Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

இந்திய ரிசர்வ் வங்கியின் வட்டி விகித முடிவானது எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளே நிஃப்டியின் போக்கை நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Dr.எஸ்.கார்த்திகேயன்
Dr.எஸ்.கார்த்திகேயன்

சென்ற வாரம் திங்களன்று 16662 என்ற அளவில் ஆரம்பமான நிஃப்டி, 16438 மற்றும் 16947 என்ற எல்லைகளைத் தொட்டுவிட்டு 16929 என்ற அளவில் வியாழனன்று குளோஸாகி இருந்தது.

வியாழக்கிழமை எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரி தினம் என்பதால், அதற்கான மூவ்களே சந்தையில் இருந்தது. 16600 என்ற அளவில் நல்லதொரு சப்போர்ட்டையும், 17408 மற்றும் 17625 என்ற லெவல்களில் ரெசிஸ்டென்ஸையும் கொண்டு நிஃப்டி செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

16965 என்ற லெவலைத் தாண்டி வால்யூ முடன் இரண்டுக்கும் மேற்பட்ட பாசிட்டிவ் குளோசிங் வந்தால் மட்டுமே 17408 என்ற லெவல் வரை செல்வதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை டிரேடர்கள் நினைவில் வைத்து செயல்பட வேண்டும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

வாரத்தின் முதல் இரண்டு நாள்களில் வீக்னெஸ் தென்பட்டால், வியாபாரம் செய்யும் அளவைக் கணிசமாகக் குறைத்துக்கொள்வது அவசியம்.

எச்சரிக்கையுடன் டிரேடிங் செய்ய வேண்டிய வாரமிது என்பதை நினைவில் கொண்டு டிரேடர்கள் செயல்பட வேண்டும்.

வாங்கலாம்:

ICICI Prudential Life Insurance Company Limited (NSE Symbol: ICICIPRULI)

28.07.2022 விலை: 530.00 (குளோஸிங் விலை)

511 என்ற லெவலில் சப்போர்ட்டை எடுத்து தற்சமயம் 530 என்ற லெவலில் இருக்கிறது. சந்தை பாசிட்டிவ்வாக இருக்கும்பட்சத்தில் 548 என்ற எல்லை வரை சென்று திரும்பு வதற்கான வாய்ப்பிருக்கிறது.

ஹைரிஸ்க் எடுக்கும் திறன் கொண்ட டிரேடர்கள் மட்டும் இந்த நிறுவனத்தை 523 என்ற லெவலை ஸ்டாப்லாஸாக வைத்துக் கொண்டு டிராக் செய்யலாம். 523 என்ற லெவலைத் தாண்டி இறங்கினால் 512 வரை சென்று திரும்ப வாய்ப்பிருப்பதால், ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப் லாஸாக 523-ஐ கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

Gujarat Mineral Development Corporation Limited (NSE Symbol: GMDCLTD)

28.07.2022 விலை: ரூ.158.75 (குளோஸிங் விலை)

146 என்ற லெவலுக்குக்கீழே வால்யூமுடன் இறங்கினால் மட்டும் இந்தப் பங்கை 142 என்ற ஸ்டாப்லாஸுடன் ஹைரிஸ்க் எடுக்கும் திறன் கொண்ட டிரேடர்கள் டிராக் செய்யலாம்.

163 என்ற லெவல் வரை செல்ல வாய்ப்பு இருந்தாலுமே அதற்கு முன்னரே லாபம் இருந்தால், அதை புக் செய்துகொள்ளும் திட்டத்துடன் செயல்படுவது மிக மிக நல்லது.

ஒட்டுமொத்த சந்தையும் வீக்காக இருக்கும் பட்சத்தில் இந்தப் பங்கில் வர்த்தகம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

Shanthi Gears Limited (NSE Symbol: SHANTIGEAR)

28.07.2022 விலை: ரூ.239.95 (குளோஸிங் விலை)

தற்சமயம் சற்று வீக்கான நிலையில் இருக்கும் இந்தப் பங்கு 234 என்ற லெவலில் வால்யூ முடன்கூடிய சப்போர்ட் எடுத் தால் மீண்டும் 256 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.

இறக்கம் தொடர்ந்து சராசரி வால்யூம் அதிகரித்து, பின்னர் 234-ல் சப்போர்ட் எடுத்தால் மட்டுமே இது சாத்தியம்.

ஹைரிஸ்க் டிரேடர்கள் மட்டும் 230 என்ற லெவலை ஸ்டாப்லாஸாகக் கொண்டு இந்தப் பங்கை வர்த்தகம் செய்யும் நோக்கத்துடன் டிராக் செய்யலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

Larsen & Toubro Limited (NSE Symbol: LT)

28.07.2022 விலை: ரூ.1,801.25 (குளோஸிங் விலை)

1755 என்ற லெவலில் சப்போர்ட் எடுத்த இந்தப் பங்கு 1801 என்ற லெவலில் குளோசாகி உள்ளது. நிஃப்டியின் ஏற்றம் தொடர்ந்தால், 1858 மற்றும் 1885 என்ற லெவல்கள் வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.

1708-ல் மட்டுமே ஸ்ட்ராங்கான தொரு சப்போர்ட் இருப்பதால், ஹைரிஸ்க் டிரேடர்கள் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே வியாபாரம் செய்வதற்காக இந்த பங்கை டிராக் செய்யலாம்.

1758 என்ற லெவலை ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸாக வைத்துக்கொண்டு வியாபாரம் செய்ய முயல்வதே சிறந்ததாக இருக்கும்.

எச்சரிக்கை: வாராந்தர அளவில் டெக்னிக்கல் அனாலிசிஸை உபயோகித்து டிரேடிங் செய்யும் டிரேடர்களுக்கான பகுதி இது.

பங்குகளில் டிரேடிங் செய்வது என்பது மிக அதிக அளவிலான பண ரீதியான ரிஸ்கைக் கொண்ட தாகும். வாசகர்கள் வர்த்தகம் செய்யும் முன் செபி பதிவு பெற்ற ஒரு இன்வெஸ்ட்மென்ட் அட்வைஸரிடம் கலந்தாலோசித்த பின்னரே வர்த்தகம் செய்ய வேண்டும்.

சரியான வாய்ப்புகளுக்காகக் காத்திருந்து அந்த வாய்ப்புகள் கிடைக்கும்போது குறைந்த எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸ்களுடன் மட்டுமே டிரேடிங் செய்ய வேண்டும்.

Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume based parameters and the data is compiled by Dr S Karthikeyan (an Independent Research Analyst herein after referred as ‘Research Analys t’). Dr S Karthikeyan is a SEBI registered Research Analyst under the SEBI (Research Analys ts) Regulations, 2014 with registration number INH200001384.

Analyst Certification and Disclosures under the provisions of SEBI (Research Analysts) Regulations 2014

General terms and conditions of the research report

For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the

assis tance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular inves tment/trading needs, objectives and financial circumstances.

One year Price his tory of the daily closing price of the securities covered in this section is available at http://www.nseindia.com/products/content/equities/equities/eq_security.htm (Choose the respective symbol) /name of company/time duration)