பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

திங்களன்று 17401 என்ற அளவில் ஆரம்பமான நிஃப்டி, 17359 மற்றும் 17719 என்ற எல்லைகளைத் தொட்டுவிட்டு 17659 என்ற அளவில் வியாழனன்று முடிவடைந்து இருந்தது. வரும் வாரத்தில் ஹோல்சேல் ப்ரைஸ் இண்டெக்ஸ் சார்ந்த இன்ஃப்ளேஷன் டேட்டா மற்றும் பேலன்ஸ் ஆஃப் டிரேட் போன்ற டேட்டாக்கள் வெளிவர இருக்கிறது.

Dr.எஸ்.கார்த்திகேயன்
Dr.எஸ்.கார்த்திகேயன்

வாராந்தர அளவீட்டில் 17408 மற்றும் 17281 என்ற அளவில் நல்லதொரு சப்போர்ட்டையும் 17772 மற்றும் 17795 என்ற லெவல்களில் ரெசிஸ்டன்ஸையும் கொண்டு நிஃப்டி செயல் படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

ஏற்றம் தொடர்ந்தாலுமே 18129 என்ற லெவலில் நல்லதொரு ரெசிஸ்டன்ஸை நிஃப்டி சந்திக்க வாய்ப்பிருப்பதால், டிரேடர்கள் அதற் கேற்றாற்போல் தங்களுடைய டிரேடிங் திட்டங்களை வடிவமைத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

CESC Limited (NSE Symbol: CESC)

11.08.2022 விலை: ரூ.79.30

வாங்கலாம்

74 என்ற லெவலில் சப்போர்ட்டை எடுத்து தற்சமயம் 79.30 என்ற லெவலில் இருக்கிறது. எம்.ஏ.சி.டி (9) டைவர்ஜன்ஸ் 0.49-ஆகவும், ரிலேட்டிவ் ஸ்ட்ரென்த் இண்டெக்ஸ் 68.29- ஆகவும் இருக்கிறது. சந்தை பாசிட்டிவ்வாக இருக்கும்பட்சத்தில், 90 என்ற எல்லை வரை சென்று திரும்புவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

ஹைரிஸ்க் எடுக்கும் திறன் கொண்ட டிரேடர்கள் மட்டும் இந்த நிறுவனத்தை 76 என்ற லெவலை ஸ்டாப்லாஸாக வைத்துக் கொண்டு டிராக் செய்யலாம். 76 என்ற லெவலைத் தாண்டி இறங்கினால், 67 வரை சென்று திரும்ப வாய்ப்பு இருப்பதால், ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸாக 76 என்பதைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

Affle (India) Limited (NSE Symbol: AFFLE)

11.08.2022 விலை: ரூ.1185.55

வாங்கலாம்

எம்.ஏ.சி.டி (9) டைவர்ஜன்ஸ் 4.62 என்ற அளவிலும் ஆர்.எஸ்.ஐ 60.68 என்ற அளவிலும் இருக்கிறது. 1150 என்ற லெவலுக்குக்கீழே வால்யூமுடன் இறங்கினால், இந்தப் பங்கு 1101 என்ற லெவலில் சப்போர்ட் எடுக்க வாய்ப்புள்ளது. அது போன்று 1101 என்ற லெவலில் சப்போர்ட் எடுக்கும்பட்சத்தில், 1093 என்ற ஸ்டாப்லாஸுடன் ஹைரிஸ்க் எடுக்கும் திறன் கொண்ட டிரேடர்கள் டிராக் செய்யலாம்.

1101-ல் சப்போர்ட்டை எடுத்து மீண்டும் வால்யூமுடன் ஏறத் தொடங்கினால், 1290 என்ற லெவல் வரை சென்று திரும்ப வாய்ப்பு இருக்கிறது. மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இந்தப் பங்க்கில் வியாபாரம் செய்ய முயல்வதே சிறந்த ஒரு ஸ்ட்ராட்டஜியாக இருக்கும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

Orient Cement Limited (NSE Symbol: ORIENTCEM)

11.08.2022 விலை: ரூ.114.85

வாங்கலாம்

எம்.ஏ.சி.டி (9) டைவர்ஜன்ஸ் 0.04 என்ற அளவிலும் ஆர்.எஸ்.ஐ 48.05 என்ற அளவிலும் இருக்கிறது. 110 என்ற லெவலில் வால்யூமுடன் கூடிய சப்போர்ட் எடுத்தால் 119 வரையில் சென்று திரும்ப வாய்ப்புள்ளது.

110 என்ற லெவலுக்குக்கீழ் இறங்கினால் 96 என்ற லெவலில் மட்டுமே நல்லதொரு டெக்னிக் கல் சப்போர்ட் இருப்பதால், ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப் லாஸு டனும் குறைந்த எண்ணிக்கை யிலும் மட்டுமே டிரேடர்கள் வியாபாரம் செய்வது நல்லது. ஹைரிஸ்க் டிரேடர்கள் மட்டும் இந்தப் பங்கில் வர்த்தகம் செய்யும் நோக்கத்துடன் டிராக் செய்யலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

Power Grid Corporation of India Limited (NSE Symbol: POWERGRID)

11.08.2022 விலை: ரூ.222.85

வாங்கலாம்

எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் -1.07 என்ற அளவிலும், ஆர்.எஸ்.ஐ 55.78 என்ற அளவிலும் உள்ளது. 196 என்ற லெவலில் சப்போர்ட்டை எடுத்த இந்தப் பங்கால் 238 என்ற லெவலைத் தாண்ட முடியவில்லை. சந்தை யின் ஏற்றம் தொடர்ந்து இந்தப் பங்கானது 220 என்ற லெவலில் இருந்து மீண்டும் வால்யூமுடன் ஏறுகின்ற பட்சத்தில் 231 என்ற லெவல் வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.

இறக்கம் தொடர்ந்து 215 என்ற லெவலைத் தாண்டி வால்யூமுடன் இறங்கினால் 196-ல் மட்டுமே நல்லதொரு சப்போர்ட் கிடைக்க வாய்ப்பு இருப்பதால், ஹைரிஸ்க் டிரேடர்கள் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் வியாபாரம் செய்வதற்காக இந்த பங்கை டிராக் செய்யலாம்.

எச்சரிக்கை: வாராந்தர அளவில் டெக்னிக்கல் அனாலிசிஸை உபயோகித்து டிரேடிங் செய்யும் டிரேடர்களுக்கான பகுதி இது. பங்குகளில் டிரேடிங் செய்வது என்பது மிக அதிக அளவிலான பண ரீதியான ரிஸ்க்கைக் கொண்ட ஒரு விஷயமாகும். வாசகர்கள் வர்த்தகம் செய்வதற்கு முன்னால் செபி பதிவு பெற்ற இன்வெஸ்ட்மென்ட் அட்வைஸர் ஒருவரிடம் கலந்தாலோசித்த பின்னரே வர்த்தகம் செய்ய வெண்டும். சரியான வாய்ப்புகளுக்காகக் காத்திருந்து அந்த வாய்ப்புகள் கிடைக்கும்போது குறைந்த எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸ்களுடன் மட்டுமே டிரேடிங் செய்ய வேண்டும்.