைத்து ஏற்றம் காணத் தொடங்கியிருக்கின் றன. இப்பங்கில் மொமன்டம் உருவாவதற்கான அறிகுறியும் மெல்ல தெரிய ஆரம்பித்திருக் கிறது. சார்ட் பேட்டர்னும் இப்பங்கில் ரிஸ்க் குறைவாக இருப்பதாகக் காட்டுகிறது. எனவே, இந்தப் பங்கை தற்போதைய விலையில் வாங்க லாம். பிரேக் அவுட்டாகி நகரும்போது 145-50 என்ற நிலையைத் தாண்டி உயர ஆரம்பிக்கும். இதன் குறுகிய கால இலக்கு விலை ரூ.170. ஸ்டாப்லாஸ் ரூ.130-க்குக் கீழ்.

தமிழில்: ஜெ.சரவணன்