Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

வரும் வாரத்தில் இன்ஃப்ளேஷன் டேட்டா, மேனுஃபேக்சரிங் மற்றும் இண்டஸ்ட்ரீயல் புரடக்‌ஷன் டேட்டா போன்றவை வெளிவர இருக்கிறது. ஆர்.பி.ஐ வட்டிவிகிதம் குறித்து கடந்த வாரம் எடுத்த முடிவின் பிரதிபலிப்பைத் திங்களன்றும் சந்தையில் எதிர்பார்க்கலாம்.

Dr.எஸ்.கார்த்திகேயன்
Dr.எஸ்.கார்த்திகேயன்

வாராந்தர அளவீட்டில் 17226 மற்றும் 17064 என்ற அளவில் நல்லதொரு சப்போர்ட்டையும் 17479 மற்றும் 17570 என்ற லெவல்களில் ரெசிஸ்டன்ஸையும் கொண்டு நிஃப்டி செயல் படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 17455 என்ற லெவலைத் தாண்டி வால்யூமுடன் இரண்டுக்கும் மேற்பட்ட பாசிட்டிவ் குளோசிங் வந்தால் மட்டுமே 17570 என்ற லெவல் வரை நிஃப்டி செல்லும் வாய்ப்புள்ளது.

வரும் வாரத்தில் ஏற்ற இறக்கங்கள் அதிக மாக இருக்க வாய்ப்பு இருப்பதால், வியாபாரம் செய்யும் அளவை மிகவும் கட்டுப்பாட்டுக் குள்ளும் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸ்களுட னும் கொண்டு செயல்பட வேண்டும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

COCHIN SHIPYARD LIMITED (NSE Symbol: COCHINSHIP)

4.8.2022 பங்கு விலை: ரூ.332.80

வாங்கலாம்

327 என்ற லெவலில் சப்போர்ட்டை எடுத்து தற்சமயம் 332 என்ற லெவலில் இருக்கிறது. எம்.ஏ.சி.டி (9) டைவர்ஜன்ஸ் 1.23-ஆகவும், ரிலேட்டிவ் ஸ்ட்ரென்த் இண்டெக்ஸ் 67.11-ஆகவும் இருக்கிறது.

சந்தை பாசிட்டிவ்வாக இருக்கும்பட்சத்தில், 347 என்ற எல்லை வரை சென்று திரும்பும் வாய்ப்பிருக்கிறது. ஹைரிஸ்க் எடுப்பவர்கள் மட்டும் 326 என்ற லெவலை ஸ்டாப்லாஸாகக் கொண்டு டிராக் செய்யலாம். 326 என்ற லெவலைத் தாண்டி இறங்கினால், 307 வரை சென்று திரும்ப வாய்ப்பு இருப்பதால் ஸ்ட்ரிக்ட் டான ஸ்டாப் லாஸாக 326 என்பதைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

DHANUKA AGRITECH LIMITED (NSE Symbol: DHANUKA)

4.8.2022 பங்கு விலை: ரூ.693.80

வாங்கலாம்

எம்.ஏ.சி.டி (9) டைவர்ஜன்ஸ் 0.67 என்ற அளவி லும் ஆர்.எஸ்.ஐ 52.99 என்ற அளவிலும் இருக்கிறது. 684 என்ற லெவலுக்குக் கீழே வால்யூமுடன் இறங்கினால் மட்டும் இந்தப் பங்கை 667 என்ற லெவலில் சப்போர்ட் எடுக்க வாய்ப்புள்ளது. அது போன்று சப்போர்ட் எடுக்கும்பட்சத்தில், 652 என்ற ஸ்டாப்லாஸுடன் ஹைரிஸ்க் எடுக்கும் திறன் கொண்ட டிரேடர்கள் டிராக் செய்யலாம்.

667-ல் சப்போர்ட்டை எடுத்து மீண்டும் வால்யூமுடன் ஏறத் தொடங்கினால் 705 என்ற லெவல் வரை செல்ல வாய்ப்பு இருந்தாலுமே, 700 என்ற லெவலைத் தாண்டுவது சற்று சிரமமாக இருக்கவே வாய்ப்புள்ளது. இதை மனதில் கொண்டே டிரேட் செய்ய வேண்டியிருக்கும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

UPL LIMITED (NSE Symbol: UPL)

4.8.2022 பங்கு விலை: ரூ.731

வாங்கலாம்

சமீபத்தில் 780 வரை சென்று வேகமாக இறங்கிவரும் இந்தப் பங்கானது 711 என்ற லெவலில் சராசரியாக நடக்கும் வால்யூமை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான வால்யூமுடன்கூடிய சப்போர்ட் எடுத்து ஏறத் தொடங்கினால் மட்டுமே மீண்டும் 753 என்ற லெவல் வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.

இறக்கத்திலும் ஏற்றத்திலும் வால்யூம் கணிசமாகக் குறையும் பட்சத்தில் இது நடக்க வாய்ப் பில்லை. திடீர் இறக்கத்தில் 711 என்ற லெவலைத் தாண்டி இறங்கினால் அடுத்த சப்போர்ட் டானது 669-ல் மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளபடியால் அது போன்ற சூழ்நிலையில் இந்தப் பங்கில் வியாபாரம் செய்வதைத் தவிர்ப்பதே நல்லது. எனவே, ஹைரிஸ்க் டிரேடர்கள் மட்டும் 704 என்ற லெவலை ஸ்ட்ரிக்ட் டான ஸ்டாப்லாஸாகக் கொண்டு இந்தப் பங்கை டிராக் செய்யலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

VRL LOGISTICS LIMITED (NSE Symbol: VRLLOG)

4.8.2022 பங்கு விலை: ரூ.607.90

வாங்கலாம்

எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் -8.90 என்ற அளவிலும், ஆர்.எஸ்.ஐ 44.49 என்ற அளவிலும் உள்ளது. 599 என்ற லெவலில் சப்போர்ட் எடுத்த இந்தப் பங்கு, 625 என்ற லெவலைத் தாண்ட சிரமப்படுகிறது. இந்த லெவலை வால்யூமுடன் தாண்டி நிஃப்டி யின் ஏற்றமும் தொடர்ந்தால், மீண்டும் இந்தப் பங்கு 634 மற்றும் 646 என்ற லெவல்கள் வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.

இறக்கம் தொடர்ந்து மீண்டும் 599 என்ற லெவலைத் தாண்டி வால்யூமுடன் இறங்கினால், 566-ல் மட்டுமே நல்லதொரு சப் போர்ட் கிடைக்க வாய்ப்பிருப் பதால், ஹைரிஸ்க் டிரேடர்கள் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே வியாபாரம் செய்வதற்காக இந்த பங்கை டிராக் செய்யலாம். 585 என்ற லெவலை ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸாகக் கொண்டு வியாபாரம் செய்வதே சிறந்த ஸ்ட்ராட்டஜியாக இருக்கும்.

எச்சரிக்கை: வாராந்தர அளவில் டெக்னிக்கல் அனாலிசிஸை உபயோகித்து டிரேடிங் செய்யும் டிரேடர் களுக்கான பகுதி இது. பங்குகளில் டிரேடிங் செய்வது என்பது மிக அதிக அளவிலான பண ரீதியான ரிஸ்க்கைக் கொண்டது. வாசகர்கள் வர்த்தகம் செய்வதற்கு முன்னால் செபி பதிவு பெற்ற இன்வெஸ்ட்மென்ட் அட்வைஸரிடம் கலந்தாலோசித்த பின்னரே வர்த்தகம் செய்ய வேண்டும்.