Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

அமெரிக்க வட்டி விகித முடிவுகளை எதிர்பார்த்தும், அது வெளியான பின்னர் அதற்கேற்ற மூவ்களையுமே அடுத்த வாரம் நிஃப்டியில் எதிர்பார்க்கலாம். ஜூலை மாதத்துக்கான எஃப்&ஓ எக்ஸ்பைரியும் வியாழனன்று இருப்பதால், டிரேடர்கள் இரு மடங்கு கண்ணும் கருத்துமாகச் செயல்பட வேண்டியிருக்கும்.

Dr.எஸ்.கார்த்திகேயன்
Dr.எஸ்.கார்த்திகேயன்

சென்ற வாரம் 16151-ல் ஓப்பனான நிஃப்டி வியாழனன்று இறுதியில் 16605 என்ற அளவில் நிறைவடைந்திருந்தது. 16142 மற்றும் 16626 என்ற எல்லைகளைத் திங்கள் முதல் வியாழன் வரை நடந்த டிரேடிங்கில் நிஃப்டி சந்தித்திருந்தது. வாராந்தர அளவில் 16289/15973/15788 என்ற லெவல்களை சப்போர்ட்டாகவும், 16774/ 16943/17128 என்ற லெவல்களை ரெசிஸ்டென் ஸாகவும் கொண்டு வரும் வாரத்தில் வர்த்தகமாக வாய்ப்புள்ளது. 16770 என்ற லெவலைத் தாண்டி வால்யூமுடன் ஏறுகிற பட்சத்தில் 17120 வரை தொடருவதற்கான சூழல் உருவாவதாக டிரேடர்கள் கருதலாம்.

டெக்னிக்கல்கள் இந்தச் சூழலைக் காட்டுகிற போதிலும் இதற்கான வாய்ப்புகள் தற்போதைக் குக் கொஞ்சம் குறைவாகவே இருக்கிற சூழலே நிலவுகிறது என்பதையும் டிரேடர்கள் முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டும். அமெரிக்க வட்டிவிகித முடிவுகளே சந்தை யின் போக்கை நிர்ணயிக்கும் என்பதால், டெக்னிக்கல் லெவல்கள் பெரிய அளவில் சரிவர செயல்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்பதையும் டிரேடர்கள் மனதில் கொண்டு டிரேடிங் செய்ய வேண்டியிருக்கும். 16400-க்கு கீழே சென்றால் 15950 வரையில் இறங்கிவிடு வதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதால், அது போன்ற சூழ்நிலையில் டிரேடர்கள் வர்த்தகத்தின் அளவைக் குறைத்துக்கொள்வது நல்லது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

வாங்கலாம்:

Adani Power Limited (ADANIPOWER)

21.7.2022 விலை: ரூ.294 (குளோஸிங் விலை)

279 என்ற லெவலில் சப்போர்ட்டை எடுத்த இந்தப் பங்கானது வியாழனன்று 294 என்ற அளவில் முடிவடைந்துள்ளது. நிஃப்டி பாசிட்டிவ்வாக இருக்கும்பட்சத்தில் 303 என்ற எல்லை வரை சென்று திரும்புவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஹைரிஸ்க் எடுக்கும் திறன் கொண்ட டிரேடர்கள் இந்தப் பங்கில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் வியாபாரம் செய்வது குறித்து பரிசீலிக்கலாம். சராசரியாக நடக்கும் வால்யூமை விட அதிக வால்யும் நடப்பதால் மட்டுமே இது சாத்தியம் என்பதால், வால்யூம் மீது டிரேடர்கள் கண்வைத்தே டிரேடிங் செய்ய வேண்டியிருக்கும்.

Apollo Tyres Limited (APOLLOTYRE)

21.7.2022 விலை: ரூ.213.15 (குளோஸிங் விலை)

நிஃப்டி இறங்கி அதனால் ஒட்டுமொத்த சந்தையுமே இறங்கும் வேளையில், இந்தப் பங்கும் இறங்கி 204 என்ற லெவலில் வால்யூமுடன்கூடிய சப்போர்ட்டை எடுத்தால் மீண்டும் 218/220 என்ற லெவல் வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது. ஹைரிஸ்க் டிரேடர்கள் மட்டும் 204 என்ற லெவலில் 200 என்கிற ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸாக வைத்துக் கொண்டு வியாபாரம் செய்ய டிராக் செய்யலாம்.

JB Chemicals & Pharmaceuticals Limited (JBCHEPHARM)

21.07.2022 விலை: ரூ.1,677.70 (குளோஸிங் விலை)

சராசரியாக நடக்கும் வால்யூ மைவிட அதிக வால்யூமுடன் ஏறினால் 1720 மற்றும் 1765 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது. 1657 என்ற லெவலை ஸ்டாப் லாஸாகக் கொண்டு ஹைரிஸ்க் டிரேடர்கள் மட்டும் இந்தப் பங்குதனை வர்த்தகம் செய்யும் நோக்கத்துடன் டிராக் செய்ய லாம். நிஃப்டி ஒரேயடியாக பலவீனமாக இருக்கும்பட்சத்தில் இந்தப் பங்கில் வர்த்தகம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

Mahindra Lifespace Developers Limited (MAHLIFE)

21.7.2022 விலை: ரூ.431.30 (குளோஸிங் விலை)

417 மற்றும் 406 என்ற லெவல் களில் நல்லதொரு டெக்னிக்கல் சப்போர்ட்டைக் கொண்டிருக் கும் இந்தப் பங்கை ஹைரிஸ்க் டிரேடர்கள் 425 என்ற லெவ லுக்கு வந்தால் மீண்டும் 435 என்ற எல்லை வரை செல்லும் வாய்ப்பை எதிர்பார்த்து மிகவும் குறைந்த எண்ணிக்கையில் 417 என்ற ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப் லாஸுடன் வர்த்தகம் செய்வதற் காக டிராக் செய்யலாம். 417-க்கு அப்பால் 406 என்ற லெவலிலேயே சப்போர்ட் கிடைக்க வாய்ப்பிருப் பதால், 417 என்ற ஸ்டாப்லாஸைக் கட்டாயமான ஒன்றாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒட்டுமொத்த மார்க்கெட் வீக்காக இருக்கும் சூழலில் 425-க்கு இந்தப் பங்கு வந்தாலுமே வர்த்தகம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. ஹைரிஸ்க் டிரேடர்கள் மட்டுமே இந்தப் பங்குதனை வர்த்தகம் செய்வதற்காக டிராக் செய்யலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

எச்சரிக்கை: வாராந்தர அளவில் டெக்னிக்கல் அனாலிசிஸைப் பயன்படுத்தி டிரேடிங் செய்யும் டிரேடர்களுக்கான பகுதி இது. பங்குகளில் டிரேடிங் செய்வது மிக அதிக அளவிலான பண ரீதியான ரிஸ்க்கை கொண்ட ஒரு விஷயமாகும். வாசகர்கள் வர்த்தகம் செய் வதற்குமுன் செபி பதிவு பெற்ற இன்வெஸ்ட்மெண்ட் அட்வைசரிடம் கலந்தாலோசித்த பின் வர்த்தகம் செய்ய வேண்டும். சரியான வாய்ப்புகளுக்காகக் காத்திருந்து அந்த வாய்ப்புகள் கிடைக்கும்போது குறைந்த எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப் லாஸ்களுடன் மட்டுமே டிரேடிங் செய்ய வேண்டும்.