Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

திங்களன்று 17546-ல் ஆரம்பித்த நிஃப்டி, 17484 மற்றும் 17807 என்ற எல்லைகளைத் தொட்டுவிட்டு வியாழனன்று 17798-ல் குளோஸானது. இண்டஸ்ட்ரீயல் புரொடக்‌ ஷன், மேனுஃபாக்சரிங் புரொடக்‌ஷன், இன்ஃப்ளேஷன் போன்ற டேட்டாக்கள் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன.

Dr.எஸ்.கார்த்திகேயன்
Dr.எஸ்.கார்த்திகேயன்

வாராந்தர அளவீட்டில் 17626 மற்றும் 17484 என்ற அளவில் சிறியதொரு சப்போர்ட்டையும் 17920 மற்றும் 18025 என்ற லெவல்களில் ரெசிஸ்டன்ஸையும் கொண்டு நிஃப்டி செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் மட்டுமே டிரேடர்கள் வர்த்தகம் செய்ய முயல்வதே, வரும் வாரத்துக்கான சிறந்த ஸ்ட்ராட்டஜியாக இருக்கும்.

The Indian Hotels Company Limited (NSE Symbol: INDHOTEL)

08.09.2022 விலை: ரூ.309.80

வாங்கலாம்

263 என்ற லெவலில் சப்போர்ட் எடுத்த இந்தப் பங்கு 277 என்ற ரெசிஸ்டன்ஸைக் குறுகிய காலத்தில் கடந்து தற்போது 309 என்கிற லெவலில் இருக்கிறது. எம்.ஏ.சி.டி (12, 26) 11.9 என்ற அளவிலும், எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) 2.32 என்ற அளவிலும், கமாடிட்டி சேனல் இண்டெக்ஸ் (14) 130.11 என்ற அளவிலும் இருக்கின்றன. ஒட்டுமொத்த சந்தையும் ஏற்றம் காணும்பட்சத்தில் 315 மற்றும் 323 என்ற லெவல்கள் வரை சென்று திரும்பலாம்.

நிஃப்டி வேகமான ஏற்றத்தைச் சந்தித்தால், இந்தப் பங்கில் சட்டென்று இதுபோன்ற மூவ்கள் நடந்து முடிந்துவிட வாய்ப்புள்ளதால், ஹைரிஸ்க் எடுக்கக்கூடிய திறன்கொண்ட டிரேடர்கள் மட்டும் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் லாங் சைட் வியாபாரம் செய்வதற்கு இந்தப் பங்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளலாம். ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

Bharti Airtel Limited (NSE Symbol: BHARTIARTL)

08.09.2022 விலை: ரூ.769.30

வாங்கலாம்

எம்.ஏ.சி.டி (12,26) 13.96 என்ற அளவிலும் ஆர்.எஸ்.ஐ 65.74 என்ற அளவிலும் இருக்கிறது. 715-ல் சப்போர்ட் எடுத்த இந்தப் பங்கு 745 என்ற ரெசிஸ்டன்ஸ் லெவலைத் தாண்டி தற்சமயம் 769 என்ற லெவலில் வர்த்தகமாகிறது. வால்யூமுடன்கூடிய ஏற்றம் தொடரும் பட்சத்தில் 783 என்ற லெவல் வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.

இறக்கம் வந்தால், 735 மற்றும் 705 என்ற லெவல்களில் மட்டுமே சப்போர்ட் கிடைக்க வாய்ப்பிருப்பதால், மிக அதிக அளவில் ரிஸ்க் எடுக்கும் டிரேடர்கள் மட்டுமே இந்தப் பங்கில் வர்த்தகம் செய்வது குறித்து பரிசீலிக்கலாம். அவர்களும்கூட 751 என்ற லெவலை ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸாகக் கொள்ள வேண்டியிருக்கும்.

Divi’s Laboratories Limited (NSE Symbol: DIVISLAB)

08.09.2022 விலை: ரூ.3,568.80

வாங்கலாம்

எம்.ஏ.சி.டி (12,26) - 45.61 என்ற அளவிலும் 41.26 என்ற அளவில் ஆர்.எஸ்.ஐ-யும் கொண்டிருந்தது இந்தப் பங்கு. சமீபத்தில் நல்லதொரு இறக்கத்தைச் சந்தித்து மீண்டிருக்கும் இந்தப் பங்கானது மீண்டும் இறங்கி 3450 என்ற லெவலைத் தொட்டுவிட்டு பின்னர், வால்யூமுடன்கூடிய ஏற்றத்தைச் சந்திக்கும்பட்சத்தில் 3625 மற்றும் 3640 வரை சென்று திரும்பவாய்ப்புள்ளது. சராசரியாக நடக்கும் வால்யூமைவிட இருமடங்கு அதிக வால்யூமுடன் ஏறினால் மட்டுமே இது சாத்தியம் என்பதால், டிரேடர்கள் வால்யூமின் மீது தொடர்ந்து கண் வைத்துக்கொண்டேயிருக்க வேண்டும். இந்தப் பங்கு ஹைரிஸ்க் எடுக்கும் திறன்கொண்ட டிரேடர்களுக்கு மட்டுமே வியாபாரம் செய்வதற்கு தோதான ஒன்று என்பதை நினைவில்கொண்டு செயல்பட வேண்டும். 3503 என்ற லெவலை ஸ்ட்ரிக்ட் டான ஸ்டாப்லாஸாகக் கொண்டே ஹைரிஸ்க் டிரேடர்கள் இந்தப் பங்கை டிராக் செய்யலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

Railtel Corporation Of India Limited (NSE Symbol: RAILTEL)

08.09.2022 விலை: ரூ.106.50

வாங்கலாம்

எம்.ஏ.சி.டி (12,26) 1.22 என்ற அளவிலும் டைவர்ஜன்ஸ் 0.44 என்ற அளவிலும், கமா டிட்டி சேனல் இண்டெக்ஸ் (14) 94.61 என்ற அளவிலும் இருக்கிறது. 90 மற்றும் 100 என்ற எல்லைக்குள் சிக்கிக் கொண்ட தோற்றத்தை சமீபகாலத்தில் தந்த இந்தப் பங்கின் டெக்னிக்கல்கள் தற்போது ஏற்றத்துக்கான வாய்ப்பு இருப்பதைப் போன்ற சூழல் உருவாகியிருப் பதைக் காட்டுகின்றன.

இதுபோன்ற சூழலில் வால்யூமுடன்கூடிய ஏற்றமே டிரெண்டை உறுதி செய்யும் என்பதால், ஹைரிஸ்க் எடுக்கும் திறன் கொண்ட டிரேடர்கள் மட்டும் சராசரி யாக நடக்கும் வால்யூமின் மீது கண் வைத்து இந்தப் பங்கில் டிரேடிங் செய்வது குறித்து பரிசீலனை செய்யலாம். 100 என்ற லெவலைத் தாண்டி இறங்கினால், 97 என்ற லெவலிலேயே சிறிய சப்போர்ட் இருப்பதால், 100 என்ற லெவலையே ஸ்டிரிக்ட்டான ஸ்டாப் லாஸாகக் கொண்டு ஹைரிஸ்க் எடுக்கும் டிரேடர்கள் வர்த்தகம் செய்ய பரிசீலிக்கலாம்.

எச்சரிக்கை: வாராந்தர அளவில் டெக்னிக்கல் அனாலிசிஸை உபயோகித்து டிரேடிங் செய்யும் டிரேடர்களுக்கான பகுதி இது. பங்குகளில் டிரேடிங் செய்வது என்பது மிக அதிக அளவிலான பண ரீதியான ரிஸ்க்கைக் கொண்ட ஒரு விஷயமாகும். வாசகர்கள் வர்த்தகம் செய்வதற்குமுன் செபி பதிவு பெற்ற இன்வெஸ்ட்மென்ட் அட்வைஸரிடம் கலந்தாலோசித்தபின் வர்த்தகம் செய்ய வேண்டும். சரியான வாய்ப்பு களுக்காகக் காத்திருந்து அந்த வாய்ப்புகள் கிடைக்கும்போது குறைந்த எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் மட்டுமே டிரேடிங் செய்ய வேண்டும்.

Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters and the data is compiled by Dr S Karthikeyan (an Independent Research Analyst herein after referred as ‘Research Analyst’). Dr S Karthikeyan is a SEBI registered Research Analyst under the SEBI (Research Analysts) Regulations, 2014 with registration number INH200001384.

Analyst Certification and Disclosures under the provisions of SEBI (Research Analysts) Regulations 2014 Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exist no conflict of interest that can bias his views in this report. The Analyst do not hold any share(s) in the company/ies discussed.

General terms and conditions of the research report For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.

One year Price history of the daily closing price of the securities covered in this section is available at http://www.nseindia.com/products/content/equities/equities/eq_security.htm (Choose the respective symbol) /name of company/time duration)