Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

திங்களன்று 17188-ல் ஆரம்பித்த நிஃப்டி, 17166 மற்றும் 17777 என்ற எல்லைகளைத் தொட்டுவிட்டு வியாழன் அன்று 17542-ல் குளோஸானது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

சர்வீசஸ் பி.எம்.ஐ மற்றும் காம்ப்போசைட் பி.எம்.ஐ டேட்டாக்கள் வரும் வாரத்தில் வெளி வர இருக்கின்றன. வாராந்தர அளவீட்டில் 17358 மற்றும் 17046 என்ற அளவில் நல்லதொரு சப்போர்ட்டையும் 17646 மற்றும் 17891 என்ற லெவல்களில் ரெசிஸ்டன்ஸையும் கொண்டு நிஃப்டி செயல்பட வாய்ப்புகள் அதிகம்.

நிஃப்டியின் போக்கில் அடிக்கடி திடீர் திருப்பங்கள் வர வாய்ப்பிருப்பதால், மிகவும் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் மட்டுமே டிரேடர்கள் வர்த்தகம் செய்ய முயற்சி செய்யலாம். மேலும், உடனுக்குடன் லாபத்தை புக் செய்யும் அளவிலான வியாபாரத்தைச் செய்துகொள்ள முயல்வதே சரியாக இருக்கும்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

GRASIM INDUSTRIES LIMITED (GRASIM)

01.09.2022 விலை: ரூ.1,681.35

வாங்கலாம்

1560 என்ற லெவலில் சப்போர்ட்டை எடுத்து, தற்சமயம் 1681 என்ற லெவலில் இருக்கிறது. எம்.ஏ.சி.டி (9) டைவர்ஜன்ஸ் 0.87- ஆகவும், ரேட் ஆஃப் சேஞ்ச் 4.91-ஆகவும் இருக் கிறது. சந்தை பாசிட்டிவ்வாக இருக்கும். பட்சத்தில், 1739 மற்றும் 1769 என்ற எல்லை வரை போய்விட்டு, திரும்பி வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. நிஃப்டியின் டிரெண்டைத் தொடர்ந்து டிராக் செய்து அதையொட்டியே இந்தப் பங்கில் டிரேடர்கள் வர்த்தகம் செய்யலாம்.

கொஞ்சம் அதிக அளவிலான ரிஸ்க்கை எடுக்கும் திறன் கொண்ட டிரேடர்கள் மட்டும் இந்த நிறுவனத்தை 1640 என்ற லெவலை ஸ்டாப்லாஸாக வைத்துக்கொண்டு டிராக் செய்யலாம். 1640 என்ற லெவலைத் தாண்டி இறங்கினால், 1554 வரை சென்று திரும்ப வாய்ப்பு இருப்பதால், ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப் லாஸுடன் மட்டுமே டிரேடிங் செய்யலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ELECON ENGINEERING COMPANY LIMITED (ELECON)

01.09.2022 விலை: ரூ.371.00

வாங்கலாம்

எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் 0.11 என்ற அளவிலும், ஆர்.எஸ்.ஐ 64.52 என்ற அளவிலும் உள்ளது. 330 என்ற லெவலில் சப்போர்ட் எடுத்த இந்தப் பங்கு 394 வரை சமீபத்தில் சென்று திரும்பியது. இந்தப் பங்கு இறக்கத்தைச் சந்தித்து 365 என்ற லெவலில் மீண்டும் சப்போர்ட் எடுத்து, வால்யூமுடன்கூடிய ஏற்றத்தை சந்தித்தால், 396 என்ற லெவலை நோக்கி மீண்டும் செல்வதற்கான வாய்ப்புள்ளது போன்ற சூழலே நிலவுகிறது.

சராசரி வால்யூம் அதிகமாக இருக்கிறதா என்பது குறித்து டிரேடர்கள் தொடர்ந்து கவனம் வைத்து செயல்பட வேண்டி இருக்கும். 355 என்ற லெவலுக்குக் கீழே இறக்கம் வந்தால், 334 என்ற லெவலிலேயே சப்போர்ட் இருப்பதால், டிரேடர் கள் தங்களுடைய ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ற ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப் லாஸ்களைக் கொண்டே வியாபாரம் செய்ய முயல வேண்டும்.

சந்தையின் ஒட்டுமொத்த டிரெண்ட் நெகட்டிவ்வாக இருந்தால், இந்தப் பங்கில் வர்த்தகம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

HINDUSTAN AERONAUTICS LIMITED (HAL)

01.09.2022 விலை: ரூ.2,306.00

வாங்கலாம்

எம்.ஏ.சி.டி (9) டைவர்ஜன்ஸ் -5.91 என்ற அளவிலும், ஆர்.எஸ்.ஐ 71.96 என்ற அளவிலும், செய்கின் மணி ஃப்ளோ (21) 0.14 என்ற அளவிலும் இருக்கிறது.வால்யூமுடன்கூடிய ஏற்றம் தொடர்ந்தால், 2335 மற்றும் 2374 என்ற லெவல்கள் வரை சென்று திரும்புவதற்கான வாய்ப்புள்ளது.

டெக்னிக்கல் சப்போர்ட்- ஆனது 2235 மற்றும் 2175 என்ற லெவல்களில் மட்டுமே இருக் கிறது என்பதை டிரேடர்கள் புரிந்துகொண்டு அதற்கேற்ப தங்களுடைய ஸ்டாப்லாஸ்களை அமைத்துக்கொண்டு டிரேடிங் செய்வது குறித்து பரிசீலிக்கலாம். அதிக அளவிலான ரிஸ்க் எடுக்கும் திறன் கொண்ட டிரேடர்கள் மட்டுமே இந்தப் பங்கில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் டிரேடிங் செய்ய முயலலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

MOTHERSON SUMI WIRING INDIA LIMITED (MSUMI)

01.09.2022 விலை ரூ.79.70

வாங்கலாம்

எம்.ஏ.சி.டி (9) டைவர்ஜன்ஸ் -0.14 என்ற அளவிலும், செய்கின் மணி ப்ளோ -0.22 என்ற அளவிலும், ரிலேட்டிவ் ஸ்ட்ரென்த் இண்டெக்ஸ் 60.30 என்ற அளவிலும், ரேட் ஆஃப் சேஞ்ச் (12) 3.30 என்ற அளவிலும் இருக்கிறது. 83 என்ற லெவலைத் தாண்டி சராசரிக்கும் அதிகமான வால்யூமுடன் ஏறினால், 92 என்ற இடத்தில் ரெசிஸ்டன்ஸைச் சந்திக்க வாய்ப்புள்ளது. 77 என்ற லெவலுக்குக் கீழே வால்யூமுடன் இறங்கினால், இந்தப் பங்கு 68 என்ற லெவலில் மட்டுமே நல்லதொரு சப்போர்ட் எடுக்க வாய்ப்புள்ளது என்பதால், மிகவும் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் வியாபாரம் செய்ய வேண்டும்.

எச்சரிக்கை: வாராந்தர அளவில் டெக்னிக்கல் அனாலிசிஸை உபயோகித்து டிரேடிங் செய்யும் டிரேடர்களுக்கான பகுதி இது. பங்குகளில் டிரேடிங் செய்வது என்பது மிக அதிக அளவிலான பண ரீதியான ரிஸ்க்கைக் கொண்டதாகும். வாசகர்கள் வர்த்தகம் செய்யும்முன் செபி பதிவுபெற்ற இன்வெஸ்ட்மென்ட் அட்வைஸர் ஒருவரிடம் கலந்தாலோசித்த பின்பு வர்த்தகம் செய்ய வேண்டும்.