Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! முதலீட்டாளர்கள் கவனத்துக்கு..!

பங்குகள்... வாங்கலாம்...
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்...

B U Y & S E L L

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! முதலீட்டாளர்கள் கவனத்துக்கு..!

B U Y & S E L L

Published:Updated:
பங்குகள்... வாங்கலாம்...
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்...

இந்தியப் பங்குச் சந்தை முந்தைய வாரங்களில் ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றம் கண்டுவந்தது. கடந்த வாரம் சந்தையில் நிலவும் கவலையைக் கடப்பது போன்ற ஏற்றத்தைப் பற்றி நாம் பேசியிருந்தோம். இந்த வாரமும் இதே நிலைதான் தொடர்ந்து காணப்பட்டது. சந்தையின் ஏற்றத்தில் சந்தேகம் கொண்ட நபர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கிறது. இதனால் சந்தையில் உண்டாகும் ஒவ்வோர் இறக்கத்தின்போதும் லாங் பொசிஷன்களிலிருந்து வர்த்தகர்கள் வெளியேறினார்கள். இதனால் பங்குச் சந்தையில் மிதமான போக்கே நிலவுகிறது. இது கடந்த வாரம் புதன்கிழமையும் காணப்பட்டது. 15800 என்ற நிலையைக் கடந்த சந்தை திடீர் இறக்கத்துக்குள்ளானது. குறுகிய நேரத்திலேயே 200 புள்ளிகள் இறங்கியது. இது போன்ற நகர்வுகள் குறுகியகால வர்த்தகர்கள் பலவீனமான மனநிலையில் இருப்பதைக் காட்டுகிறது.

டாக்டர் 
சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

பெரும்பாலான வர்த்தகர்கள் அவர்களின் பொசிஷன் களைத் தக்கவைத்துக்கொள்வது மிகக் குறைவாகவே உள்ளது. அதே சமயம் வர்த்தக வால்யூம் நிலையாக அதிகரித்து வருகிறது. இது சந்தையின் ஸ்டாப்லாஸ் நிலைகளையும் உடனடியாகத் தூண்டிவிடுகிறது இது பங்கு விற்பனை அதிகமாகக் காரணமாகி விடுகிறது. ஆனாலும் பங்கு விற்பனை போக்கு தொடங்கும் வேகத்திலேயே நிறுத்தப்படுகிறது. காரணம், விற்பனை பெரும்பாலும் வர்த்தகர்களின் லாங் பொசிஷன்களாக உள்ளனவே தவிர, போர்ட்ஃபோலியோ ஹோல்டிங்கில் உள்ள பங்குகள் விற்பனைக்கு உள்ளாகவில்லை. மீண்டும் இறக்கத்தின்போது முதலீடுகள் உள்ளே வர பங்கு விற்பனை குறைந்துவிடுகிறது. இந்தச் சுழற்சிதான் தற்போது இந்தியப் சந்தையில் நிலவுகிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! முதலீட்டாளர்கள் கவனத்துக்கு..!

நான்காம் காலாண்டு நிதிநிலை முடிவுகள் வெளிவரும் காலம் கிட்டதட்ட நிறைவுக்கு வந்திருக்கிறது. பெரும்பாலான முன்னணி நிறுவனங்களின் முடிவுகள் வந்துவிட்டன. இவை சந்தையின் மொமென்டத்தை ஏற்றத்தின் போக்கில் தொடர்ந்து தக்கவைக்க காரணமாக இருந்த நிலையில், தற்போது மொமென் டம் குறைந்துள்ளது. இதனால் சந்தை அதன் உச்ச நிலைகளிலிருந்து இறங்கும் நிலைக்கு உள்ளாகியுள்ளது.

சந்தையில் சிறு முதலீட்டாளர்களின் ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சந்தையில் முதலீடுகள் தொடர்ந்து நிலையாக இருந்துவருகிறது எனவே, பங்குச் சந்தையின் போக்கு மேலும் சில காலத்துக்கு தற்போதுள்ள நிலையிலேயே தொடரலாம்.

வரும் வாரத்தைப் பொறுத்த வரை, 15600 என்ற நிலை வரை யிலான இறக்கங்களை முதலீடு செய்யப் பயன்படுத்தலாம். சந்தை ஏற்றத்தின் போக்கில் நகரும்பட்சத்தில் நிஃப்டி குறுகிய காலத்தில் 15875 வரை உயரலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! முதலீட்டாளர்கள் கவனத்துக்கு..!

நெட்வொர்க் 18 (NETWORK18)

தற்போதைய விலை ரூ.53.50

வாங்கலாம்

கடந்த சில மாதங்களாகவே இந்தப் பங்கின் வர்த்தகத்தில் பெரிய அளவில் வால்யூம் காணப் பட்டது. இது பங்கில் நல்ல ஏற்றத்துக்கான பிரேக் அவுட்டை உருவாக்கத் தயாராக இருந்தது. இது இந்த வாரத்தில் நடந்துள்ளது. இதில் உச்ச வால்யூம்களில் ஏற்றத்துக்கான முயற்சிகளை முன்பே எடுத்துள்ளது ஆனால், அவை வெற்றி அடையவில்லை. ஆனால், இந்த முறை நல்ல விலை நகர்வைப் பார்க்க முடி கிறது. இந்தப் போக்கு தொடரும் என்று எதிர்பார்க்க லாம். தற்போதைய விலையில் வாங்க லாம். ரூ.80 வரை உயர வாய்ப் புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.45-க் குக்கீழ் வைத்துக் கொள்ளவும்.

நிப்பான் அஸெட் மேனேஜ்மென்ட் இந்தியா (NAM-INDIA)

தற்போதைய விலை ரூ.378.95

வாங்கலாம்

சமீபத்தில் இதில் காணப்பட்ட நிலையான விலை ஏற்றம் அதன் 68% ரிட்ரேஸ்மென்ட் நிலைக்கு நகர்ந்தது. தற்போது மேலும் நகர்ந்து கடந்த மார்ச் 2020-ல் இருந்த வரம்பை எட்டியுள்ளது. இது முக்கிய ரெசிஸ்டன்ஸாக உள்ளது.

தற்போது ரீட்ரேஸ்மென்ட் நிலை ரூ.384-ல் 0.786 என்ற அளவில் உள்ளது. ஏற்றத்துக்கு சாதகமான மொமென்டமும் காணப் படுகிறது.

எனவே, இந்தப் பங்கு அதன் முந்தைய உச்சங்களை எல்லாம் சவாலுக்கு உட்படுத்தத் தயாராக உள்ளது. இந்த முறை 380-385-க்கு மேல் பிரேக் அவுட் ஆகி ஏற்றம் கண்டு ரூ.450 வரை உயரலாம். ஸ்டாப்லாஸ் ரூ.370-க்குக்கீழ் வைத்துக்கொள்ளவும்.

இந்தியாபுல்ஸ் ரியல் எஸ்டேட் (IBREALEST)

தற்போதைய விலை ரூ.112.95

வாங்கலாம்

சிறப்பான ஒருங்கிணைப்பும் பிரேக் அவுட் சாத்தியமும் சார்ட் பேட்டர்ன் களைக் கொண்ட ரியல் எஸ்டேட் பங்குகளை நாம் தொடர்ந்து கவனித்து வருகிறோம். அந்த வரிசையில் இந்தியா புல்ஸ் ரியல் எஸ்டேட் பங்கு உள்ளது. இதன் இறக்க நிலைகளில் நல்ல நீண்ட கன்சாலிடேஷன் உண்டாகியுள்ளது. வால்யூமும் புதிதாக அதிகரித்தி ருப்பதால் விலை நகர்வுகள் நன்றாக உள்ளன.

ரூ. 117-120 என்ற நிலையைக் கடந்து நகரும்போது இந்தப் பங்கு நன்றாக ஏற்றம் காணும். ஸ்டாப்லாஸ் ரூ. 102 உடன் தற்போதைய விலையிலும் இறக்கத்திலும் இந்தப் பங்கை வாங்கலாம்.

தமிழில்: திவ்யா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism