Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

செவ்வாய்க்கிழமை அன்று 17797-ல் ஆரம்பித்த நிஃப்டி, 17764 மற்றும் 17968 என்ற எல்லைகளைத் தொட்டுவிட்டு, 17956 என்ற அளவில் வியாழனன்று முடிந்தது.

Dr.எஸ்.கார்த்திகேயன்
Dr.எஸ்.கார்த்திகேயன்

பெரிய அளவிலான திட்டமிடப்பட்ட முக்கியமான டேட்டா வெளியீடுகள் ஏதும் இல்லாத வாரத்தை எதிர்கொள்ளப் போகி றோம். எனவே, செய்திகளும் நிகழ்வுகளுமே சந்தையின் போக்கை பெரும்பாலும் நிர்ணயிப் பதற்கான வாய்ப்புள்ளது.

வாராந்தர அளவீட்டில் 17703 மற்றும் 17622 என்ற அளவில் நல்லதொரு சப்போர்ட்டையும் 18093 மற்றும் 18170 என்ற லெவல்களில் ரெசிஸ் டன்ஸையும் கொண்டு நிஃப்டி செயல்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

ஏற்றம் தொடர்ந்தாலுமே வால்யூமுடன் கூடிய வேகமான ஏற்றம் தொடராவிட்டால் 18110 என்ற லெவலில் புதியதொரு ரெசிஸ் டென்ஸை நிஃப்டி சந்திக்க வாய்ப்பிருப்பதால், டிரேடர்கள் அதற்கேற்றாற்போல் தங்களுடைய டிரேடிங் திட்டங்களை அமைத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ZENSAR TECHNOLOGIES LIMITED (NSE Symbol: ZENSARTECH)

18.08.2022 விலை: ரூ.239.70

வாங்கலாம்

எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் 0.25 என்ற அளவிலும், ஆர்.எஸ்.ஐ 42.54 என்ற அளவிலும் உள்ளது. 228 என்ற லெவலில் சப்போர்ட்டை எடுத்த இந்தப் பங்கு, 243 என்ற உடனடி ரெசிஸ்டன்ஸ் லெவலைத் தாண்டுவதற்கு சிரமப்படும். அதன்பின் வால்யூமுடன் கூடிய ஏற்றம் ஒட்டுமொத்த சந்தையில் வந்து, அதைத் தொடர்ந்து இந்தப் பங்கானது 243 என்ற லெவலில் இருந்து மீண்டும் வால்யூமுடன் ஏறுகிறபட்சத்தில் 261 என்ற லெவல் வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.

இறக்கம் தொடர்ந்து 233 என்ற லெவலைத் தாண்டி வால்யூமுடன் இறங்கினால், 224-ல் மட்டுமே நல்லதொரு சப்போர்ட் கிடைக்க வாய்ப்பிருப்பதால், அதிக அளவிலான ரிஸ்க் எடுக்கும் திறன்கொண்ட டிரேடர்கள் மட்டும் சிறிய எண்ணிக்கையில் டிரேடிங் செய்வதற்காக இந்த பங்கை டிராக் செய்யலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

KSB LIMITED (NSE Symbol: KSB)

18.08.2022 விலை: ரூ.1768.00

வாங்கலாம்

எம்.ஏ.சி.டி (9) டைவர்ஜன்ஸ் 29.42 என்ற அளவிலும், ஆர்.எஸ்.ஐ 79.43 என்ற அளவிலும் ரேட் ஆஃப் சேஞ்ச் 24.30 என்ற அளவிலும் இருக்கிறது. 1731 என்ற லெவலுக்குக்கீழே வால்யூமுடன் இறங்கினால், இந்தப் பங்கு 1628 என்ற லெவலில் மட்டுமே சப்போர்ட் எடுக்க வாய்ப்புள்ளது. அது போன்று 1671 என்ற லெவலில் வால்யூமுடன்கூடிய சப்போர்ட் எடுக்கும் பட்சத்தில் 1895 என்ற லெவல் வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.

சராசரி வால்யூம் குறைவாகவே நடக்கும் பங்கு இது என்பதால், ஹைரிஸ்க் எடுக்கும் திறன் கொண்ட டிரேடர்கள் மட்டுமே இந்தப் பங்கை டிராக் செய்யலாம். மிகச் சிறிய எண்ணிக்கையில் இந்தப் பங்கில் வியாபாரம் செய்வதே சரி!

CITY UNION BANK LIMITED (NSE Symbol: CUB)

18.08.2022 விலை: ரூ.179.00

வாங்கலாம்

172 என்ற லெவலில் சப்போர்ட் எடுத்து தற்சமயம் 179 என்ற லெவலில் இருக்கிறது. எம்.ஏ.சி.டி (9) டைவர்ஜன்ஸ் 0.88-ஆகவும், ரிலேட்டிவ் ஸ்ட்ரென்த் இண்டெக்ஸ் 77.73- ஆகவும் இருக்கிறது.

சந்தை பாசிட்டிவ்வாக இருக்கும்பட்சத்தில், 184 என்ற எல்லை வரை சென்று திரும்பி வருவதற்கான வாய்ப்பு இருக் கிறது. கொஞ்சம் அதிக அள விலான ரிஸ்க் எடுக்கும் திறன் கொண்ட டிரேடர்கள் மட்டும் இந்த நிறுவனத்தை 177 என்ற லெவலை ஸ்டாப்லாஸாக வைத்துக்கொண்டு டிராக் செய்யலாம். 177 என்ற லெவலைத் தாண்டி இறங்கினால் 173 வரை சென்று திரும்ப வாய்ப்பிருப் பதால் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப் லாஸாக 175 என்பதை அவசியம் பின்பற்ற வேண்டும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ICICI BANK LIMITED (NSE Symbol: ICICIBANK)

18.08.2022 விலை: ரூ.886.20

வாங்கலாம்

எம்.ஏ.சி.டி (9) டைவர்ஜன்ஸ் 3.99 என்ற அளவிலும் ஆர்.எஸ்.ஐ 84.33 என்ற அளவிலும் இருக்கிறது. 873 என்ற லெவலில் வால்யூமுடன்கூடிய சப்போர்ட் எடுத்தால், 897 வரையில் சென்று திரும்ப வாய்ப்புள்ளது. 873 என்ற லெவலுக்குக்கீழ் 869 என்ற லெவலில் மட்டுமே நல்லதொரு டெக்னிக்கல் சப்போர்ட் இருப்ப தால், ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப் லாஸுடனும் மிக மிகக் குறைந்த அளவிலும் மட்டுமே டிரேடர்கள் வியாபாரம் செய்வது நல்லது. ஹைரிஸ்க் எடுக்க முடிந்த மற்றும் விரும்பும் டிரேடர்கள் மட்டும் இந்தப் பங்கில் வர்த்தகம் செய்யும் நோக்கத்துடன் டிராக் செய்யலாம்.

எச்சரிக்கை: வாராந்தர அளவில் டெக்னிக்கல் அனாலிசிஸை உபயோகித்து டிரேடிங் செய்யும் டிரேடர்களுக்கான பகுதி இது. பங்குகளில் டிரேடிங் செய்வது மிக அதிக அளவிலான பண ரீதியான ரிஸ்க்கைக் கொண்ட ஒரு விஷயமாகும்.

வாசகர்கள் வர்த்தகம் செய்வதற்குமுன் செபி பதிவு பெற்ற இன்வெஸ்ட்மென்ட் அட்வைஸரிடம் கலந்தா லோசித்த பின்னரே வர்த்தகம் செய்ய வேண்டும். சரியான வாய்ப்புகளுக்காகக் காத்திருந்து அந்த வாய்ப்புகள் கிடைக்கும்போது குறைந்த எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்டான ஸ்டாப்லாஸ்களுடன் மட்டுமே டிரேடிங் செய்ய வேண்டும்.