Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

திங்களன்று 17682-ல் ஆரம்பித்த நிஃப்டி, 17345 மற்றும் 17726 என்ற எல்லைகளைத் தொட்டுவிட்டு, வியாழக்கிழமை 17522-ல் குளோஸானது.

Dr.எஸ்.கார்த்திகேயன்
Dr.எஸ்.கார்த்திகேயன்

வரும் வாரத்தில் நான்கு டிரேடிங் தினங்களே இருக்கின்றன. மாதாந்தர எஃப்&ஓ எக்ஸ் பைரியும் வரும் வாரத்தில் நடைபெற உள்ளது. ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் மற்றும் மேனுஃபாக் சரிங் பி.எம்.ஐ டேட்டாக்கள் வரும் வாரத்தில் வெளிவர இருக்கிறது.

வாராந்தர அளவீட்டில் 17403 மற்றும் 17202 என்ற அளவில் நல்லதொரு சப்போர்ட்டையும் 17748 மற்றும் 17892 என்ற லெவல்களில் ரெசிஸ்டன்ஸையும் கொண்டு நிஃப்டி செயல் படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

நிஃப்டி அதிக அளவிலான ஏற்ற இறக்கங் களை சந்திக்க வாய்ப்பிருப்பதால், டிரேடர்கள் தங்களுடைய வியாபாரத்தின் அளவைக் கணிசமாகக் குறைத்துக்கொள்வதே நல்லது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

KNR CONSTRUCTIONS LIMITED (KNRCON)

25.08.2022 விலை: ரூ.258.05

வாங்கலாம்

எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் -1.75 என்ற அளவிலும், ஆர்.எஸ்.ஐ 49.43 என்ற அளவிலும் உள்ளது. ஜூன் மாதத்தில் 52 வார குறைந்த விலையைச் சந்தித்த இந்தப் பங்கு, ஒட்டுமொத்த சந்தையும் வால்யூமுடன்கூடிய ஏற்றத்தைச் சந்திக்கும்பட்சத்தில் 269 என்ற லெவல் வரை டெக்னிக்கலாகச் சென்று திரும்ப வாய்ப் புள்ளது.

இறக்கம் வந்தால், 244 என்ற லெவலிலேயே சப்போர்ட் இருப்பதால், டிரேடர்கள் தங்களுடைய ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ற ஸ்டாப்லாஸ்களுடனும் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலும் மட்டுமே வியாபாரம் செய்ய முயற்சி செய்ய வேண்டும்.

AMARA RAJA BATTERIES LIMITED (AMARAJABAT)

25.08.2022 விலை: ரூ.517.90

வாங்கலாம்

494 என்ற லெவலில் சப்போர்ட்டை எடுத்து தற்சமயம் 517.90 என்ற லெவலில் இருக்கிறது. எம்.ஏ.சி.டி (9) டைவர்ஜன்ஸ் -0.67 ஆகவும், ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் 57.22-ஆகவும் இருக்கிறது.

சந்தை பாசிட்டிவ்வாக இருக்கும்பட்சத்தில் 526 என்ற எல்லை வரை போய்விட்டு திரும்பி வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. கொஞ்சம் அதிக அளவிலான ரிஸ்க்கை எடுக்கும் திறன் கொண்ட டிரேடர்கள் மட்டும் இந்தப் பங்கை 508 என்ற லெவலை ஸ்டாப்லாஸாக வைத்துக் கொண்டு டிராக் செய்யலாம். 508 என்ற லெவலைத் தாண்டி இறங்கினால் 492 வரை சென்று திரும்ப வாய்ப்பிருப்பதால், ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப் லாஸாக 508 என்பதை அவசியம் பின்பற்ற வேண்டும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ADITYA BIRLA FASHION AND RETAIL LIMITED (ABFRL)

25.08.2022 விலை: ரூ.298.00

வாங்கலாம்

எம்.ஏ.சி.டி (9) டைவர்ஜன்ஸ் -0.01 என்ற அளவிலும், ஆர்.எஸ்.ஐ 64.86 என்ற அளவிலும் இருக்கிறது. வால்யூமுடன்கூடிய ஏற்றம் தொடர்ந்தால் 302 மற்றும் 307 என்ற லெவல்கள் வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.

281 மற்றும் 268 என்ற லெவல் களில் மட்டுமே டெக்னிக்கல் சப்போர்ட் கிடைக்க வாய்ப்பு இருப்பதால், மிக அதிக அளவிலான ரிஸ்க் எடுக்கும் திறன் கொண்ட டிரேடர்கள் மட்டுமே இந்தப் பங்கில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் மட்டும் டிரேடிங் செய்ய முயற்சி செய்யலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

JUBILANT FOODWORKS LIMITED (JUBLFOOD)

25.08.2022 விலை: ரூ.585.00

வாங்கலாம்

எம்.ஏ.சி.டி (9) டைவர்ஜன்ஸ் -1.00 என்ற அளவிலும், ஆர்.எஸ்.ஐ 51.57 என்ற அளவிலும் ரேட் ஆஃப் சேஞ்ச் 1.73 என்ற அளவிலும் இருக்கிறது. 596 என்ற லெவலைத் தாண்டி வால்யூ முடன் ஏறினால், 612 என்ற இடத்தில் ரெசிஸ்டன்ஸை சந்திக்க வாய்ப்புள்ளது.

560 என்ற லெவலுக்குக் கீழே வால்யூமுடன் இறங்கினால் இந்தப் பங்கு 545 என்ற லெவலில் மட்டுமே சப்போர்ட் எடுக்க வாய்ப்புள்ளது என்பதால், மிகவும் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் மட்டுமே டிரேடர்கள் வியாபாரம் செய்ய வேண்டும்.

எச்சரிக்கை: வாராந்தர அளவில் டெக்னிக்கல் அனா லிசிஸை உபயோகித்து டிரேடிங் செய்யும் டிரேடர்களுக்கான பகுதி இது.

பங்குகளில் டிரேடிங் செய்வது என்பது மிக அதிக அளவிலான பண ரீதியான ரிஸ்க்கைக் கொண்ட ஒரு விஷயமாகும்.

வாசகர்கள் வர்த்தகம் செய் வதற்கு முன்னால் ஒரு செபி பதிவு பெற்ற இன்வெஸ்ட்மென்ட் அட்வைஸரிடம் கலந்தாலோசித்த பின்னரே வர்த்தகம் செய்ய வேண்டும்.

சரியான வாய்ப்புகளுக்காகக் காத்திருந்து அந்த வாய்ப்புகள் கிடைக்கும்போது குறைந்த எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸ்களுடன் மட்டுமே டிரேடிங் செய்ய வேண்டும்.