Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

கடந்த வாரம் திங்கள் அன்று இந்தியப் பங்குச் சந்தை ஏற்றம் கண்டபோது, தொடர்ந்து ஏற்றத்தின் வேகம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை. சொல்லப் போனால், விலை நகர்வுகள் பின்வாங்கி வாரம் முழுவதும் இறக்கத்தைப் பதிவு செய்தது.வர்த்தகம் பெரும்பாலும் மந்தமாக இருந்தது.

டாக்டர் சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர்,
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

முந்தைய வாரத்தில் ‘சந்தையில் நகர்வுகள்’ தற்காலிகமானதாகவே இருக்கிறது. இதனால் சந்தையின் நகர்வு எந்தப் போக்கில் இருக்கிறது என்ற சரியான முடிவுக்கு வர முடியவில்லை. இப்போதைய சூழலை வைத்துச் சொல்ல வேண்டும் எனில், ‘இறக்கத்தின் போக்கு தொடர்வதற்கான வாய்ப்புள்ளது’ என்று குறிப் பிட்டிருந்தோம். அது மேலும் தொடர்வதாகவே தெரிகிறது. மேல்நோக்கி ஏற்றம் அடைய சந்தை முயற்சி செய்யும்போதெல்லாம் முந்தைய வாரத்திலிருந்த நிலைக்கே திரும்பி விடுகிறது.

ரூபாய் மதிப்பும் தொடர்ந்து பலவீனமடைந்து 79-யைக் கடந்து புதிய குறைந்தபட்ச மதிப்பை எட்டியுள்ளது. ரூபாயின் வீழ்ச்சியைக் கட்டுக்குள் வைக்க கணிசமாக டாலர்களை விற்கும் நடவடிக்கையை ரிசர்வ் வங்கி எடுத்து வருகிறது. ஆனால், பெரும்பாலான பிற சர்வதேச நாணயங்களும் டாலருக்கு நிகரான மதிப்பில் வீழ்ச்சியைச் சந்திப்பதால், ரூபாய் மதிப்பு தொடர்ந்து பலவீனமடைவதைத் தடுக்க முடியவில்லை. முன்பே குறிப்பிட்டது போல, பலவீனமான ரூபாய் மதிப்பு சந்தையில் கரடியின் போக்கை ஆதரிப்பதாக இருக்கும் அல்லது சந்தையின் நகர்வுகள் குறிப்பிட்ட வரம்பிலேயே தொடரும் என்பதை இப்போது காண முடிகிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக் கான உள்நாட்டு செய்திகள் எதுவும் இல்லாத நிலையில், சந்தை தொடர்ந்து அமெரிக்கா விலிருந்து வரும் தகவல்களை ஒட்டியே எதிர்வினை ஆற்றுகிறது. சமீபத்தில் அமெரிக்க ஜி.டி.பி குறித்த புள்ளிவிவரங்கள் வெளி வந்துள்ளன. இவை எதிர்பார்த்ததுபோலவே இருந்ததால், சந்தையில் அவற்றின் தாக்கம் குறைவாகவே உள்ளது.

ஜூலையின் இரண்டாம் வாரத்தில் நிறுவனங் களின் காலாண்டு நிதிநிலை முடிவுகள் வெளிவரும். அதுவரை சந்தையின் செயல்பாடு இவ்வாறே தொடரும். துறைகளில் ஆட்டோமொபைல் மட்டுமே சற்று ஏற்றத்தின் நகர்வைக் கொண்டிருக் கிறது. இத்துறையின் பெரும்பாலான பங்குகளில் ஓரளவேனும் ஏற்றத்தின் போக்கை பார்க்க முடிகிறது. செமிகண்டக்டர் தட்டுப்பாடு விவகாரம் சற்று தணிந்திருப்பது குறித்த அறிக்கை கள் வெளிவந்ததால், ஆட்டோமொபைல் துறை பங்குகள் ஏற்றத்தில் உள்ளன. டிமாண்ட் அதிகரித் திருப்பதும் இந்தப் பங்குகள் ஏற்றமடைய இன்னொரு முக்கியமான காரணமாகும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஆனால், ஐ.டி, வங்கி, மெட்டல் போன்ற துறைகள் இன்னமும் அழுத்தத்திலேயே இருக்கின்றன. இவை சந்தையின் சென்டிமென்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. எனவே, இந்தத் துறைகளில் சாதகமான நகர்வுகள் ஏற்படும் வரை சந்தையில் ஏற்றத்துக்கான போக்கு உருவா வதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கும்.

சந்தையில் பாசிட்டிவான சென்டிமென்ட் உருவாக வேண்டுமெனில், நிஃப்டியின் நகர்வு 16000 என்ற நிலையைக் கடந்தாக வேண்டும். இறக்கத்தின் போக்கில் 15300-15500 என்ற வரம்பு காளையின் ஆதிக்கத்துக்கு சப்போர்ட் நிலையாக இருக்கும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

தெர்மாக்ஸ் (THERMAX)

தற்போதைய விலை ரூ.2,080.00

வாங்கலாம்

சந்தையின் அழுத்தத்தைச் சமாளிக்கும் சில பங்குகளில் இதுவும் ஒன்று. மேலும், பல மாதங்களாகவே நிலையாக மெல்ல ஏற்றத்தின் போக்கில் நகர்ந்தும் வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக விலை நகர்வுகள் பக்கவாட்டில் கன்சாலிடேஷன் போக்கில் இருந்துவருகிறது. தற்போது அந்தப் போக்கிலிருந்து வெளிவரத் தயாராக இருப்பது தெரிகிறது. முடிந்த வாரத்தில் இப்பங்கில் ஏற்றத்தின் கேண்டில் பேட்டர்ன் நன்கு வரையறுக்கப் பட்ட சப்போர்ட் நிலையிலிருந்து உருவாகியிருக்கிறது. இது இந்தப் பங்கின் விலையை மேல்நோக்கி நகர்த்துவதுடன், குறுகிய காலத்தில் 2210-2250 வரை கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கலாம். எனவே, ரூ.2,100 ஸ்டாப்லாஸுடன் இப்பங்கை வாங்கலாம்.

ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் (RAJESHEXPO)

தற்போதைய விலை ரூ.622.00

வாங்கலாம்

பொதுவாக, பங்கின் விலை நகர்வுகளுடன் புதிய மொமன்ட மும் உருவாகியிருந்தால், அது மேலும் ஏற்றத்துக்கான போக்கை உண்டாக்கும். இந்த அறிகுறிகள் ராஜேஷ் எக்ஸ்போர்ட் பங்கின் சார்ட்டில் தெரிகின்றன. இதன் விலை நகர்வுகள் பிரேக் அவுட் ஆகி, அதன் சராசரி பேண்ட் நிலைக்கு மேல் நகர தயாராக இருக் கின்றன. ஆனால், இதில் ஏற்கெனவே ஆர்.எஸ்.ஐ இண்டி கேட்டர் நகர்வு தீவிரமாக இருக் கிறது. இதிலிருந்து இப்பங்கில் பிரேக் அவுட் செயல்பாடு வெற்றி கரமாக இருக்கும் என்ற நம்பிக்கை உண்டாகிறது. எனவே, இப்பங்கு குறுகிய காலத்தில் ரூ.730 வரை உயரும் என எதிர்பார்க்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.625-க்குக் கீழ் வைத்துக்கொள்ளவும்.

ஶ்ரீராம் ட்ரான்ஸ்போர்ட் (SRTRANSFIN)

தற்போதைய விலை ரூ. 1,269.00

வாங்கலாம்

நல்ல விலைநகர்வும் கூடவே நல்ல மொமன்டமும் இருக்கிற பங்குகள் காளையின் போக்குக்கு சரியான பங்கு களாகும். அப்படியான பங்காக உள்ள ராம் டிரான்ஸ் போர்ட் பங்கின் சார்ட்டைப் பார்க்கும்போது, விலை நகர்வு பிரேக் அவுட்டை உண்டாக்கி சிறிய கொடி போன்ற பேட்டர்னையும் உருவாக்கியிருக்கிறது. எனவே, இப்பங்கின் விலை ஏற்றத்தின் போக்கில் இருக்கும் என்று எதிர்பாக்கலாம். தொடர்ந்து மொமன்டம் சிறப்பாக இருந்தால் விலை நகர்வு வேகமாக இருக்கும். குறுகிய காலத்தில் ரூ.1,300 என்ற இலக்கு விலையுடன் இப்பங்கை வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.1,225-க்குக் கீழ் வைத்துக் கொள்ளவும்.

தமிழில்: ஜெ.சரவணன்