Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பெரிய அளவிலான டேட்டா வெளியீடுகள் இல்லாத வாரத்தை எதிர்கொள்ளப்போகிறோம். செய்திகளும் நிகழ்வுகளுமே நிஃப்டியின் போக்கை நிர்ணயிக்கும்.

சென்ற வாரம் 16136-ல் ஓப்பன் ஆன நிஃப்டி, வியாழனன்று இறுதியில் 15938 என்ற அளவில் நிறைவடைந்தது. 15858 மற்றும் 16248 என்ற எல்லைகளைத் திங்கள் முதல் வியாழன் வரை நடந்த டிரேடிங்கில் நிஃப்டி சந்தித்திருந்தது. வாராந்தர அளவில் 15860 / 15755 / 15640 என்ற லெவல்களை சப்போர்ட்டாகவும், 16160 / 16350/ 16460 என்ற லெவல்களை ரெசிஸ்டன்ஸாகவும் கொண்டு வரும் வாரத்தில் வர்த்தகமாக வாய்ப்புள்ளது.

Dr.எஸ்.கார்த்திகேயன்
Dr.எஸ்.கார்த்திகேயன்

தெளிவானதொரு டிரெண்ட் இன்னமும் உருவாகாமல் திசைதெரியா நிலையிலேயே சந்தை இருந்துவருவதால், டிரேடர்கள் அதிக அளவிலான எச்சரிக்கையுடன் வர்த்தகம் செய்ய வேண்டியிருக்கும்.

மீண்டும் ஏற்றம் தொடங்கி 16280 என்ற லெவலை வால்யூமுடன் கடந்தால், 16400 என்ற நிலையை சுலபமாகத் தொட வாய்ப்புள்ளது என்பதை டிரேடர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

வியாபாரத்துக்கான வாய்ப்பு சற்றுக் குறை வாக இருக்க வாய்ப்புள்ள வாரம் இது. எனவே, எண்ணிக்கையில் மிகவும் குறைந்த அளவிலும், ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸ் களுடன் உடனுக்குடன் லாபத்தை புக் செய்து கொள்ளும் மனநிலையுடனே வியாபாரத்தில் ஈடுபட வேண்டும். சராசரியாக நடக்கும் வியாபாரத்தின் அளவு (வால்யூம்) சற்று ஏற்ற இறக்கத்துடனேயே தற்சமயம் இருப்பதால், எச்சரிக்கையுடன் டிரேட் செய்ய வேண்டி யிருக்கும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பல்ராம்பூர் சினி மில்ஸ் லிமிடெட் (BALRAMCHIN)

வாங்கலாம்

14.07.2022 விலை: ரூ.360.30

353 என்ற விலையைத் தாண்டி இறங்கி 345 என்ற லெவலில் சப்போர்ட் எடுத்து வால்யூமுடன் ஏற ஆரம்பித்தால், இந்தப் பங்கு ரூ.368 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது. இந்தப் பங்கு ஹைரிஸ்க் எடுக்கும் டிரேடர்கள் கவனிப்பதற்காக மட்டுமே. ஒட்டுமொத்த சந்தை யின் ஏற்றம் தொடரும்பட்சத்தில் இந்தப் பங்கு ரூ.371 வரையிலுமே சென்று திரும்ப வாய்ப்புள்ளது.

ஹைரிஸ்க் எடுக்கும் திறன் கொண்ட டிரேடர்கள் மட்டும் 340 என்ற லெவலை ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸாக வைத்துக் கொண்டு இந்த பங்கில் வர்த்தகம் செய்வது குறித்து பரிசீலிக்கலாம். சராசரியாக நடக்கும் வால்யூமின் மீது ஒரு கண் வைத்துக்கொண்டே வர்த்தகம் செய்ய வேண்டும். சராசரி வால்யூம் குறைந்து விலை ஏறினால் இந்தப் பங்கில் வர்த்தகம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாபர் இந்தியா லிமிடெட் (DABUR)

14.07.2022 விலை: ரூ.549.25

கடந்த முறை வந்த இறக்கத்தில் 495 என்ற லெவலில் நல்லதொரு சப்போர்ட் எடுத்த இந்தப் பங்கு 549.90 சமீபத்திய உச்சத்தைத் தொட்டுள்ளது. தொடர்ந்து 551 என்ற லெவலைத் தாண்டி வால்யூமுடன் ஏற ஆரம்பித்தால் 570 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.

ஹைரிஸ்க் எடுக்கக்கூடிய திறன்கொண்ட டிரேடர்கள் மட்டும் 534 என்ற லெவலை ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸாக வைத்துக்கொண்டு வியாபாரம் செய்வதற்காக டிராக் செய்ய லாம்.

தீபக் ஃபெர்ட்டிலைசர்ஸ் அண்ட் பெட்ரோகெமிக்கல் கார்ப்பரேஷன் (DEEPAKFERT)

14.07.2022 விலை: ரூ.633.40

625-ல் இந்த பங்குக்கு நல்ல தொரு சப்போர்ட் கிடைக்க வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்த சந்தையும் ஏற்றநிலைக்குத் திரும்பி அதே சமயம் இந்தப் பங்கும் 625-ல் சப்போர்ட் எடுத்து வால்யூமுடன் ஏற்றத்தை சந்தித் தால், 666 என்ற லெவல் வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.

610 என்ற லெவலை ஸ்ட்ரிக்ட் டான ஸ்டாப்லாஸாகக் கொண்டு ஹைரிஸ்க் டிரேடர்கள் மட்டும் இந்தப் பங்குகளை வர்த்தகம் செய்யும் நோக்கத்து டன் டிராக் செய்யலாம். நிஃப்டி வீக்காக இருக்கும்பட்சத்தில் இந்தப் பங்கில் வாய்ப்பு உருவா வதைப்போல் இருந்தாலுமே வர்த்தகம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் (HINDALCO)

14.07.2022 விலை ரூ.349.10

339-ல் சப்போர்ட் எடுத்த இந்தப் பங்கு 368 வரை சென்று 348 என்ற லெவலில் குளோஸாகி உள்ளது. மீண்டும் 339 என்ற லெவலுக்கு வந்து சப்போர்ட் எடுத்து ஏற்றத்தைச் சந்தித்தால், 373 என்ற எல்லை வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது. 330 என்ற ஸ்டிரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் ஹைரிஸ்க் டிரேடர்கள் மட்டுமே இந்தப் பங்கை வர்த்தகம் செய்வதற்காக டிராக் செய்யலாம்.

எச்சரிக்கை: வாராந்தர அளவில் டெக்னிக்கல் அனாலிசிஸைப் பயன்படுத்தி டிரேடிங் செய்யும் டிரேடர் களுக்கான பகுதி இது. பங்குகளில் டிரேடிங் செய்வது மிக அதிக அளவிலான பண ரீதியான ரிஸ்க்கைக்கொண்ட விஷயமாகும். வாசகர்கள் வர்த்தகம் செய்வதற்கு முன் செபி பதிவு பெற்ற இன்வெஸ்ட்மென்ட் அட்வைஸரிடம் கலந்தா லோசித்த பின்னரே வர்த்தகம் செய்ய வேண்டும்.

Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume based parameters and the data is compiled by Dr S Karthikeyan (an Independent Research Analyst herein after referred as ‘Research Analys t’). Dr S Karthikeyan is a SEBI registered Research Analyst under the SEBI (Research Analys ts) Regulations, 2014 with registration number INH200001384.

Analyst Certification and Disclosures under the provisions of SEBI (Research Analysts) Regulations 2014

General terms and conditions of the research report

For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the

assis tance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular inves tment/trading needs, objectives and financial circumstances.

One year Price his tory of the daily closing price of the securities covered in this section is available at http://www.nseindia.com/products/content/equities/equities/eq_security.htm (Choose the respective symbol) /name of company/time duration)